Express Explained Sports news in tamil: துணைக்கண்டங்களில் நடக்கும் டி20 போட்டிகளில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பொதுவாக பேட்டிங்கை தேர்வு செய்து, அதிக போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள். சமீபத்தில், பாகிஸ்தானில் நடந்த 20 ஓவர் போட்டியில் 14 போட்டிகளில் 13 போட்டிகள் டாஸ் வென்று, நிர்ணயித்த இலக்கை துரத்த நினைத்த அணிகளே வென்றன. அதேபோல் கடந்த 2019 ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 61.4% போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்தன.
இது ஒரு புறம் இருக்க, தற்போது நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 20 ஓவர் கிரிக்கெட்போட்டிகளிலும் தொடர்கின்றன. தற்போதைய சூழலில் துணைக் கண்டத்தில் வெற்றி பெற ‘டாஸ் வெற்றி பெற வேண்டும், பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும்’ போன்ற மந்திரங்களை அணியின் கேப்டன் பயன்படுத்துகிறார்கள். துணைக்கண்டங்களில் டி20 போட்டி விளையாடும் அணிகள் ஏன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறார்கள்? இந்த போக்கு நடக்கவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் தீர்க்கமானதாக நிரூபிக்குமா? அதற்கான காரணங்களை இங்கு வழங்கியுள்ளோம்.
முதல் இன்னிங்ஸில் சேர்க்கஉள்ள ஸ்கோர் குறித்து தெளிவாக இல்லாதது
டி 20 போட்டிகளில் சராசரியாக வென்ற முதல் இன்னிங்ஸின் ஸ்கோர் எது? முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு 165 போதுமா என்று எப்படித் தெரியும்? இது பெரும்பாலான அணிகளுக்கு ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. மேலும் இங்கிலாந்து கேப்டன் ஈயோன் மோர்கன் அதை எதிர்கொள்வதில் சிரமம் மற்றும் உள்ளார்ந்த தெளிவின்மை பற்றி பேசியுள்ளார். இது டி 20 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்ய அணிகளையும் தூண்டுகிறது.
முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, பின்னர் பேட்டிங் செய்யும் அணிகள், முதல் இன்னிங்ஸில் அந்த அணியினர் சேர்த்த ரன்கள் குறித்த விபரம் முன்பே தெரிந்துவிடுகிறது. அதோடு ஆடுகளம் எப்படி உள்ளது என்பதும் அவர்களுக்கு தெரிகிறது. எனவே 200 ரன்களுக்கு மேல் இருந்தாலும் அணியில்லா பெரிய ஹிட்டர்களை களத்திற்குள் இறக்கி சீக்கிரமாக போட்டியை முடித்து விடுகிறார்கள். இதனால்தான் அணிகள் நிர்ணயித்த இலக்கை துரத்த விரும்புகின்றன, ”என்று இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் கூறினார்.
பவர் பிளே
ஒரு பெரிய ஸ்கோரைப் பதிவுசெய்யும் நோக்கில், முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழக்கின்றன. பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் பேட்ஸ்மேன்கள் பழமைவாத அணுகுமுறையை பின்பற்றி விக்கெட்டுகள் வீழ்வதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய லத்தீப் “பேட்ஸ்மேன்கள் இதை சற்று பழமைவாத முறையில் அணுக வேண்டும். தங்கள் விக்கெட்டுகளைப் பாதுகாபதில் கவனமாயிருக்க வேண்டும். டாட் பந்துகள் ஆவது பற்றி கவலைப்படக்கூடாது. மேலும் அவர்கள் செய்ய வேண்டியது பவுண்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும் ”என்று கூறியுள்ளார்.
மைதானத்தின் அளவு
டாஸ் வெல்வது மற்றும் இரண்டாவது பேட்டிங் செய்வது துணைக் கண்டத்தின் பெரிய மைதானங்களில் எதுவாக இருக்கும். ஆனால் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களுக்கு அந்த திட்டம் ஒத்து வாராது. “இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தில், டி 20 போட்டிகள் மிகக் குறைந்த அளவிலே விளையாடப்படுகிறது. அங்குள்ள மைதானங்கள் சிறியவையாக உள்ளதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் அவற்றை பொருட்படுத்தாது. மேலும் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தால் அந்த அணிக்கு கூடுதல் உதவியாகத்தான் இருக்கும். என்று லத்தீப் பரிந்துரை செய்துள்ளார்.
பனிப் பொலிவு
டி -20 உலகக் கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. அன்று நடக்கவுள்ள போட்டிகளில் பனிப்பொலிவு ஒரு காரணியாக இருக்கும். எனவே கேப்டன்கள் முதலில் பந்து வீசவே நினைப்பார்கள். பனி பந்தை ஈரமாக்குவதோடு, பந்து வீச்சாளர்களின் கையில் இருந்து பந்தை நழுவு செய்கிறது. அது சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் முற்றிலும் பாதிக்கிறது. கனமான பனிப் பொலிவு இல்லாதபோது, அது ஆடுகளத்தின் மாறுபாடுகளை நடுநிலையாக்குகிறது. மேலும் நிதானமாக விளையாடுவதற்கு உதவுகிறது.
“பனி செயல்திறன் மிக்கது மற்றும் இரவு 8 மணியளவில் பந்தை அதீத கனமாக்குகிறது. எனவே, போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கினால், முதலில் பேட்டிங் செய்யும் அணி கடைசி 30 நிமிடங்களில் அதாவது ஆறு முதல் ஏழு ஓவர்கள் வரை, பந்துகளை நிதானமாக பார்த்து பொறுமையாக விளையாட முடியும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி மைதானத்திற்குள் வரும்போது (இரவு 9 மணியளவில்), அவர்களின் பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கத்திலிருந்தே ஒரு தனித்துவமான நன்மை இருக்கும் ”என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆய்வாளர் பிரசன்னா அகோரம் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil