தற்போதைய சூழலில் வைப்பு நிதியில் முதலீடு செய்வது நல்லதா?

அதிக அளவு நெட் வொர்த் கொண்ட தனி நபர்கள் பல்வகைப்படுத்தல் யுத்திக்காக எஃப்.டியில் முதலீடு செய்யலாம்.

By: Updated: September 25, 2020, 02:32:19 PM

Sandeep Singh 

Explained: Should you invest in fixed deposits with banks? : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மத்திய வங்கிகள், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவை சரிசெய்யும் பொருட்டு பணக் கொள்கைகளை மாற்றி வருகிறது. அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிதி சந்தைகள் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தை தூண்டும் வகையில், ஃபெடெரல் ரிசர்வ் வங்கி கடந்த வாரம், வட்டி விகிதங்களை 2023ம் ஆண்டு வரை பூஜ்ஜியத்திற்கு அருகேயே வைப்பதற்கான திட்டம் குறித்து முடிவெடுத்துள்ளது.

அதிக பணவீக்கம் மற்றும் குறைந்துவரும் வட்டி விகிதங்களின் சூழ்நிலையில், வங்கிகளுடனான நிலையான வைப்புத்தொகை திட்டத்தை (எஃப்.டி) ஒரு முதலீட்டாளரின் சொத்து ஒதுக்கீட்டில் பேக்சீட்டை எடுக்க வேண்டும், குறிப்பாக அதிக அளவு மார்ஜினல் டாக்ஸ் பிராக்கெட் கொண்டவர்கள்.

நிலையான வைப்பு நிதியை நீங்கள் எப்படி காணவேண்டும்?

1995ம் ஆண்டில், எஸ்.பி.ஐ. வங்கி, 3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிக்கு 13% வட்டியை தந்தது. இது மிகவும் கவர்ச்சிகரமான சலுகையாகும். அன்றைய சூழலில் வருமானமும் குறைவு, மேலும் குறைவான வரி அடைப்புக்குள் மக்கள் வந்ததனர் என்பதால் இரண்டு இலக்கங்களில் ரிட்டர்ன்கள் கிடைத்தது. நிலையான வைப்புத் தொகை என்பது குறைவான அபாயங்களையும், அதிக அளவு வட்டியை ஈட்டித் தரும் முதலீடாக இருந்தது. ஆனால் அதன் பிறகு எஃப்.டி. வெகுவாக மாறியுள்ளது.  ஆன்லைன் இலக்கை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு தளமான ஹேப்பினஸ் ஃபேக்டரி நிறுவனர் அமர் பண்டிட், “நிலையான வைப்பு நிதிகள் என்பது வெறுமனே வங்கிகளுக்கு குறைந்த கட்டணங்களில் வழங்கப்படும் கடன்கள், அவற்றை முதலீட்டுக்கான இடமாக பார்க்கக்கூடாது” என்றார்.

நிலையான வைப்பு நிதி அதிக அளவு வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டினை தருவதில்லை, குறிப்பாக அதிக அளவு வரி அடைப்பு உடையவர்களுக்கு என்பதை ஒரு சிறிய கணக்கே உறுதிப்படுத்திவிடுகிறது. ஆனாலும் சில பழைய முதலீட்டாளர்கள் எஃப்.டியில் பணம் முதலீடு செய்கிறார்கள். ஆனாலும், கடந்த சில வருடங்களில், ஆர்.பி.ஐ முதலீட்டை திரும்ப பெறுவதற்கு ஒரு தடையை விதித்ததில் இருந்து முதலீட்டார்கள் தங்களின் முதலீடுகள் முதலில் பி.எம்.சி., அடுத்ததாக எஸ். வங்கிகளில் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு வருகிறார்கள். எஃப்.டி முதிர்வு கொடுப்பனவுகளில் இயல்புநிலை ஏற்பட்டால், அவர்களின் வைப்புக் காப்பீடு ரூ .5 லட்சம் வரை மட்டுமே செலுத்தப்படும் என்பதையும் முதலீட்டாளர்களுக்கு நினைவுப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க : தங்கத்தில் இப்போது நீங்கள் முதலீடு செய்யலாமா?

உண்மையில், எஃப்.டி.க்கள் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டதை போன்றே இனியும் சேவை செய்யாது. “எந்தவொரு முதலீட்டின் நோக்கமும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சொத்துக்களின் மதிப்பை வளர்ப்பதாகும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வட்டி விகிதங்கள் மற்றும் அதிக பணவீக்கத்துடன் – மற்றும் அதிக வரி அடைப்பில் விழுந்த ஒருவருக்கு, அது அதிகம் உதவாது என்று பண்டிட் கூறினார். “பணப்புழக்கத்திற்காக, தனிநபர்கள் பணத்தை நிலையான வைப்புகளில் வைத்திருக்கலாம்.” ஆனால் வரி கட்ட தேவை இல்லாதவர்கள் மற்றும் குறைவான வரி அடைப்பிற்குள் வரும் நபர்கள், எஃப்.டியை குறித்து யோசிக்கலாம். 5% வரை வரிக்கு பிந்தைய வருமானத்தை அது வழங்கும். அதிக அளவு நெட் வொர்த் கொண்ட தனி நபர்கள் பல்வகைப்படுத்தல் யுத்திக்காக எஃப்.டியில் முதலீடு செய்யலாம்.

To read this article in English

நிலையான வைப்பு நிதிகள் பண வீக்கத்திற்கு எதிராக நமக்கு பாதுகாப்பு அளிக்கிறதா?

எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையும் உங்களின் பணத்தினை மேலும் பெருக்கவே வழி வகை செய்ய வேண்டும். எனவே ஒருவர் தன்னுடைய பணத்தை எஃப்.டியில் முதலீடு செய்வதற்கு முன்பு, முதலீடு செய்வது உண்மையாகவே வளர்ச்சிக்கு உதவுமா என்று சிந்திக்க வேண்டும்.

நிலையற்ற தன்மை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அபாயமானதாக கருதப்படும் அதே சூழலில், பண வீக்கம் நிலையான வைப்பு நிதிகளில் அபாயமானதாக கருதப்படும். பணவீக்கத்திற்காக சரி செயப்படுமானால், நிலையான வைப்பு நிதி எதிர்மறை வருவாயை தான் உருவாக்கும். மிக உயர்ந்த வரி அடைப்பில் வரும் ஒரு முதலீட்டாளர், 5.4% வட்டியை வழங்கும் வங்கி ஒன்றில் எஃப்.டி.யில் 10 ஆண்டுக்கு ரூ .10 லட்சத்தை முதலீடு செய்தால், வரிக்கு பிந்தைய வருமானம் ரூ .4.4 லட்சத்திற்கு அருகில் கிடைக்கும். அதாவது ரூ .10 லட்சம் முதலீடு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ .14.4 லட்சமாக உயரும்.

ஆனால் அதே நேரத்தில், பணவீக்கம் 5% இருந்தால், (இது உண்மையில் வாழ்க்கை முறை மற்றும் கல்வி பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 7% ஆக இருக்கும்) முதலீட்டாளர் நஷ்டம் தான் அடைவார். ஏனென்றால், முதலீட்டாளரின் ரூ .10 லட்சம் 10 ஆண்டுகளில் ரூ .16.28 லட்சமாக உயர்ந்து 5% பணவீக்கத்தை ஈடுகட்ட வேண்டும். எஃப்.டி ரூ .4.4 லட்சமாக மட்டுமே வளரும் என்பதால், உண்மையில் முதலீட்டாளர் ரூ .1.9 லட்சம் வரை நஷ்டம் அடைந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

வட்டி விகிதங்களுக்கான பார்வை என்ன?

ரெப்போ விகிதம் தற்போது 4%மாக உள்ளது. (ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் விகிதம்) 17 ஆண்டுகளில் மிகக் குறைவான விகிதம் ஆகும். மத்திய வங்கி ஏற்கனவே பிப்ரவரி 2019 முதல் ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதன் பணவியல் கொள்கை அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பணவியல் கொள்கைக் குழு விகிதங்களைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறினார், “பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியை ஆதரிக்க கிடைக்கக்கூடிய இடத்தைப் பயன்படுத்துவது” குறித்து கண்காணித்து வரும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பொருள் பணவீக்கம் சமநிலைப்படுத்தப்பட்டவுடன், ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் தேவையை அதிகரிப்பதற்கும் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும். வட்டி விகிதங்களில் குறைப்பு என்பது கடன் விகிதங்களை குறைப்பதற்கு முதலில் வங்கிகள் முதலில் கடன் வாங்கும் செலவைக் குறைக்கும் என்பதாகும். எனவே, நிலையான வைப்பு முதலீட்டாளர்கள் வட்டி வீத சலுகைகள் குறைவதை காண்பார்கள்.

தற்போதைய நிலவரப்படி, எஸ்பிஐ 5 ஆண்டு கால வைப்புக்கு 5.4% வட்டியை வழங்கும்போது, மிக உயர்ந்த வரி அடைப்பில் (கூடுதல் கட்டணம் இல்லாமல்) விழுந்தவர்களுக்கு வரிக்கு பிந்தைய வருமானம் சுமார் 3.7% ஆகவே இருக்கும். ரெப்போ விகிதங்களை மேலும் குறைப்பதன் மூலம், வங்கிகள் தங்கள் சலுகையை மேலும் குறைக்கக்கூடும், இது முதலீட்டாளர்களுக்கு இன்னும் கவர்ச்சியற்றதாகவே இருக்கும்.

நீங்கள் நிலையான வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டுமா?

நடுத்தர வருமானம் பெறும் பிரிவில் இருப்பவர்கள், அதிக அளவு வரி அடைப்பில் வருபவர்கள், ஓய்வுக்கு பின்பான கார்ப்பஸை உருவாக்க விரும்புபவர்கள், குழந்தைகளின் படிப்பிற்காக சேமிக்க விரும்பும் நபர்களுக்கு பதில் “வேண்டாம்” என்பது தான். சிபிஐ பணவீக்கம் தற்போது 6% ஆகவும், ரிசர்வ் வங்கி அதை 4% ஆகவும் குறிவைத்திருக்கலாம் என்றாலும், வாழ்க்கை முறை பணவீக்கம் மற்றும் கல்வி பணவீக்கம் 7-8% வரை மிக அதிகமாக இருப்பதை நாம் இந்த நேரத்தில் உணர வேண்டும். எனவே பணவீக்கத்திற்கு மேல் வருமானத்தை ஈட்டும் நிதிக் திட்டங்களுக்கு நாம் செல்வது முக்கியம்.

நிதித் திட்டமிடுபவர்கள், எச்.என்.ஐ.க்கள் தங்கள் சொத்துக்களில் சில பகுதியை நிலையான வைப்புகளில் வைத்திருக்கலாம் . நடுத்தர வருமானம் உடையவர்கள் பணப்புழக்க நோக்கங்களுக்காக சிறிது பணத்தை வைத்திருப்பதைத் தவிர நிலையான வைப்பு நிதியில் வைப்பதை தவிர்த்து, வேறெதற்கும் செல்லக்கூடாது. வருமான வரி விதிக்கப்படாத, அல்லது 10% என்ற குறைந்த வரி விகிதத்தில் வருமானம் பெறும் நபர்கள், எஃப்.டி.க்களுக்கு செல்லலாம், ஏனெனில் அவர்கள் வரிகள் நீங்க ஒரு குறிப்பிடத்தகுந்த வருமானத்தை பெறுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தற்போதுள்ள எஃப்.டி.க்களைப் பொறுத்தவரை, பணப்புழக்கத்திற்குத் தேவையானதைத் தாண்டி அவற்றை பயன்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல என்றும், நிலுவையில் உள்ள கடன்களின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். “கடனுக்கான செலவினத்தை விட குறைந்த வட்டி சம்பாதிக்கும் எந்தவொரு சொத்தும் கடன் சுமையை திருப்பிச் செலுத்துவதற்கும் குறைப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று நிதி ஆலோசனை நிறுவனமான அசெட் மேனேஜர்ஸ் நிறுவனர் சூர்யா பாட்டியா கூறினார்.

நிலையான வைப்பு நிதி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கடன் முதலீட்டிற்கு கூட, முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட்ஃபோலியோவை இரணாக பிரிக்க முடியுமா என்று காண வேண்டும். இன்வெஸ்மெண்ட் கார்ப்பஸ் ஒரு 10 முதல் 15 ஆண்டுகளுக்கு தேவைப்படாமல் இருக்கலாம். குழந்தைகளின் படிப்பு அல்லது கல்யானத்திற்காக சேமிக்கலாம், அல்லது பி.பி.எஃப். அல்லது சுகன்யா சம்ரித்தி யோஜானா போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவற்றின் வட்டிகள் முற்றையே 7.1& மறும் 7.6% ஆகும். இரண்டு திட்டங்களிலும் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் வருமானத்திற்கு வரி இல்லை. மூத்த குடிமக்கள் 7.4% வட்டி வழங்கும் அரசாங்கத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு செல்லலாம். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் ரூ .15 லட்சம் வரை வைக்கலாம். 7.1% வட்டி வழங்கும் இந்திய பத்திரங்களில் முதலீடு செய்யலாம். கடன் பரஸ்பர நிதிகள், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வழி. அவை capital appreciation-ஐயும் வழங்குகின்றன என்று பிளான் அஹெட் வெல்த் அட்வைஸர்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் தவான் தெரிவித்தார்.

“நீண்ட காலமாக பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் கீழ்நோக்கிச் செல்லும், எனவே பொதுவாக, கடன் பரஸ்பர நிதிகள் நீண்ட காலத்திற்கு வைத்திருக்கக்கூடியவர்களுக்கு மூலதன பாராட்டுக்களை வழங்கும். நிலையான வைப்புகளுடன் ஒப்பிடும்போது இது வரி ஆர்பிட்ரேஜை வழங்குகிறது. கடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மூன்று ஆண்டுகளில் முதலீடுகளுக்கான சலுகைகளுடன் 20% செலுத்துகின்றனர், மேலும் 30% வரி விகிதத்தில் வராதவர்களுக்கு நிலையான வைப்புத்தொகையைக் காட்டிலும் இது மிகவும் திறமையானது ”என்று தவான் கூறினார். இருப்பினும், முதலீட்டாளர்கள் உயர் தரமான ஏஏஏ-மதிப்பிடப்பட்ட ஆவணங்களைக் கொண்ட கடன் நிதிகளுடன் மட்டுமே செல்ல வேண்டும், என்கிறார் தவான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தவான் கருத்துப்படி, அதிக வரி அடைப்பில் உள்ளவர்கள் வரி இல்லாத பத்திரங்களுக்கும் செல்லலாம், அங்கு தற்போதைய லாபத்தை விட சிறந்தது. பாட்டியா கூறுகையில், முதலீட்டாளர்கள் குறுகிய கால கடன் நிதிகளுக்கு தரமான போர்ட்ஃபோலியோவுடன் செல்ல முடியும், ஒருவர் சிறந்த வரி நன்மைகளை பெற மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Explained should you invest in fixed deposits with banks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X