Explained: What is Russia’s new nuclear missile Sarmat, capable of striking ‘anywhere in the world’?: நடந்துகொண்டிருக்கும் போரில் உக்ரைனின் கடுமையான எதிர்ப்பு மற்றும் மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளுக்கு மத்தியில், ரஷ்யா முன்னோக்கி சென்று அதன் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான (ICBM) சர்மட்-ஐ புதன்கிழமை சோதனை செய்துள்ளது. இந்த சோதனையானது ரஷ்யாவின் எதிரிகளை “ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசிக்க” செய்யும் என்று ரஷ்ய அதிபர் கூறினார். இந்த ஏவுகணை என்ன திறன் கொண்டது மற்றும் ரஷ்யாவின் எதிரிகளுக்கு அச்சுறுத்தல் என்ன?
இது புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் முதல் சோதனையா?
2021 இல் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு ICBM Sarmat இன் முதல் சோதனை வெளியீடு இதுவாகும். பொதுமக்களுக்குத் தெரிய கூடாத காரணங்களுக்காக, ஏவுகணைச் சோதனை டிசம்பர் 2021 க்கும் பின்னர் ஏப்ரல் 2022 க்கும் நடத்தப்பட்டது. புதன்கிழமை, இந்த சோதனை வடமேற்கில் உள்ள Plesetsk இல் தொடங்கப்பட்டது. ரஷ்யா கிட்டத்தட்ட 6,000 கிமீ தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இலக்கு வைத்தது. ரஷ்ய செய்தி அறிக்கைகளின்படி, ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு 2022 இல் குறைந்தது ஐந்து ஏவுதல் சோதனைகளைக் கொண்டிருக்கும். உண்மையான ஏவுகணைக்கு முன்னதாக, ஒரு போலி ஏவுகணை சோதனையும் நடந்தது. கணினி உருவகப்படுத்தப்பட்ட ஏவுகணை ஏவுதல்கள் பல முறை செய்யப்பட்டன, அவற்றில் சில பொதுவெளியில் பகிரப்பட்டன.
ரஷ்யா இந்த ஏவுகணையை உருவாக்குவது வெளி உலகுக்கு தெரிய வந்ததா?
ரஷ்யா தனது பழைய ஐசிபிஎம்மை மாற்றுவதற்காக புதிய ஐசிபிஎம்மை உருவாக்கி வருகிறது என்பது பரவலாக வெளி உலகுக்கு தெரிய வந்தது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புதின் 2018 இல் ரஷ்ய நாடாளுமன்றத்தில் தேசத்திற்கான உரையை ஆற்றியபோது வெளியிட்டார்.
சர்மட் ஐசிபிஎம் கொண்ட முழுமையாக ஆயுதம் ஏந்திய முதல் படைப்பிரிவு 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படும் என்று அவர் அப்போது கூறியிருந்தார். புதினின் அறிவிப்புக்கு முன்பே, ரஷ்யா ஒரு புதிய ஐசிபிஎம்மை உருவாக்கி வருவதாகவும், சாத்தியமான வடிவமைப்பின் புகைப்படங்கள் 2016 இல் வெளி வந்ததாகவும் செய்திகள் வந்தன. உண்மையான ஏவுகணை தயாரிப்பு அட்டவணை 2009 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் மோசமடைந்து வரும் உறவுகள் ஏவுகணை தயாரிப்பு திட்டத்திற்கு உத்வேகம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
மற்ற ரஷ்ய ஐசிபிஎம்களை விட இது எவ்வாறு மேம்பட்டது?
RS-28 Sarmat (நேட்டோ Satan-II எனப் பெயரிட்டுள்ளது) பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் சிதைவுச் சாதனங்களைச் சுமந்து செல்லக்கூடியது மற்றும் 11,000 முதல் 18,000 கிமீ தூரம் வரை பூமியின் எந்த துருவத்திலும் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் தரை மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான ரேடார் கண்காணிப்பு அமைப்புகளுக்கு இந்த ஏவுகணை ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய நாடுகள் எவை? தொடர்ந்து வாங்கும் நாடுகள் எவை?
பத்து வெடிகுண்டுகளும் வெவ்வேறு இலக்குகளை தன்னிச்சையாக தாக்கும் வகையிலும், அவை தானாக ஏவுதலுக்கு தயாராகும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் .75 MT வெடிப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. சிறிய ஹைப்பர்சோனிக் அதிவேக வாகனங்களைச் சுமந்து செல்லும் முதல் ரஷ்ய ஏவுகணை சர்மத் ஆகும். இவை சூழ்ச்சி செய்யக்கூடியவை மற்றும் இடைமறிப்பது கடினம். மேம்படுத்தப்பட்ட மின்னணு எதிர் நடவடிக்கைகள், வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் மாற்று வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் ஆகியவை RS-28 Sarmat ICBM ஐ ரஷ்யாவில் தற்போது சேவையில் உள்ள R-36M Voyevoda ICBM களை விட (நேட்டோ பெயர் சாத்தான்) மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது.
சில அறிக்கைகள் Sarmat ICBM இன் உயரமும் எடையும் பழையதைப் போலவே இருந்தாலும், அது அதிக வேகம் மற்றும் அதிக வீசுதல் தன்மையைக் கொண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க ஐசிபிஎம்களுடன் ஒப்பிடும்போது சர்மட் ஒரு திரவ எரிபொருள் ஏவுகணையாகும், அமெரிக்க திட எரிபொருள் அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. வெவ்வேறு எரிபொருள் அமைப்பைப் பொருட்படுத்தவில்லை என்றால், சர்மட் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும்.
ஏவுகணை யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது?
செய்தி நிறுவனமான TASS இன் அறிக்கையின்படி, இடைக்காலத்தின் தொடக்கத்தில் இன்றைய தெற்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும் கஜகஸ்தான் ஆகியவற்றின் புல்வெளிகளில் சுற்றித் திரிந்த நாடோடி பழங்குடியினரின் நினைவாக சர்மட் பெயரிடப்பட்டது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின்படி: “சர்மாத்தியர்கள் குதிரையேற்றத்திலும் போரிலும் மிகவும் வளர்ந்தவர்கள்.” சர்மாத்தியர்களின் நிர்வாகத் திறன்கள் மற்றும் அரசியல் நிபுணத்துவம் அவர்கள் பரவலான செல்வாக்கைப் பெறுவதற்கு பங்களித்தது மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் அவர்கள் யூரல்ஸ் மற்றும் டான் நதிக்கு இடையில் நிலத்தின் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் என்று அது கூறுகிறது. மேலும், “4 ஆம் நூற்றாண்டில் அவர்கள் டானைக் கடந்து சித்தியர்களைக் கைப்பற்றினர், 2 ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட தெற்கு ரஷ்யாவின் அனைத்து பகுதிகளையும் ஆட்சி புரிந்தவர்களாக மாறினர்,” என்றும் பிரிட்டானிகா கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil