scorecardresearch

ஜூலை 13-ல் கோட்டபய ராஜினாமா: இந்த தேதியின் முக்கியத்துவம் என்ன?

ஜூலை 9 ஆம் தேதியில் இருந்து இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், கோட்டபய இனி பதவியில் நீடிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், ராஜினாமா செய்ய கோட்டபய ஜூலை 13 ஆம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார்?

Nirupama Subramanian

Explained: What is significant about July 13, the date Sri Lanka’s Gotabaya Rajapaksa has announced for his resignation?: சனிக்கிழமை (ஜூலை 9) இரவு, கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும், காலி முகத்திடலில் உள்ள அதிபரின் செயலகத்தையும் “கோட்டா வெளியேறு” கோஷத்துடன் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, அதிபர் கோட்டபய ராஜபக்சே ஜூலை 13 அன்று ராஜினாமா செய்வார் என்று கூறினார்.

ஆனால் ஏன் ஜூலை 13? ஜூலை 9 ஆம் தேதியில் இருந்து இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், கோட்டபய இனி பதவியில் நீடிக்க முடியாது என்பது கண்கூடாக தெளிவாகத் தெரிந்திருந்தும், ராஜினாமா செய்ய கோட்டபய அந்தத் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார்?

இதையும் படியுங்கள்: அதிபர், பிரதமர் இல்லாத நாடாக மாறிய இலங்கை: அடுத்து என்ன நடக்கும்?

அந்த தேதிக்கும் பௌத்தத்திற்கும் தொடர்பு உண்டு

அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லையென்றாலும், கோட்டபய ராஜபக்சே தேர்ந்தெடுத்த தேதியை முழு நிலவு நாளாகக் (பௌர்ணமி) குறிப்பிடலாம். சந்திர சுழற்சியில் இந்த நாள் பௌத்தர்களுக்கு பெரும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சிங்களத்தில் ‘போயா’ என்பார்கள். ஒவ்வொரு ‘போயா’ தினமும் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும்.

இலங்கை தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுகிறது. தேரவாத பௌத்த நாட்காட்டியில், புத்தரின் முதல் பிரசங்கத்தையும், புத்த சங்கத்தின் ஸ்தாபனத்தையும் நினைவுகூரும் ஜூலை மாத முழு நிலவு ‘எசல போயா’ என்று அனுசரிக்கப்படுகிறது.

புத்தர் கி.மு 528 இல், அவருக்கு 35 வயதாக இருந்தபோது தனது முதல் பிரசங்கத்தை வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் வழங்கினார். ஐந்து துறவிகளுக்கு அவர் போதித்த பிரசங்கத்தில், புத்தர் “சட்டத்தின் சக்கரத்தை இயக்கினார்”, நான்கு உன்னத உண்மைகளை வகுத்தார், இது அவரது தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

கோட்டபய ஒரு தீவிர பௌத்தர், அவருக்கு 2019 அதிபர் தேர்தலில் சிங்கள-பௌத்தர்கள் மட்டுமே வாக்களித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜூலையில் ஒரு சிறப்பு உள்ளது.

இலங்கையின் வரலாற்றில் ஜூலை எப்போதும் ஒரு அசாதாரண மாதமாகும். சிறுபான்மைத் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஜூலை 24-30, 1983 தமிழர் விரோதப் படுகொலைக்குப் பிறகு, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இந்த மாதம் “கருப்பு ஜூலை” என்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 29, 1987 இல், இந்தியாவும் இலங்கையும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது மூன்று ஆண்டுகளுக்குள் அதன் நோக்கங்களில் தோல்வியடைந்தது மற்றும் இந்திய இராணுவத்திற்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அண்மையில், 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி, சீன கட்டுமான நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தீர்ப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனர்களிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டது.

கோட்டபய தனது வார்த்தையைக் காப்பாற்றினால், ஜூலை 13 இலங்கைக்கு மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Explained significant july 13 sri lanka gotabaya rajapaksa announced resignation

Best of Express