இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 100 லட்சம் கோடிக்கு 'முழுமையான உள்கட்டமைப்பை' மேம்படுத்துவதற்கான ‘பிஎம் கதி சக்தி மாஸ்டர் பிளான்’, எனும் திட்டத்தை அறிவித்தார்.
கதி சக்தி மாஸ்டர் பிளான் என்றால் என்ன?
பிரதமர் மோடி தனது உரையில், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக இந்த திட்டத்தை முன்னெடுத்தார்.
"வரவிருக்கும் நாட்களில், பிரதமர் கதி சக்தி திட்டத்தை நாங்கள் தொடங்குவோம், இது 100 லட்சம் கோடியில் தேசிய உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானாகும், இது முழுமையான உள்கட்டமைப்பிற்கு அடித்தளத்தை உருவாக்கி நமது பொருளாதாரத்திற்கு ஒருங்கிணைந்த பாதையை அளிக்கும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை?
கதி சக்தி திட்டம், உள்ளூர் உற்பத்தியாளர்களின் உலகளாவிய வர்த்தகத்தை உயர்த்தவும், உலகளவில் தங்கள் சகாக்களுடன் போட்டியிடவும் உதவும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த திட்டம் புதிய எதிர்கால பொருளாதார மண்டலங்களின் சாத்தியக்கூறுகளையும் எழுப்புகிறது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரண்டையும் இந்தியா அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவிலிருந்து உலகளவில் விற்கப்படும் ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் உங்களின் ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடர் என்று நான் சொல்கிறேன், என்றார்.
மேலும் விவரங்கள் மற்றும் திட்டத்தின் தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பிரதமரின் மற்ற முக்கிய அறிவிப்புகளில் தேசிய ஹைட்ரஜன் மிஷன் தொடங்குவது மற்றும் பெண்களுக்கான சைனிக் பள்ளிகளைத் திறப்பது ஆகியவை அடங்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil