Advertisment

ஈ.எம்.ஐ அதிகரிக்கும் நிலை; ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ விகிதங்களை 0.4% உயர்த்தியது ஏன்?

ஈ.எம்.ஐக்கள் அதிகரிக்கும் நிலை; திடீரென ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்திய ரிசர்வ் வங்கி; பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை

author-image
WebDesk
New Update
RBI MPC: 50bps rate hike likely

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்

George Mathew

Advertisment

Explained: Your EMIs are set to go up; why has RBI suddenly raised the Repo rate by 40 bps?: இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை (மே 4) அன்று, பணவீக்கத்தைக் குறைக்கவும், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும் முக்கிய கொள்கை விகிதமான ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதத்தை (CRR) 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 4.50 சதவிகிதம் உயர்த்தியதை அடுத்து, வங்கி அமைப்பில் வட்டி விகிதங்கள் உயரும்.

எவ்வாறாயினும், புதன்கிழமை பணவியல் கொள்கைக் குழுவின் (MPC) திட்டமிடப்படாத கூட்டத்தில் ரிசர்வ் வங்கி இணக்கமான பணவியல் கொள்கையைத் தக்க வைத்துக் கொண்டது.

பாதிப்பு என்னவாக இருக்கும்?

வீடு, வாகனம் மற்றும் பிற தனிநபர் மற்றும் கார்ப்பரேட் கடன்களுக்கான சமமான மாதாந்திர தவணைகள் (EMIs) அதிகரிக்க வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரெப்போ வட்டி விகித உயர்வால் டெபாசிட் விகிதங்களும் உயரும்.

ரெப்போ ரேட் மற்றும் சிஆர்ஆர் ஆகியவற்றை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி, ஏற்கனவே 7 சதவீதத்தை நெருங்கி உள்ள பணவீக்கத்தை விரும்பிய அளவில் வைத்திருக்கவும், உலகப் பொருளாதாரம் கொந்தளிப்பை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் இலக்கு வைத்துள்ளது.

ரெப்போ விகித உயர்வு என்றால் என்ன?

ரிசர்வ் வங்கியின் முக்கிய கொள்கை விகிதம் அல்லது வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதமான ரெப்போ விகித உயர்வால், வங்கிகளுக்கான நிதிச் செலவு அதிகரிக்கும். இது வரும் நாட்களில் கடன் மற்றும் டெப்பாசிட் விகிதங்களை உயர்த்த வங்கிகளையும் NBFC களையும் தூண்டும். அதேநேரம், ரெப்போ விகித உயர்வால் நுகர்வு மற்றும் தேவை பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி கடைசியாக ஆகஸ்ட் 2018 இல் ரெப்போ விகிதத்தை 25 பிபிஎஸ் அதிகரித்து 6.50 சதவீதமாக உயர்த்தியது.

இதையும் படியுங்கள்: ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி விதிக்க முடிவு; காரணம் என்ன?

எஸ்பிஐ மற்றும் பல வங்கிகள் சமீபத்தில் எம்சிஎல்ஆர் (நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் மார்ஜின் செலவு) புள்ளிகளை உயர்த்தி வட்டி விகிதத்தை உயர்த்தின. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், "இணக்கமான திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துவது பணவியல் கொள்கைக்கு அவசியம்" என்று புதன்கிழமை தெரிவித்தார்.

CRR உயர்வின் தாக்கம் என்ன?

CRR என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருத்திருக்க வேண்டிய டெப்பாசிட்தாரர்களின் பணத்தின் சதவீதமாகும். CRR இல் 50 bps உயர்வு வங்கி அமைப்பிலிருந்து ரூ.87,000 கோடியை உறிஞ்சிவிடும். வங்கிகளின் கடன் அளவுகள் அதற்கேற்ப குறையும்.

இதன் பொருள் நிதிகளின் விலை உயரும் மற்றும் வங்கிகளின் நிகர வட்டி வரம்புகள் மோசமாக பாதிக்கப்படலாம். ரிசர்வ் வங்கி ஒரு அமைப்பில் அதிக பணப்புழக்கத்தை செலுத்த விரும்பினால், அது CRR ஐக் குறைத்து, வங்கிகளுக்கு கடன் வழங்க அதிக பணப்புழக்கத்தை விட்டுச் செல்கிறது. ரிசர்வ் வங்கி அமைப்பிலிருந்து பணப்புழக்கத்தை வெளியேற்ற விரும்பினால், அது CRR விகிதத்தை அதிகரிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Rbi Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment