Advertisment

சாதிவாரி கணக்கெடுப்புக்கு பா.ஜ.க தயங்குவது ஏன்?

பீகார் அரசு மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. பீகார் பா.ஜ.க பிரிவு இந்த கணக்கெடுப்பு நடத்தும் செயல்முறையை ஆதரித்தாலும், மத்திய பா.ஜ.க கட்சி ஆதரிக்கவில்லை. ஏன்?

author-image
WebDesk
New Update
modi bjp

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும் வகையில், வதோதராவில் கடந்த வாரம் பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த நாரி வந்தன் அபிவாதன் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பூபேந்திர ராணா)

Sanjay Kumar

Advertisment

மற்ற காரணிகளைத் தவிர, 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களின் போது, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க ஏற்படுத்திய கணிசமான ஊடுருவலின் காரணமாக, பா.ஜ.க.,வின் உறுதியான வெற்றி சாத்தியமானது. அதேநேரம் பா.ஜ.க மற்ற சாதி சமூகங்களிடமிருந்து ஆதரவைப் பெறவில்லை என்பதல்ல: அதன் பாரம்பரிய ஆதரவாளர்களான உயர் சாதியினர் மற்றும் உயர் வகுப்பினர் மீது தனது பிடியை பலப்படுத்தியதுடன், கணிசமான எண்ணிக்கையிலான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளையும் அணிதிரட்ட முடிந்தது. இருப்பினும், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தாலும், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு குறித்து தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. (அட்டவணை 2)

ஆங்கிலத்தில் படிக்க: An expert explains: Why has the BJP been shying away from an all-India caste-based census?

ஆதாரம்: CSDS தரவு அலகு (அட்டவணை 1); லோக்நிதி-CSDS தேசிய தேர்தல் ஆய்வுகள் (அட்டவணைகள் 2 முதல் 6 வரை). அனைத்து புள்ளிவிவரங்களும் சதவீதத்தில்

பா.ஜ.க.,வுக்கு ஓ.பி.சி ஆதரவு

மண்டல் கமிஷன் அறிக்கையை 1990 களின் முற்பகுதியில் வி.பி சிங் அரசாங்கம் செயல்படுத்தியது, மத்திய அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் OBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது, இது இந்தியாவில் குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் தேர்தல் அரசியலின் தன்மையை மாற்றியது. மேலும், மண்டல் அரசியலுக்குப் பிந்தைய அரசியலானது, குறிப்பாக பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான வலுவான பிராந்தியக் கட்சிகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

1990 களின் பிற்பகுதியில் "கமண்டல் அரசியல்" என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட அதன் இந்துத்துவ அரசியலுடன் மண்டல் அரசியலை எதிர்கொள்ள பா.ஜ.க மிகவும் கடினமாக போராட வேண்டியிருந்தது மற்றும் பல ஆண்டுகள் தேவைப்பட்டது. எல்.கே அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க கடுமையாக உழைத்து 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளுடன் NDA அரசாங்கத்தை அமைத்தாலும், பிராந்தியக் கட்சிகள் 1998 மற்றும் 1999 இல் முறையே 35.5% மற்றும் 33.9% வாக்குகளைப் பெற்று மிகவும் வலுவாக இருந்தன. காங்கிரஸ் தலைமையிலான UPA 2004 மற்றும் 2009 இல் அரசாங்கத்தை அமைத்தபோதும், பிராந்தியக் கட்சிகள் இணைந்து 39.3% மற்றும் 37.3% வாக்குகளைப் பெற்றன. 2014 மக்களவைத் தேர்தலில் 31% வாக்குகளுடன் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்றபோதும், பிராந்தியக் கட்சிகள் இணைந்து 39% வாக்குகள் பெற்றன. (அட்டவணை 1)

2019 லோக்சபா தேர்தலின் போதுதான், ஓ.பி.சி வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க பெரிய அளவில் நுழைந்து, பிராந்திய கட்சிகளின் முக்கிய ஆதரவில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது, பிராந்திய கட்சிகளின் வாக்கு சதவீதம் 26.4% ஆக குறைந்தது. லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் இன் தொடர் ஆய்வுகளின் சான்றுகள், கடந்த ஒரு தசாப்தத்தில் ஓ.பி.சி வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. 2009 மக்களவைத் தேர்தலில், 22% ஓ.பி.சி.,க்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்தனர், 42% பேர் பிராந்தியக் கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால் ஒரு தசாப்தத்திற்குள், ஓ.பி.சி மத்தியில் பா.ஜ.க.,வின் ஆதரவு தளம் வியத்தகு முறையில் மாறிவிட்டது. 2019 மக்களவைத் தேர்தலின்போது, ​​44% ஓ.பி.சி.,க்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்தனர், 27% பேர் மட்டுமே பிராந்தியக் கட்சிகளுக்கு வாக்களித்தனர். (அட்டவணை 3)

லோக்சபா vs சட்டசபை

ஆனால் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. முக்கியமாக மக்களவை தேர்தல்களின் போது ஓ.பி.சி வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க பிரபலமான தேர்வாக உள்ளது, ஆனால் மாநில அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் போது அதே ஓ.பி.சி வாக்காளர்கள் மத்தியில் நிலைப்பாடு அப்படி இருக்காது. 2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​பீகாரில் 11% ஓ.பி.சி.,க்கள் மட்டுமே ஆர்.ஜே.டி.,க்கு வாக்களித்தனர், ஆனால் 2020 சட்டமன்றத் தேர்தலின் போது 29% ஓ.பி.சி.,க்கள் ஆர்.ஜே.டி.,க்கு வாக்களித்தனர். உத்திர பிரதேசத்தில், 2019 மக்களவை தேர்தலில், சமாஜ்வாதி கட்சிக்கு 14% ஓ.பி.சி.,கள் மட்டுமே வாக்களித்தனர், ஆனால் 2017 சட்டசபை தேர்தலில், அந்த தேர்தலில் மோசமாக தோல்வியடைந்தாலும், 29% ஓ.பி.சி.,க்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தனர். லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையே பல்வேறு மாநிலங்களில் உள்ள ஓ.பி.சி.,க்களிடையே வாக்களிக்கும் தேர்வுகளில் இதேபோன்ற வித்தியாசத்தை நாம் காண்கிறோம். (அட்டவணை 4)

மேலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் உயர் வகுப்பு ஓ.பி.சி.,க்களுடன் ஒப்பிடும்போது, ​​பின் தங்கிய ஓ.பி.சி வாக்குகளை பா.ஜ.க மிக வெற்றிகரமாக திரட்டியுள்ளது. ஆனால், ஓ.பி.சி.,கள் மத்தியில் கால் பதித்து பா.ஜ.க அரசியல் பலன்களைப் பெற்றாலும், பா.ஜ.க.,வின் தேர்தல் செயல்திறனைப் பொருட்படுத்தாமல் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்த உயர் சாதியினர் மற்றும் உயர் வகுப்பினர் மத்தியில் அதன் ஆதரவுத் தளம் உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை. 2019 லோக்சபா தேர்தலின் போது, உயர் வகுப்பு OBCக்களில் 41% பேர் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்தனர், மேலும் பின் தங்கிய ஓ.பி.சி.,க்களில் 47% பேர் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்தனர்.

பின் தங்கிய ஓ.பி.சி.,க்களுடன் ஒப்பிடும்போது, உயர் வகுப்பு ஓ.பி.சி.,யினரிடையே பிராந்தியக் கட்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் ஆதிக்கம் செலுத்தும் ஓ.பி.சி ஜாதியினரான யாதவர்கள், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆர்.ஜே.டி.,க்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர், அதே நேரத்தில் பா.ஜ.க இந்த மாநிலங்களில் பின் தங்கிய ஓ.பி.சி சாதியினரை வெற்றிகரமாக அணிதிரட்ட முடிந்தது. (அட்டவணை 5 மற்றும் 6)

பா.ஜ.க.,வின் தயக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பில் பா.ஜ.க தயக்கம் காட்டுவதற்குக் காரணம், பல்வேறு சாதிகளைப் பற்றி வரும் எண்ணிக்கை, குறிப்பாக ஓ.பி.சி சாதிகள், மத்திய அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை மறுவடிவமைக்க ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க பிராந்தியக் கட்சிகளுக்கு ஒரு புதிய பிரச்சினையைக் கொடுக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு தசாப்த காலமாக இந்திய தேர்தல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.,வுக்கு சவால் விடும் வகையில் ஒரு நேர்மறையான நிகழ்ச்சி நிரலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பல பிராந்தியக் கட்சிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும் மண்டல் II இன் சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.

OBC புள்ளிவிவரங்கள் புதிய சிக்கல்களை எழக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகத் தெரிகிறது, அதைக் கையாள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

இந்தக் கட்டுரை முதன்முதலில் ஆகஸ்ட் 23, 2021 அன்று அச்சுப் பதிப்பில் பா.ஜ.க வாக்குப் பங்கீடு மற்றும் சாதிக் கணக்கெடுப்புஎன்ற தலைப்பில் வெளிவந்தது.

(சஞ்சய் குமார் ஒரு பேராசிரியர் மற்றும் இணை இயக்குனர் லோக்நிதி-CSDS)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Caste Census
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment