Advertisment

டெல்லி திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம்; சிறப்புகளும், வழங்கப்படும் படிப்புகளும்

Explained: Why the Delhi Skill and Entrepreneurship University is unique and what it offers: முழுநேர மற்றும் பகுதிநேர டிப்ளோமா படிப்புகள், இளங்கலை பட்டப்படிப்புகள், பி.டெக் படிப்பு மற்றும் இரண்டு முதுநிலை படிப்புகள் உள்ளிட்ட 39 படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
டெல்லி திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம்; சிறப்புகளும், வழங்கப்படும் படிப்புகளும்

டெல்லி திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்களுடனான கூட்டாண்மை மற்றும் தொடர்புடைய திறமைக்கு முக்கியத்துவம் அளித்து, செவ்வாய்க்கிழமை தனது முதல் தொகுதி மாணவர்களுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

Advertisment

முழுநேர மற்றும் பகுதிநேர டிப்ளோமா படிப்புகள், இளங்கலை பட்டப்படிப்புகள், பி.டெக் படிப்பு மற்றும் இரண்டு முதுநிலை படிப்புகள் உள்ளிட்ட 39 படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் டாக்டர் நெஹாரிகா வோஹ்ராவின் கூற்றுப்படி, தொழில் கூட்டாண்மை என்பது பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

"திறனாய்வில் முழு முன்னுதாரணத்தையும் மாற்றுவதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் பயன்பாட்டு அறிவியல் மற்றும் திறன் கல்வியில் தரமான கல்வியை வழங்குவதற்கான யோசனையுடன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் எவ்வாறு திறமையை கருத்துருக்களாக ஆக்குகிறோம் என்பதும், நம் தேசத்தில் மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பில் நாம் எவ்வாறு ஒரு பங்களிப்பவராக மாறுகிறோம்,” என்பதும்தான் எங்களது திட்டம் என்று துணைவேந்தர் கூறினார்.

மேலும், “பாடநெறி பாடத்திட்டம் தொழில் தேவைகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், விருந்தினர் சொற்பொழிவுகள், இன்டர்ன்ஷிப் மற்றும் பலவற்றின் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து எங்களுடன் ஈடுபடும். தொழில் நிறுவனங்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு கூட்டுறவு உறவாக நாங்கள் இதைப் பார்க்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட திறன் கொண்டவர்களின் பற்றாக்குறை மற்றும் பட்டங்கள் பெற்ற ஆனால் வேலைவாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் என இதில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன” என்றும் துணை வேந்தர் கூறினார்.

சலுகைக்கான படிப்புகள் எவை, அவற்றில் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்?

அப்ளைடு ஆர்ட்ஸ், ஆர்கிடெக்சர், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், காஸ்மெட்டாலஜி & ஹெல்த், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஃபேஷன் டிசைன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்டீரியர் டிசைன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பார்மசி, அச்சிடும் தொழில்நுட்பம், மற்றும் கருவி & டை தயாரித்தல் ஆகியவற்றில் 15 முழுநேர மற்றும் நான்கு பகுதிநேர டிப்ளோமா படிப்புகளுக்கு சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கான சேர்க்கை பொதுவான நுழைவு தேர்வு மூலம் நடத்தப்படும்.

இளங்கலை பட்டப்படிப்புகள்

பி.ஏ - டிஜிட்டல் மீடியா & டிசைன் மற்றும் அழகியல் மற்றும் அழகு சிகிச்சை மற்றும் ஸ்பானிஷ்; பி.சி.ஏ; பி.காம் - வணிக செயல்முறை நிர்வாகம்; பி.எஸ்.சி - தரவு பகுப்பாய்வு மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்; பிபிஏ - சில்லறை நிர்வாகம், வங்கி, நிதி சேவைகள் மற்றும் மேலாண்மை, மற்றும் வசதிகள் மற்றும் சுகாதார மேலாண்மை; பி.எம்.எஸ் - ஈ-காமர்ஸ் பயன்பாடுகள் மற்றும் நில போக்குவரத்து.

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள், பாடநெறிகள் மற்றும் பள்ளியில் விண்ணப்பதாரர்கள் எடுத்த தொழில் பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பட்டியல் மூலம் சேர்க்கை நடைபெறும்.

பிடெக் படிப்புகளில் MAE, ECE, CSE, ME, கருவி பொறியியல் மற்றும் மெகாட்ரானிக்ஸ் ஆகியவை உள்ளன. இவற்றுக்கான சேர்க்கை JEE மதிப்பெண்களைக் கொண்டு டெல்லி கூட்டு சேர்க்கை ஆலோசனை மூலம் நடைபெறும்.

முதுநிலை படிப்புகளில் கணினி பயன்பாடுகள் படிப்புக்கான சேர்க்கை, நிம்செட் மதிப்பெண்கள் மூலமும், எம்டெக் கருவி பொறியியல் படிப்புக்கான சேர்க்கை, கேட் மதிப்பெண்கள் மூலமும் நடைபெறும்.

எத்தனை இடங்கள் உள்ளன, கல்வி அமர்வு எப்போது தொடங்கப்படும்?

டிப்ளோமா படிப்புகளுக்கு 4,500 இடங்களும், இளநிலை படிப்புகளுக்கு 1,300, பிடெக் படிப்புகளுக்கு 250 இடங்களும், முதுநிலை படிப்புகளுக்கு 100 இடங்களும் உள்ளன.

டாக்டர் வோஹ்ரா, கல்வி அமர்வு தொடங்குவதற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

பல்கலைக்கழக திட்டங்களில் ‘தொழில் முனைவோர்’ என்பது என்ன?

ஒரு தொழில்முனைவோர் கூறு அனைத்து திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

“முதலில், ஒரு தொழில் முனைவு மையம் மிக விரைவில் அறிவிக்கப்படும். மூன்றாம் ஆண்டில் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், ஒரு தொழில்முனைவோர் நோக்குநிலை பாடநெறி உள்ளது, இது ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கு மட்டுமல்லாமல், எந்தவொரு சூழலிலும் ஒரு தொழில் முனைவோர் மனநிலை என்ன, எப்படி அதை செயல்படுத்த முடியும் என்பதை விளக்கும். எந்தவொரு மாணவரும் ஒரு தொழில் தொடங்க ஆர்வம் காட்டினால், அவர்கள் அதை செய்ய உதவும் வகையில் சிறப்பு ஆதரவு செல் மற்றும் சிறப்பு பாடநெறி தொகுதி எங்களிடம் இருக்கும், ”என்று டாக்டர் வோஹ்ரா கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment