Advertisment

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; கவுன்சில் என்பது என்ன?

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்; அந்த கவுன்சில் என்பது என்ன? ஸ்டாலினின் கடிதத்திற்கான காரணம் என்ன?

author-image
WebDesk
New Update
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; கவுன்சில் என்பது என்ன?

Rishika Singh

Advertisment

Explained: What is the Inter-State Council?: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 16) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்த” மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதற்குக் காரணம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில் "பயனுள்ள மற்றும் விவாதத் தொடர்பு" இல்லாததே காரணம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் என்றால் என்ன?

இது "இந்தியாவில் மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக" அமைக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும். மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அரசியலமைப்பின் 263 வது பிரிவின் கீழ் நிறுவப்பட்டது. அந்த விதி கவுன்சிலுக்கான தேவை உணரப்பட்டால் ஜனாதிபதி அத்தகைய அமைப்பை உருவாக்கலாம் என்று கூறுகிறது. கவுன்சில் ஆனது அடிப்படையில் பல்வேறு அரசாங்கங்களுக்கிடையில் விவாதங்களுக்கு ஒரு மன்றமாக செயல்படும்.

இதையும் படியுங்கள்: மௌரியப் பேரரசு தமிழகத்தை ஆண்டதா? அமித்ஷா கூறுவது பொய்: வைகோ

1988 இல், சர்க்காரியா கமிஷன் இந்த கவுன்சில் ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, மேலும் 1990 இல் அது ஜனாதிபதி ஆணை மூலம் நடைமுறைக்கு வந்தது.

கவுன்சிலின் முக்கிய செயல்பாடுகள், மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை விசாரிப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது, இரண்டு மாநிலங்கள் அல்லது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பொது நலன்களைக் கொண்ட விவகாரங்களை ஆராய்ந்து விவாதிப்பது மற்றும் கொள்கை மற்றும் செயல்பாட்டின் சிறந்த ஒருங்கிணைப்புக்கான பரிந்துரைகளை வழங்குவது போன்றவையாகும்.

பிரதம மந்திரி கவுன்சிலின் தலைவர், அதன் உறுப்பினர்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டப் பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் உள்ளனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படும், மத்திய மந்திரிகள் குழுவில் உள்ள கேபினட் அந்தஸ்தில் உள்ள ஆறு அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ள பிரச்சனைகள் என்ன?

முக்கியமாக, வழக்கமான கூட்டங்கள் இல்லாததால், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே கவுன்சில் கூடியது என்றும், ஜூலை 2016 முதல் எந்தக் கூட்டமும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். 1990 இல் கவுன்சில் அமைக்கப்பட்டதிலிருந்து, அமைப்பு 11 முறை மட்டுமே கூடியுள்ளது. ஆனால், ஒவ்வொரு வருடமும் குறைந்தது மூன்று முறை சந்திக்க வேண்டும் என்று அதன் நடைமுறை கூறுகிறது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கவுன்சில் மறுசீரமைப்புக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இந்த அமைப்பில் இப்போது 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பார்கள், மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கவுன்சிலின் நிலைக்குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகாராஷ்டிரா, உ.பி., மற்றும் குஜராத் முதல்வர்கள் மற்ற நிலைக்குழு உறுப்பினர்களில் சிலர்.

வரிவிதிப்பு, நீட் தேர்வு நீட் போன்றவற்றில் மத்திய அரசின் கொள்கைகளுடன் ஸ்டாலின் உடன்படவில்லை, மேலும், மாநிலங்களின் உரிமைகள் குறித்தும் அவர் அடிக்கடி பேசி வருகிறார். கவுன்சில் தவறாமல் கூட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஸ்டாலின், கவுன்சில் கூடாததால், “நிர்வாகப் பிரிவுகளுக்குள் இணக்கமாகத் தீர்வு காணக்கூடியது பெரும்பாலும் நீதித்துறையின் வாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது” என்று கூறினார்.

கவுன்சில் தேவை என்று தமிழகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. 1969ல் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி, மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பேசினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவரது அரசாங்கம் முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது, அது 1971 இல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, அந்த அறிக்கை "உடனடியாக மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைத்தது.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் நடந்தது என்ன?

2016 ஆம் ஆண்டில், 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய-மாநில உறவுகள் குறித்த புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, ​​அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கருணாநிதி விமர்சித்திருந்தார்.

கூட்டத்தில் பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் "மையமயமாக்கலுக்கு” எதிராக மத்தியில் கூட்டாட்சி கட்டமைப்பை கடைப்பிடிக்க மாநிலங்கள் வலியுறுத்தின. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைத் திணிப்பது கவலைக்குரிய விஷயமாக விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகளுடன் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment