George Mathew
Stocks and rupee plunge, crude on the boil: why is it happening, and what should you do?: திங்கள்கிழமை (மார்ச் 7) காலை பங்குச் சந்தைகள் 2.74 சதவீதம் வரை சரிந்தன மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 77.01 ஆக சரிந்தது, ஏனெனில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய்க்கு $ 138 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு கட்டத்தில் 1,791 புள்ளிகள் (3.29 சதவீதம்) சரிந்த பிஎஸ்இ (மும்பை பங்குச்சந்தை) சென்செக்ஸ், இந்திய நேரப்படி 10.55 மணி அளவில், 1,451 புள்ளிகள் குறைந்து 52,883.38 ஆகவும், என்எஸ்இ (தேசிய பங்குச்சந்தை) நிஃப்டி குறியீடு 416 புள்ளிகள் குறைந்து 15,829.25 ஆகவும் இருந்தது.
ஸ்மால் கேப் குறியீடு 2.48 சதவீதம் சரிந்தநிலையில், மிட் கேப் இன்டெக்ஸ் 2.54 சதவீதம் சரிந்தது. ரியல் எஸ்டேட், வங்கி, நிதி, ஆட்டோமொபைல் மற்றும் மூலதன பொருட்களின் குறியீடுகள் மற்றும் பங்குகள் 4.7 சதவீதம் வரை சரிந்தன.
பங்குகள் ஏன் வீழ்ச்சியடைகின்றன?
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா முழுமையாகத் தடைசெய்வதாக வெளியான வார இறுதி அறிக்கைகளுக்குப் பிறகு, எதிர்காலச் சந்தைகளில் பீதியடைந்து, திங்கள்கிழமை காலை எண்ணெய் விலை 8.50% உயர்ந்தது மற்றும் கிட்டத்தட்ட முடிவடைந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில், ரஷ்யர்கள் அமெரிக்கா மீதான சில கடுமையான கோரிக்கைகளை கடைசி நிமிடத்தில் சேர்த்தனர் என்று OANDA அறிக்கை கூறுகிறது.
"ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்காவின் தடை அதிக உள்நாட்டு விலைகளுக்கு வழிவகுக்கும் என்பதாலும், இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தியை பெரிதும் நம்பியிருக்கும் ஆசிய வர்த்தகர்கள் பீதி பொத்தானை அழுத்துவதில் ஆச்சரியமில்லை" என்று OANDA ஆசிய பசிபிக் மூத்த சந்தை ஆய்வாளர் ஜெஃப்ரி ஹாலி கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பிப்ரவரி 24 அன்று தொடங்கிய பின்னர் சென்செக்ஸ் இப்போது 7.66 சதவீதம் சரிந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை $138.00 என் வர்த்தகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் விலை தற்போது ஒரு பீப்பாய் $128.00 ஆக உள்ளது என OANDA கூறுகிறது. கச்சா எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கூர்மையான உயர்வு, இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தை உயர்த்தி, நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விரிவுபடுத்தும் அச்சுறுத்தல் காரணமாக, திங்களன்று ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதையும் படியுங்கள்: நேட்டோ படை என்றால் என்ன? உக்ரைன் இதில் இணைவதால் ரஷ்யாவுக்கு என்ன ஆபத்து?
திங்கட்கிழமை ரூபாயின் மதிப்பு 77.01 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை 76.16 ஆக நிறைவடைந்து இருந்தது. அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் இந்தியாவின் இறக்குமதிச் செலவைக் கூட்டி பணவீக்கத்தை உயர்த்தும். பணவீக்கத்தை அதிகரித்து வருவதால் ஏற்படும், பொருட்களின் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை வைத்திருந்தால் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் முதலீட்டை நிறுத்தாமல் தங்கள் SIP திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மறுபுறம், ஒரு பெரிய திருத்தம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தரமான பங்குகளை கவர்ச்சிகரமான நிலைகளில் எடுக்க வாய்ப்பளிக்கும். “முதலீட்டாளர்கள் எந்தவொரு பெரிய உறுதிமொழிகளையும் செய்வதற்கு முன் வெளிவரும் சூழ்நிலையை காத்திருந்து கவனிக்க வேண்டும். வாங்குதல் என்பது நியாயமான மதிப்பு அல்லது நல்ல வருவாய் தெரிவுநிலையைக் கொண்டிருக்கின்ற பங்குகள்/பிரிவுகளாக இருக்க வேண்டும்,” என்று ஜியோஜித் பைனான்சியலின் தலைமை முதலீட்டு வியூகவாதி வி கே விஜயகுமார் கூறினார்.
அனைத்து முதலீட்டாளர்களும் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு உத்தியைப் பின்பற்றுவதும், தற்போதைய கட்டத்தில் புதிதாக நுழைவதைத் தவிர்ப்பதும் நல்லது. உக்ரைன் நெருக்கடி மேலும் அதிகரித்தால், எண்ணெய் விலை உயர்ந்த மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சந்தை மேலும் அடிபட வாய்ப்புள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த மாதம் கூடி வட்டி விகிதங்களை உயர்த்துவது மற்றும் பணப்புழக்கத்தை கடுமையாக்குவது குறித்து முடிவெடுக்கும் அதே வேளையில், பெடரல் ரிசர்வ் செங்குத்தான உயர்வு அல்லது இறுக்கத்திற்கு செல்லாது என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
மற்றொரு கவலை என்னவெனில், பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் நேரத்தில், அதாவது ரிசர்வ் வங்கியின் மேல் பட்டையை விட அதிகமாக இருக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil