Advertisment

சைவ மாநிலமான குஜராத்தில், இறைச்சி உண்பதை தடை செய்யமுடியாதது ஏன்?

Explained: Why meat-eating cannot be banned in ‘vegetarian state’ Gujarat: சைவ மாநிலமாக அறிவிக்கப்பட்ட குஜராத்; ஆனால் இறைச்சி உண்பதை தடை செய்ய முடியவில்லை; காரணம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சைவ மாநிலமான குஜராத்தில், இறைச்சி உண்பதை தடை செய்யமுடியாதது ஏன்?

2017 பட்ஜெட் உரையில், அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி, குஜராத் சைவ மாநிலமாக இருக்கும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பு, அரசாங்கத்தின் பசு வதை சட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது. பசுவதை சட்டத்தில், இப்போது குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இச்சட்டம், அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வந்தது.

Advertisment

ஊரடங்கிற்கு பிறகு, அகமதாபாத் போன்ற நகரங்களில் பல உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. மீண்டும் திறக்கப்பட்ட உணவங்களில் சில தங்கள் மெனுவிலிருந்து சிவப்பு புள்ளியை (இறைச்சி உணவுகளை) கைவிட்டன, மற்றவை கிளவுட் கிச்சன்களாக மாறியது, பெரும்பாலும் பொருளாதாரம் காரணமாக.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு வாரங்களில் நடந்த நிகழ்வுகள், மாநிலத்தில் இறைச்சி உண்பதைத் தடைசெய்வது அவ்வளவு சாத்தியமில்லை என்பதைக் காட்டுகிறது. ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர் மற்றும் அகமதாபாத் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன்களின் பாஜக நிர்வாகிகள் தெருக்களில் அசைவ உணவுகளை விற்கும் வண்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனால், மாநில பிஜேபி தலைவர் சி.ஆர்.பாட்டீல் பாஜக நகரப் பிரிவு தலைவர்களை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது, மேலும் இறைச்சி உண்பதற்கு தடை ஏதும் இல்லை என்றும் மக்களுக்கு அவர்கள் விரும்பியதை உண்ண "உரிமை" உள்ளது என்றும் வலியுறுத்த வேண்டியதாகிற்று.

கட்டுக்கதை & உண்மை

2003 ஆம் ஆண்டில், குஜராத் முந்தைய ஆண்டு கலவரத்தில் இருந்து மீண்டு வந்தபோது, ​​அகமதாபாத்தின் எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதியின் பாஜக எம்எல்ஏ பவின் ஷேத், அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் (இப்போது மத்திய உள்துறை அமைச்சர்) கண்காணிப்பின் கீழ், அசைவ உணவு விற்கும் வண்டிகளை வலுக்கட்டாயமாக மூடினார். இந்த உணவு வண்டிகள் அவரது தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த IIM-A க்கு வெளியே உள்ள தெருவில் செயல்பட்டு வந்தன. அந்த உணவு வண்டிகள் இதுவரை மீண்டும் திறக்கபடவில்லை. பவின் ஷேத் ஒரு ஜெயின் சமூகத்தைச் சார்ந்தவர். ஜெயின், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட ஒரு சமூகம் மற்றும் சக்திவாய்ந்த அரசியல் பதவிகளை வகிப்பவர்களைக் கொண்ட அகமதாபாத்தில் செல்வாக்கு மிக்க சமூகமாக உள்ளது.

சைவ உணவு உண்பவர் என்ற குஜராத்தின் அடையாளம்,  அகமதாபாத்தைப் பற்றிய கீழ்கண்ட அபிப்பிராயத்திலிருந்து எடுக்கப்பட்டது, அகமதாபாத்தில் நீங்கள் 'ஜெயின்' (வெங்காயம், பூண்டு அல்லது கிழங்குகள் இல்லை) மற்றும் 'ஸ்வாமினாரியன்' (வெங்காயம் அல்லது பூண்டு இல்லாமல்) போன்ற வகைகளில் பீட்சா மற்றும் வடபாவ் போன்றவற்றைப் பெறலாம். இதில் ஸ்வாமினாரியன் வகை என்பது ஸ்வாமினாரியன் பிரிவைப் பின்பற்றுபவர்களுக்கானது.

குஜராத்தைப் பற்றிய சந்தைப்படுத்தல் என்பது சைவ உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. உள்ளூர் காரமான மட்டன் கறி, இறால் மற்றும் வறுத்த பாப்லெட் (பாம்ஃப்ரெட்) ஆகியவற்றிற்கான சமையல் குறிப்புகள், மாநில நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சமையலறைகள் அல்லது தீங்கற்ற அசைவ தாபாக்களில் பெரும்பாலும் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன.

சமூகவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் குஜராத் ஒரு சைவ மாநிலம் என்ற நம்பிக்கை ஒரு கட்டுக்கதை என்று வலியுறுத்துகின்றனர். 2014 ஆம் ஆண்டின் மாதிரி பதிவு கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் 40 சதவீதம் இறைச்சி உண்ணும் மக்கள்தொகை உள்ளது, இது பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானைக் காட்டிலும் அதிகமாகும். மேலும் இவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் மட்டுமல்ல, ஓபிசி, தலித்துகள் மற்றும் பழங்குடியினரும் கூட.

நாட்டின் கடல் உணவு உற்பத்தியில் 17 சதவீத பங்களிப்பை வழங்கும் குஜராத் ஒரு முக்கிய மீன் உற்பத்தியாளராகவும் உள்ளது. சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் கர்வா மற்றும் கோலி OBC சமூகங்கள் பெரும்பாலும் மீன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், IIM-A க்கு அருகில் உள்ள, அரசின் குஜராத் மீன்வள மத்திய கூட்டுறவு சங்க லிமிடெட்டின் மொபைல் வேன்களில் இருந்து விற்கப்படும் தரமான மீன்களை நம்பியிருப்பவர்கள், "உள்ளூர் மக்களின் எதிர்ப்புகள்" காரணமாக 2014 இல் அசோசியேஷன் மொபைல் வேன்களின் விற்பனையை நிறுத்தியதால், அகமதாபாத்தில் உள்ள மீன் உண்பவர்கள், பிற ஆதாரங்களைத் தேட வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அகமதாபாத்தில் அசைவ உணவுகளை திறந்த வெளியில் விற்கும் அல்லது உட்கொள்ளும் சகிப்புத்தன்மை குறைவாக உள்ளது. சைவ குஜராத்தி குடும்பங்களில், முட்டை மற்றும் கோழி உணவுகளை உண்ணும் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் அதை தங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிடுகிறார்கள்.

பாஜகவின் சமாளிப்புகள்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பல ஓபிசி அமைச்சர்களை இணைத்து, ஓபிசி பிரிவினரிடையே நற்பெயரை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ள நிலையிலும், பாதிக்கு மேற்பட்ட மக்கள் அசைவ உணவு உண்பவர்களாக உள்ள உத்தரபிரதேசத்தில் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பதாலும், இறைச்சி உண்பவர்கள் மீதான தடையை அதிகரிப்பது தேர்தல் கணக்கீட்டை சீர்குலைக்கும் என்றும் கட்சித் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். பாஜக உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பில் குஜராத்திகளின் பிரசன்னம் அதிகரித்து வருவதால், குஜராத்தில் நடந்தது பாஜகவின் ஒட்டுமொத்த மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த கட்சி சரியான கோரிக்கைகளை எழுப்ப வேண்டியிருந்தது.

இறைச்சி உண்பதைக் குற்றமாக்குவது என்பது, பசுவதை அல்லது மது அருந்துவதைக் குற்றமாக்குவது போன்றதல்ல என்பது கட்சித் தலைமை புரிந்துள்ளது. பசுவதை அல்லது மது அருந்துவது, இந்துக்கள் மற்றும் அவற்றின் தடைக்கு ஆதரவான வாக்காளர்களை வென்றெடுக்கும் அதே வேளையில், இறைச்சிக்கான தடையை அறிவித்ததன் மூலம் பாஜக அதிக வாக்குகளை இழக்கக்கூடும்.

இவை அனைத்தும் கடந்த வாரம் மாநில மற்றும் நகர அளவில் கட்சியின் முற்றிலும் முரண்பாடான நிலைப்பாடுகளில் தெளிவாகத் தெரிந்தது. விஜய் ரூபானியின் சொந்த ஊரான ராஜ்கோட் முனிசிபல் கார்ப்பரேஷனில் தொடங்கி, வதோதரா, பாவ்நகர் மற்றும் அகமதாபாத் வரை இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அங்கு பாஜக மேயர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் அல்லது குடிமைக் குழுத் தலைவர்கள் அசைவ உணவுகளை விற்கும் வண்டிகளுக்கு எதிராக, இந்து மதத்தை (ராஜ்கோட்) பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது, " அசைவ உணவின் துர்நாற்றம், மற்றும் "சிறு குழந்தைகளின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல்" போன்ற காரணங்களுக்காக கடும் நடவடிக்கைகளை அறிவித்தனர். இந்த பிரச்சினை இந்துக்களை வெல்லும் என்று ஜூனியர் பிஜேபி தலைவர்கள் கற்பனை செய்திருக்கலாம், ஆனால் அது புலம்பெயர்ந்தவர்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் கை வண்டிகளில் முட்டை உணவுகளை விற்பதன் மூலம் வாழ்கின்றனர், மேலும் பலருக்கு இது மட்டுமே மலிவான சத்தான உணவு. .

ஆனால் மாநில பாஜக தலைவர் பாட்டீல், சனிக்கிழமையன்று ராஜ்கோட்டில் செய்தியாளர் சந்திப்பில், இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் "என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். வண்டிகள் மூலம் அசைவ உணவு விற்பனை செய்பவரை அகற்றுவது ஏற்புடையதல்ல. சட்டத்திலும் அத்தகைய ஏற்பாடு இல்லை. தடை செய்யப்படாத எதையும் விற்க மக்களுக்கு சுதந்திரம் உண்டு. எனவே, வண்டிகளை (சாலைகளில் இருந்து) அகற்றும் பேச்சுக்கே இடமில்லை,” என்றார்.

அசைவ உணவு வண்டிகள் மீது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அனைத்து மேயர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பாட்டீல் கூறினார்.

சமண மதத்தைச் சேர்ந்த விஜய் ரூபானி, குஜராத்தை "சைவ உணவு" மாநிலம் என்று அறிவிப்பதில் பெயர் எடுக்க முடியும் என்றாலும், மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட பாட்டீல், அவருக்குக் சாதகமான முடிவை எடுக்க முடியாது. அவரது சொந்த நகரமான சூரத் மற்றும் அவரது தொகுதியான நவ்சாரியில் பாரம்பரியமாக அசைவ உணவு உண்ணும் மக்கள் அதிகம் உள்ளனர், இதில் உயர் சாதி இந்துக்கள், பார்சிகள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களும் அடங்குவர். அசைவத்திற்கு எதிரான சத்தத்தில் டெசிபல் சேர்க்காத ஒரே நகரமும் அதுதான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Gujarat Veggie Foods
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment