Explained: Out of favour with Army and allies, why Imran Khan’s future as PM looks uncertain: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் நீடிப்பது நிச்சயமற்றதாகத் தெரிகிறது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) (PLM(N)); ஆசிப் அலி ஜராத்ரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP); மற்றும் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானின் ஜமாத் உலமா-இஸ்லாம் (எஃப்) ஆகிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூட்டாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியிலும் பலர் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர், மேலும் அவரது கூட்டணிக் கட்சியினர் அவருக்கு ஆதரவளிப்பதில் இருவேறு கருத்துக்களில் உள்ளனர்.
இராணுவத்துடனான மோதல்
இம்ரான் கானின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, ஏனெனில் அவரும் பாகிஸ்தான் ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது 2018 தேர்தலுக்குப் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு, இம்ரான் கானின் பெருமை என்னவென்றால், அவரது அரசாங்கம், முந்தைய சிவில் அரசாங்கங்களைப் போலல்லாமல், இராணுவத்துடன் ஒத்துழைத்து செயல்பட்டது, எனவே இம்ரானின் அரசாங்கம் நிலையாக இருந்தது மற்றும் அவரால் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடிந்தது. PPP மற்றும் PLM(N) கூட்டணியால் ஏற்பட்ட சிக்கலால், இம்ரான் கானின் தேர்தல் வெற்றிக்காக அல்லது தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இராணுவம் மற்றும் உளவுத்துறை (ISI) கூடுதல் நேரம் வேலை செய்தது, இதனால் கட்சி பேதமின்றி தங்கள் சொந்த முயற்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் PTI கட்சிக்கு ஆதரவளித்தனர்.
342 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் இம்ரான் கானின் PTI கட்சி 155 இடங்களை வென்றது, மேலும் கூட்டணி கட்சிகளான MQM, முஷாரஃப் கால PML(Q), பலுசிஸ்தான் அவாம் கட்சி என்று அழைக்கப்படும் புதிய பலுசிஸ்தான் குழு மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் 176 இடங்களை வென்றது. தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மற்ற இரண்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளித்தன.
இந்த ஏற்பாட்டை ராணுவம் இணைந்து நடத்தியது. முஷாரப்பிற்குப் பிந்தைய காலத்தில் PPP மற்றும் PML(N) தலைமையிலான பிற சிவில் அரசாங்கங்களைப் போலல்லாமல், PTI க்கு இராணுவத்திடம் இருந்து அரசாங்கத்தின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிப்படுத்த எந்த குறிப்பிட்ட விருப்பமும் இல்லை. கொரோனா நெருக்கடியைக் கையாள்வதில் இருந்து அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தைகள் வரை, தேசிய நிர்வாகம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ராணுவம் ஆற்றி வரும் பங்கில் பிரதமருக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குள், அரசாங்கத்தின் புகழ் குறைந்ததால், "இந்த ராணுவக் கூட்டணி" ஏற்பாடு செயலிழக்கத் தொடங்கியது. ஊழலை களையெடுப்பதாக கூறிய PTI இன் வாக்குறுதியைக் கடைப்பிடிப்பதில் ஆர்வத்துடன், நிர்வாகத்தில் சிறிதளவு நிபுணத்துவம் இல்லாமல், இம்ரான் கான் பொருளாதார சிக்கலில் தத்தளித்தார். கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 2019 இல் பெற்ற பிணை எடுப்பில் இருந்து $1 பில்லியனை விடுவித்தது. மொத்த அளவான $6 பில்லியனில், பாகிஸ்தான் இப்போது அந்தத் தொகையில் பாதியைப் பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகமாகவே உள்ளன.
மியான்மர் போன்ற மற்ற 'ராணுவ கூட்டணி' ஏற்பாடுகளைப் போலல்லாமல், பாகிஸ்தான் ராணுவம் பிரபலமடைய ஏங்குகிறது. இராணுவத்திற்குள், இம்ரான் கானை ஆதரிப்பதில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
ராணுவத்துடனான சிக்கல்கள்
அரசு-இராணுவத்திற்கு இடையேயான மோதலுக்கான முதல் காரணம் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் 2019 ஆம் ஆண்டு பதவி நீட்டிப்பு ஆகும், இது அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது, இது போன்ற நீட்டிப்புகளுக்கான அடிப்படையை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது மற்றும் அதை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க உத்தரவிட்டது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மூன்று பெரிய எதிர்க்கட்சிகளான PML(N), PPP மற்றும் JuI(F) ஆகியவை ஒன்று கூடி, இம்ரான் கானின் நிர்வாகத் தோல்விகள் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இம்ரானும் ராணுவமும் இந்தியாவிற்கு "விற்பனை" செய்ததைக் குறிவைத்து பெரிய பேரணிகளை நடத்தினர். PML(N) தலைவர்கள் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் பாஜ்வாவைக் கண்டித்துள்ளனர். ஆனால் அரசாங்கமோ அல்லது இராணுவமோ இதை கண்டுக் கொள்ளவில்லை, இம்ரான் தனது பதவிக் காலத்தை முடிக்கத் தயாராக இருப்பது உறுதியாகிவிட்டது.
கடைசியில் இம்ரானுக்கு கிடைத்தது நாயை அசைக்க முயற்சிக்கும் வால் தான். கடந்த ஆண்டு, பாஜ்வா தனது உயர்மட்ட ஜெனரல்களை தொடர்ச்சியான இடமாற்றங்களுக்கு உத்தரவிட்டதால், பெஷாவரில் XI கார்ப்ஸ் தலைவராக மாற்றப்பட்ட பின்னர் ஐஎஸ்ஐ தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத்திடம் இம்ரான் கான் தொங்க முயன்றார்.
ஒரு காலத்தில், ஹமீத் அடுத்த இராணுவத் தளபதியாக இருப்பார் என்றும், 2022 இல் ஜெனரல் பஜ்வா ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக ஹமீத்க்கு கார்ப்ஸ் கமாண்ட் பதவி உயர்வானது, உயர் பதவிக்கான தகுதித் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கருதப்படுகிறது.
ஆனால் ஹமீத் இராணுவத்தின் நிறுவனப் பொறுப்பாக மாறினார். அவர் ஜெனரல் பாஜ்வாவின் செல்லப்பிள்ளையாக சில மாதங்களுக்கு முன்பு இருந்தபோதிலும், தலிபான் கையகப்படுத்தப்பட்ட பிறகு காபூலில் அவர் வெளிப்படையாக தோன்றியது உட்பட பல சர்ச்சைகள் அவருக்கு எதிராக இருந்தது.
புதிய ஐஎஸ்ஐ தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சூம் நியமனத்தில் கையெழுத்திட இம்ரான் கான் மூன்று வாரங்களாக மறுத்ததால், பிரதமரும் ஹமீதும் ஒருவரையொருவர் தங்களின் அந்தந்த லட்சியங்களுக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாக பார்க்க கூடும் என்ற அச்சத்தை இராணுவத்தில் எழுப்பியது. ஹமீத் பிரதம மந்திரியின் உதவியுடன் இராணுவ தலைமையை ஏற்றால், ஹமீதின் உதவியுடன் இம்ரான் கான் 2023 இல் மீண்டும் வெற்றி பெறலாம்.
இதையும் படியுங்கள்: மொத்த டீசல் விலை உயர்வும், அதன் தாக்கங்களும்
ஒரு அமைப்பாக, அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட உறவுகளை உருவாக்க அணிகளை உடைக்கும் தளபதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சந்தேகம் கொள்கிறது. இறுதியாக அஞ்சூமின் நியமனத்திற்கான அறிவிப்பில் பிரதமர் கையெழுத்திட்ட போதிலும், இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
இம்ரான் கானை பதவி நீக்கம் செய்வதற்கான மற்றொரு முயற்சிக்கான வாய்ப்பாக எதிர்க்கட்சிகள் இதைக் கருதின. இம்முறை இராணுவம் அவருக்கு ஆதரவளிக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர்கள் மார்ச் 14 அன்று சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தனர்.
ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதியாக, இம்ரான் கான் ஒருமுறை நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய "நடுநிலை நடுவரான" இராணுவத்திடம் முறையிட்டார். இந்த நேரத்தில், இராணுவம் நடுநிலை என்று அறிவித்த போது, இம்ரான் அதை வசைபாடினார், "மிருகங்கள் மட்டுமே நடுநிலையானவை" என்று கூறினார்.
கட்சியில் அதிருப்தியாளர்கள்
இம்ரான் கானுக்கு இப்போது பெரும்பான்மைக்கு 12-24 எம்என்ஏக்கள் (தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்) குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், சில இம்ரான் கானின் விசுவாசிகள் கட்சியின் அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள, இஸ்லாமாபாத்தில் உள்ள சிந்து மாகாணத்தின் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
தேசிய சட்டமன்றத்திற்கு வெளியேயும் தனது கட்சி, பலத்தை வெளிப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். இதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த பலத்தை அதே இடத்தில் காட்டுவதாக அறிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 27 அன்று திட்டமிடப்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் பெரிய அளவிலான வன்முறை மற்றும் இரத்தக்களரி பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளன.
மார்ச் 19 அன்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், "அராஜகத்தை" தடுக்க தலையிடுமாறும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசியல் சாசனத்தின்படி செயல்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிடுமாறும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
திங்களன்று, ஜனாதிபதியின் குறிப்பு மூலம், பாகிஸ்தான் அரசியலமைப்பின் 63-A பிரிவுக்கு விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றத்திடம் அரசாங்கம் கேட்டது, இந்த விதியின் கீழ் அதிருப்தி எம்என்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம். மேலும் "ஜனநாயக அமைப்பைத் தூய்மைப்படுத்த" ஒரு "முற்காப்பு" நடவடிக்கையாக, இந்த விதியை அதிருப்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எம்என்ஏக்களுக்கு முன்கூட்டியே பயன்படுத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறும் நீதிமன்றத்திடம் அரசாங்கம் கேட்டது. இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் 5 பேர் கொண்ட அமர்வு ஒன்றை அமைத்துள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 24ம் தேதி நடைபெறும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சபாநாயகர் அசாத் கைசர் மார்ச் 22ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டியிருக்க வேண்டும். அவர் அமர்வைக் கூட்டுவதில் இழுத்தடிப்பதாகக் காணப்பட்டது. இந்த அத்துமீறலை கவனத்தில் கொள்ளுமாறு எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. ஆனால் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கு அவர்களால் கோரப்பட்டுள்ளதால், மார்ச் 22-23 தேதிகளில் சட்டமன்ற வளாகம் கிடைக்காததைக் காரணம் காட்டி, சபாநாயகர் இப்போது கூட்டத்தொடரை மார்ச் 25 அன்று கூட்டியுள்ளார். சட்டசபை கூட்டப்பட்ட மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடக்க வேண்டும்.
இம்ரான் கான் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள உச்சநீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நெருக்கடியில் அவரோ அல்லது வேறு சில பங்குதாரின் அசாதாரண தலையீடு இல்லாமல், நம்பிக்கை வாக்கெடுப்பு முதலில் வர வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.