இந்தியாவின் ஜிடிபி 2ஆம் காலாண்டில் 8.1 ஆக வளர்ச்சியடையும்; எஸ்பிஐ கணிப்பு

Explained: Why SBI projects India’s GDP to grow by 8.1% in Q2 this year: இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.1 சதவீதமாக வளர்ச்சியடையும் என எஸ்பிஐ கணிப்பு; காரணம் என்ன?

செப்டம்பர் 2021 உடன் முடிவடையும் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 சதவீதமாக உயரும் என்று பாரத ஸ்டேட் வங்கி கணித்துள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு 9.3-9.6 சதவீதமாகத் திருத்தப்பட்டுள்ளது.

அறிக்கை சொல்வது என்ன?

திங்களன்று SBI ஆல் வெளியிடப்பட்ட அறிக்கையானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது Q2 FY’22 இல் 8.1 சதவீதமாக (மேல்நோக்கிய சார்புடன்) விரிவடையும் என்று கூறுகிறது. மேலும் எஸ்பிஐ இந்த ஆண்டிற்கான அதன் GDP முன்னறிவிப்பை, அதன் முந்தைய மதிப்பீட்டான 8.5-ல் இருந்து 9.3-9.6 சதவீதமாகத் திருத்தியுள்ளது.

எஸ்பிஐயின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தயாரித்த அறிக்கையில், 2019-20ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.145.69 லட்சம் கோடியை விட இந்தியாவின் உண்மையான ஜிடிபி ரூ.2.4 லட்சம் கோடி அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள்தொகையில் பெரும் சதவீதத்தினர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ள நிலையில், “பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கும்” என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஜிடிபி கணிப்பு மதிப்பீடான 9.5 சதவீதத்துடன் எஸ்பிஐயின் இந்த ஆண்டிற்கான ஜிடிபி கணிப்பு ஒரே அளவில் உள்ளது.

மேல்நோக்கிய திருத்தத்திற்கான காரணம் என்ன?

அறிக்கையின்படி, மேல்நோக்கிய திருத்தமானது, மூன்றாம் காலாண்டில் ஒப்பீட்டளவில் குறைவான இடையூறு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பிக்-அப் ஆகியவற்றின் காரணமான உயர்வாகும். இது கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலைகளை எட்டியதாக அறிக்கை கூறுகிறது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விநியோக இடையூறுகள், பணவீக்கம் மற்றும் தொற்றுநோய்களின் அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சூழ்நிலையில் இருந்து இந்தியா Q3 இல் பாதிப்படையவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

“இந்தியாவில் 3வது காலாண்டில் 11 சதவீத அளவிற்கு மட்டுமே கொரோனா பாதிப்புகள் அதிகரித்தது, இது மிகவும் பாதிக்கப்பட்ட முதல் 15 நாடுகளில் இரண்டாவது மிகக் குறைவு. மேலும், கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஜூன் 2020 முதல் 1.24 லட்சமாக குறைந்தது மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி கவரேஜ் 1.15 பில்லியனைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், பொருளாதார செயல்பாடு வேகம் பெற்று, கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை எட்டியுள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய வளர்ச்சியுடன் ஒப்பிடுவது எப்படி?

அறிக்கையின்படி, பல முன்னணி நாடுகளில் உள்ள வளர்ச்சியானது கொரோனா நோய்த்தொற்றுகளின் மறு எழுச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் விநியோக பற்றாக்குறை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளால் குறைந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 12.2% ஆக இருந்த அமெரிக்காவின் GDP வளர்ச்சியானது Q3 இல் 4.9% (y-o-y) ஆகக் குறைந்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, Q3 இல் வளர்ச்சி வேகம் அதன் வேகத்தை இழந்தது மற்றும் தொழிற்சாலை செயல்பாடுகள் பல சிக்கல்களுக்கு மத்தியில் பெரும் பாதிப்பை சந்தித்ததால், பொருளாதாரம் Q2 இல் 7.9% விட 4.9% (yoy) ஆக குறைந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பொருளாதாரங்களின் சராசரி GDP வளர்ச்சி Q2 இல் 12.1% ஆக இருந்து Q3 இல் 4.5% ஆகக் குறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Explained sbi india gdp growth q2 2021

Next Story
சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து!Loksabha election results 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com