Advertisment

ஒரே நாடு; ஒரே உரம் திட்டம்: சாதக, பாதகங்கள் என்ன?

பிரதான்மந்திர பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா என்ற உர மானியத் திட்டத்தைக் குறிக்கும் லோகோ அந்த உரப் பைகளில் பயன்படுத்தப்படும்.

author-image
WebDesk
Aug 26, 2022 10:47 IST
New Update
one nation one fertilizer scheme

one nation one fertilizer scheme

“பிரதான்மந்திரி பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா” (PMBJP) என்ற உர மானியத் திட்டத்தின் கீழ் "உரங்கள் மற்றும் லோகோவுக்கான ஒற்றை பிராண்ட்" அறிமுகப்படுத்தி ஒரு நாடு ஒரே உரத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்தது.

Advertisment

அதன்படி யூரியா, பாஸ்பேட் பொட்டாஷ், என்பிகே போன்றவற்றிற்கான ஒற்றை பிராண்ட் பெயர் முறையே பாரத் யூரியா, பாரத் பாஸ்பேட், பாரத் பொட்டாஷ், பாரத் என்பிகே என்று அனைத்து உர நிறுவனங்கள், மாநில வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உர சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படும் என்று அலவலக குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “பிரதான்மந்திர பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா என்ற உர மானியத் திட்டத்தைக் குறிக்கும் லோகோ அந்த உரப் பைகளில் பயன்படுத்தப்படும்”.

புதிய “ஒரே தேசம் ஒரு உரம்” திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், லோகோ மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்பு தகவல்களை தங்கள் பைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு இடத்தில், “பாரத்” பிராண்ட் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா லோகோ காட்டப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசின் வாதம் என்ன?

நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படும் அனைத்து மானிய உரங்களுக்கும் ஒரே ‘பாரத்’ முத்திரையை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தர்க்கம் பின்வருமாறு:

(1) யூரியாவின் அதிகபட்ச சில்லறை விலை தற்போது அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது நிறுவனங்களுக்கு ஏற்படும் அதிக உற்பத்தி செலவு அல்லது இறக்குமதிக்கு ஈடுசெய்கிறது. யூரியா அல்லாத உரங்களின் அதிகபட்ச விலை, காகிதத்தில், கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், அரசாங்கத்தால் முறைசாரா முறையில் குறிப்பிடப்பட்டதை விட அதிக விலையில் விற்பனை செய்தால் நிறுவனங்கள் மானியத்தைப் பெற முடியாது. எளிமையாகச் சொன்னால், சுமார் 26 உரங்கள் (யூரியா உட்பட) உள்ளன, இவற்றுக்கு அரசு மானியம் வழங்குகிறது மற்றும் அதிகபட்ச சில்லறை விலைகளை திறம்பட தீர்மானிக்கிறது;

(2) மானியம் மற்றும் நிறுவனங்கள் என்ன விலையில் விற்கலாம் என்பதை முடிவு செய்வதைத் தவிர, அவர்கள் எங்கு விற்கலாம் என்பதையும் அரசாங்கம் தீர்மானிக்கிறது. இது உர (இயக்கம்) கட்டுப்பாட்டு ஆணை, 1973 மூலம் செய்யப்படுகிறது. இதன் கீழ், உரத் துறையானது, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து மானிய உரங்களுக்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட மாதாந்திர விநியோகத் திட்டத்தை வரைகிறது.

இந்த விநியோகத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்கு முன் வெளியிடப்படுகிறது. மேலும் தொலைதூரப் பகுதிகள் உட்பட, தேவைக்கேற்ப உரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இத்துறை தொடர்ந்து இயக்கத்தைக் கண்காணித்து வருகிறது.

(3) உர மானியத்திற்காக அரசாங்கம் பெரும் தொகையைச் செலவழிக்கும் போது (2022-23ல் பில் ரூ. 200,000 கோடியைத் தாண்டக்கூடும்), மேலும் நிறுவனங்கள் எங்கு, எந்த விலையில் விற்கலாம் என்பதைத் தீர்மானிப்பதுடன், அது விவசாயிகளுக்கு அந்த செய்தியை அனுப்ப வேண்டும்.

திட்டத்தின் குறைபாடுகள் என்னவாக இருக்கலாம்?

இரண்டு சிக்கல்கள் உடனடியாகத் தெரியும்:

(1) எந்தவொரு நிறுவனத்தின் பலமும் அதன் பிராண்டுகள் மற்றும் பல தசாப்தங்களாக கட்டப்பட்ட விவசாயியின் நம்பிக்கை ஆகும். ஆனால், இது உர நிறுவனங்களை சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்ட் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடுக்கும். அவர்கள் இப்போது அரசாங்கத்திற்கான ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களாக குறைக்கப்படுவார்கள்.

(2) தற்போது, ​​எந்த ஒரு பை அல்லது தொகுதி உரங்கள் தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றால், நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இப்போது, ​​அது முழுமையாக அரசாங்கத்தையே சேரும். அரசியல் ரீதியாக, இந்த திட்டம் ஆளும் கட்சிக்கு நன்மை செய்வதை விட பூமராங் ஆகலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment