Advertisment

டிக்டாக்கிற்கு மாற்று ஏது? இந்திய பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய செயலிகள் இருக்குமா?

டிக்டாக், ரோபோஸோ போன்று சிறப்பான தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் வகையில் தற்போது செயலிகள் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained: Why the new crop of apps should worry Indian users

Explained: Why the new crop of apps should worry Indian users

Aashish Aryan

Advertisment

Explained: Why the new crop of apps should worry Indian users : டிக்டாக்கின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பல்வேறு முக்கிய வசதிகளை நிறைய சமூகவலைதள பக்கங்களும் செயலிகளும் ஏற்படுத்தி வருகின்றன. புதன்கிழமை அன்று இன்ஸ்டகிராம் தங்களின் ரீல்ஸ் இன் இந்தியா என்ற (Reels in India) வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்து அறிவித்து 14 நாட்கள் கூட ஆகாத நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டிக்டாக்கிற்கு மாற்றினை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க : 

ஆனால் அவை அனைத்துமே புதிய செயலிகள் இல்லை. ஏற்கனவே சில ஆண்டுகளாக ரோபோஸோ (Roposo) என்ற செயலி புழக்கத்தில் உள்ளது. இன்மொபி (InMobi) க்ரூப் இந்த செயலியை அறிமுகம் செய்தது. தற்போது இதனை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கூறும் அந்நிறுவனம் தற்போது 100 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக அறிமுகமாகும் எந்த செயலியும் இந்த எண்ணிக்கையில் பயனர்களை பெறவில்லை. டிக்டாக், ரோபோஸோ போன்று சிறப்பான தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் வகையில் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு வகையான செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே இந்த சீன செயலிகளுடன் கடுமையான போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வெகுநாட்களாக பயன்பாட்டில் இருக்கும் செயலிகள் மற்றும் ஒரே நாள் இரவில் முக்கியத்துவம் பெரும் செயலிகள். இரண்டாம் வகையான செயலிகள் ஆன்லைன்களில் கிடைக்கும் ஆப்களுக்கான கோட்களை தரவிறக்கம் செய்து உருவாக்கப்படும் செயலிகள் தான். தற்போது இருக்கும் சீனாவிற்கு எதிரான மனப்பான்மையை பயன்படுத்தி இது போன்று செயலிகள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறனர். இது போன்ற செயலிகளை வெறும் ரூ. 3000க்குள்ளேயே யாராலும் வாங்க இயலும். இதனை உருவாக்கிய நபருக்கே இந்த செயலி எப்படி இயங்குகிறது என்று தெரியாது. ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் இதனை வாங்கினால் 10 செயலிகளும் ஒரே மாதிரியாகவே செயல்படும் என்கிறார் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் இந்திரஜித் புயன்.

டிக்டாக்கை காப்பி அடித்து உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் செயலியான மித்ரோனின் கதையும் இப்படித்தான். வெறும் 34 டாலர்களுக்கு இதன் கோட்கள் வாங்கப்பட்டது. தனிநபர் தரவு பாதுகாப்பிற்காக சில காலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்த செயலி தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த  செயலிகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?

இந்த செயலிகள் அனைத்திலும் தனிமனித தரவுகளின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பிரச்சனைகள் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

அக்சஸ்நவ்வின் ஆசியா - பசிஃபிக் பாலிசி இயக்குநர் ராமன் சிமா கூறுகையில் ”ஒரு செயலியின் தேசியம் அந்த செயலியின் பாதுகாப்பினை உறுதி செய்யாது. செல்போனில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆதாரமாக இருப்பது என்னவென்றால் அது நிச்சயம் செயலிகளாக தான் இருக்கும். மேலும் அது எங்கே சேமித்து வைக்கப்படுகிறது என்பதும், எப்படி சேமித்து வைக்கப்படுகிறது என்பதும் முக்கியமான ஒன்றாகும். சில புதிய செயலிகளுக்கு, போனின் முக்கிய தரவுகளை பயன்படுத்தும் அதிகாரம் எப்படி வழங்கப்பட்டது என்பதிலும் எந்தவிதமான தெளிவும் இல்லை. கடந்த 10 நாட்களில் துவங்கப்பட்ட அநேக செயலிகள் காண்டாக்ட் மற்றும் கேலரிகளை பயன்படுத்தும் அனுமதியை கோருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

புனேவை சேர்ந்த சைபர் பாதுகாப்பு துறை வல்லுநர், மிகவும் குறைந்த அளவு அறிவுடன் இந்த துறையில் தளங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் எதனை இந்த ஆப்கோட்கள் ஸ்கேன் செய்து தனி மனித தரவுகளை சேமித்து வைக்கிறது என்பதை பற்றியும் எச்சரிக்கை செய்தார். அதனையும் தாண்டி ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடைபெற்றால் அதற்கு யாரும் பொறுப்பேற்க இயலாது என்றும் அவர் கூறுகிறார்.

நற்பெயர்களை கொண்ட செயலிகள் பலவும் அதன் புகழை தக்கவைத்துக் கொள்ளவே விரும்பும். அதனால் நிரலை செயல்படுத்த போதுமான தரவையே அந்த செயலிகள் நாடும். தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப பல்வேறு செயலிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அவைகள் இழப்பதற்கு ஏதும் இல்லை. ஆனால் இந்த செயலிகள் நம்முடைய சாட்கள் மற்றும் இதர தரவுகளை சேமித்து வைக்கிறது என்றால் அதனை அறிந்து கொள்ள கூட நம்மால் இயலாது ஏன் என்றால் இது போன்ற கோட்களில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது என்று கூறுகிறார் அவர்.

சாதாரண நாட்களில் ஒரு செயலி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயனாளர்களை பெற மாதங்கள் ஆகும். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான டவுன்லோட்கள் தினமும் ஏற்படுகிறது. சில பழைய செயலிகளும் இது போன்று அதிக அளவு டவுன்லோட் ஆகிறது. ஆனால் அதிக அளவு தரவுகளை சேமிக்க, கையாள, பாதுகாப்பினை உறுதி செய்ய போதிய அளவு திறன் இல்லாததால் புதிய பாதிப்புகளை தான் இவை உருவாக்கும் என்கிறார் அவர்.

மேலும் படிக்க : இது என்னடா டிக்டாக்’க்கு வந்த சோதனை! பல நாடுகளில் சிக்கலை சந்திக்கும் சீன செயலி

இதுபோன்ற செயலிகள் இந்திய சூழலுக்கு பொருந்துமா?

திடீரென இந்த செயலிகளின் வரவு அதிகரித்து வந்தாலும் கூட எவையும் நீண்ட காலத்திற்கோ, அல்லது உலகத்தரம் வாய்ந்த செயலிகளாக மாறுவதற்கோ தகுதியான செயலிகளாக இல்லை. பயனாளர்கள் விரைவாக, எளிதில் கிடைக்க கூடிய மற்றொரு செயலிகளுக்கு செல்வார்கள். மிகவும் குறுகிய காலத்திலேயே இது போன்ற செயலிகள் தோன்றும். ஆனால் நீண்ட காலத்திற்கு பயன்படும் வகையில் செயலிகளை உருவாக்க இது சரியான வாய்ப்பாகும் நெறும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.

உள் நாட்டிலேயே உருவாகும் ஆப்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டால் இந்தியா பயனடையாது. சில வெளிநாட்டு செயலிகளும் உள்ளன. அது நல்லதும் கூட. உள்ளூர் செயலிகள் உலகத்தர செயலிகளுடன் போட்டியிடும் போது தான் இந்த சிஸ்டம் முதிர்ச்சி அடையும். நிறைய இந்திய செயலிகள் அத்தனை நோக்கத்துடன் சந்தைப்படுத்தப்படவில்லை என்று சிமா கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tiktok
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment