Advertisment

ஆப்கான் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் எவை?

Explained: Which countries are taking in Afghan refugees?: ஒட்டுமொத்தமாக, 2020 இறுதியில், துன்புறுத்தல், மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக உலகளவில் 82.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

author-image
WebDesk
New Update
ஆப்கான் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் எவை?

ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றியதால், நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் கீழ் வரவிருக்கும் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு விரைந்தனர். பல காட்சிகள், காபூலை விட்டு வெளியேறும் விமானத்தின் சக்கரங்களில் தங்களை கட்டிக்கொள்ளும் அளவுக்கு சிலர் விமான நிலைய தார்ச்சாலையில் ஓடும் மக்கள் கடலைக் காட்டின.

Advertisment

இந்த நிலைமை ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற நிழலை ஏற்படுத்தியுள்ளது மற்றும் சில நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகளை அழைத்து செல்வதற்கான கொள்கையை அறிவித்துள்ளன. இந்த கொள்கைகளில் சில என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

உலகம் முழுவதும் அகதிகள்

2020 நிலவரப்படி, சுமார் 2.8 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளிநாடுகளில் உள்ளனர். UNHCR படி, வெளிநாடுகளில் வாழும் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் சிரியாவைச் சேர்ந்தவர்கள், 6.8 மில்லியன்.

ஒரு அகதி என்பவர் "துன்புறுத்தல், போர் அல்லது வன்முறை காரணமாக தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு நபராக வரையறுக்கப்படுகிறார். ஒரு அகதி என்பவர் இனம், மதம், தேசியம், அரசியல் கருத்து அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் உறுப்பினராக இருப்பதற்கான காரணங்களுக்காக துன்புறுத்தலுக்கு உள்ளாக கூடிய பயத்தைக் கொண்டவர். பெரும்பாலும், அவர்கள் வீடு திரும்ப முடியாது அல்லது அவ்வாறு செய்ய பயப்படுகிறார்கள். யுஎன்ஹெச்சிஆர் தகவலின் படி, போர் மற்றும் இனம், பழங்குடி மற்றும் மத வன்முறைகள் ஆகியவை அகதிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முக்கிய காரணங்கள் என்று கூறுகின்றது.

சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த, மொத்தமாக 68 சதவிகித மக்கள் எல்லைகளுக்கு வெளியே இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, 2020 இறுதியில், துன்புறுத்தல், மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக உலகளவில் 82.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அகதிகளை ஏற்றுகொள்வதை பொறுத்தவரை, துருக்கி அதிக எண்ணிக்கையிலான அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. துருக்கியில் (பெரும்பாலும் சிரியாவிலிருந்து) 4 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எந்தந்த நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக் கொள்ளும்?

அமெரிக்கா: ஆகஸ்ட் 2 ஆம் தேதி, அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னுரிமை 2 (P-2) ஐ அறிவித்தது, இது அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டத்தின் (USRAP) மூலம் சில ஆப்கானிஸ்தான் பிரஜைகள் மற்றும் அவர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு அணுகலை வழங்குகிறது.

"அமெரிக்கா, அமைதியான, பாதுகாப்பான ஆப்கானிஸ்தானை நோக்கமாக கொண்டு உள்ளது. இருப்பினும், தாலிபான் வன்முறைகள் அதிகரித்திருப்பதால், அமெரிக்காவுடன் பணிபுரிந்தவர்கள் உட்பட சில ஆப்கானியர்களுக்கு, அமெரிக்காவில் அகதிகள் மீள்குடியேற்றத்திற்கான வாய்ப்பை வழங்க அமெரிக்க அரசு செயல்படுகிறது, ”என்று வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கைகளின்படி, அமெரிக்கா 10,000 க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு உதவிய மக்கள் அடங்குவர்.

இங்கிலாந்து: ஆகஸ்ட் 18 அன்று, தாலிபான்களிடமிருந்து தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் அல்லது துன்புறுத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக வீடு அமைப்பதற்கான வழி வழங்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்தது. பெண்கள், மகளிர் மற்றும் மத சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் மீள்குடியேற்றத் திட்டத்தின் முதல் ஆண்டில் தற்போதைய நெருக்கடியால் ஆபத்தில் இருக்கும் 5,000 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை இங்கிலாந்து அரசாங்கம் மீளக்குடியமர்த்தும். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தின் மூலம் 20,000 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை மீள்குடியேற்றம் செய்ய இங்கிலாந்து அரசு இலக்கு கொண்டுள்ளது.

கனடா: 20,000 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை அழைத்துச் செல்வதாக கனடாவும் உறுதியளித்துள்ளது.

ஐரோப்பா: துருக்கியின் போட்ரம் அருகே ஒரு கடற்கரையில் மூன்று வயது சிரிய சிறுவன் ஆலன் குர்டியின் உடல், முகம் கீழே கிடக்கும் படியான புகைப்படம் வெளியானதிலிருந்து, ​​2015 குடியேற்ற நெருக்கடி மீண்டும் நிகழும் என்ற அச்சத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகளை அழைத்துச் செல்வதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாக உள்ளன. அகதிகள் நெருக்கடியின் குறியீடாக மாறியது மற்றும் பல அகதிகள் நீர் வழிகளைப் பயன்படுத்தி மேற்கு நோக்கிச் செல்ல ஆபத்தான முயற்சிகள் எடுப்பவை ஆகியவை கவனித்தில் கொள்ளப்பட்டுள்ளன.

யுஎன்ஹெச்சிஆர் 2015 ஆம் ஆண்டில் 9 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் ஐரோப்பிய கடற்கரைக்கு வந்ததாக மதிப்பிட்டது, அவர்களில் சுமார் 3,500 பேர் பயணத்தின் போது தங்கள் உயிரை இழந்தனர். உள்வரும் மக்களில் 75 சதவீதம் பேர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளில் மோதல் அல்லது துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

ஸ்டாடிஸ்டாவின் படி, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகியவை ஐரோப்பாவில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான மற்ற முக்கிய இடங்கள். ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏறக்குறைய 7,000 ஆப்கானியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் நிரந்தர அல்லது தற்காலிக சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்களில் குறைந்தது 2,200 பேர் கிரேக்கத்திலும், 1,800 பிரான்சிலும், 1,000 ஜெர்மனியிலும் மற்றும் சுமார் 700 பேர் இத்தாலியிலும் உள்ளனர்.

"அகதிகள் பலருக்கு தங்குவதற்கு தற்காலிக உரிமை மட்டுமே வழங்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக, ஆப்கானிஸ்தான் அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கீகாரம் பெறுவதற்கு 62 சதவிகித வாய்ப்பை பெற்றுள்ளனர், " என்று ஸ்டாடிஸ்டா குறிப்பிடுகிறது.

இந்தியா: அகதிகளுக்கான தனிச் சட்டம் இந்தியாவிடம் இல்லை, இது வரை அகதிகளை அந்தந்த வழக்கு அடிப்படையில் கையாளப்பட்டு வருகிறது.

அகதிகள் தொடர்பான 1951 மாநாடு அல்லது அகதிகள் நிலை தொடர்பான 1967 நெறிமுறையில் இந்தியா கையெழுத்திடவில்லை. 2011 இல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அகதிகள் என்று கூறிக்கொள்ளும் வெளிநாட்டு பிரஜைகளைக் கையாள்வதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை வெளியிட்டது.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான விண்ணப்பங்களை விரைவாக கண்காணிக்க புதிய வகை இ-விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விசாக்கள் ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் இந்த காலம் முடிந்த பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Afghanistan Explained Taliban Attack
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment