Om Marathe
Extraordinary powers in the Constitution to allow a divorce : ஒரு திருமண பந்தம் இதற்கு மேலும் சரிவராது என்ற ரீதியில், விவாகரத்து கோரிய வழக்கு ஒன்றில் தீர்ப்பினை கடந்த வாரம் வழங்கியது உச்ச நீதிமன்றம். அதற்காக இந்திய அரசியல் அமைப்பின் 142வது உட்பிரிவின் கீழ் உள்ள அசாத்திய அதிகாரங்களை பயனபடுத்தி தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதியமன்றம். இந்து திருமண சட்டத்தின் படி, மனதளில் முறிந்து போன உறவு என்பதன் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுவதில்லை. ஆனாலும், பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அதன் முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்தி இது போன்ற விவகாரங்களில் முழுமையான நீதியை வழங்கியுள்ளது. இந்து திருமணச் சட்டம், 1955-ல் இந்துக்கள் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள், புத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் பொருந்தும்.
இந்த சட்டத்தின் 13வது பிரிவின் கீழ், ”வேறொரு நபருடன் உறவு கொள்ளுதல்”, ”கொடுமையாக நடத்துதல்”, ”இந்து மதத்தில் இருந்து வேறொரு மதத்திற்கு மாறுவது”, “சரி செய்ய இயலாத மனநிலையில்” இருத்தல் போன்ற காரணங்களால் விவாகரத்தினை தன் துணையிடம் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ள இயலும். மேலும் பிரிவு 13பி மூலமாக, பரஸ்பர புரிதலின் பெயரில் திருமண பந்தங்களை முடிவுக்கு கொண்டு வர இயலும். சிறப்பு திருமண சட்டம் 1954-ன் கீழ் பிரிவு 27, இந்த வகை திருமணங்களில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்துகிறது. ஆனால் இவ்விரண்டு சட்டத்திலும் தோல்வியுற்ற, மீள இயலாத திருமண முறிவுகளினால் அந்த பந்தங்களில் இருந்து வெளியேற எந்த விதமான விதிமுறைகளையும் மேற்கோள்காட்டவில்லை.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் விரிவாக படிக்க
மனதளவில் முறிந்த திருமண உறவுகள்
டிசம்பர் 17ம் தேதி சஞ்சை கிஷான் கௌல் மற்றும் கே.எம். ஜோசப் அடங்கிய அமர்வு, ஆர். ஸ்ரீநிவாஸ் குமார் மற்றும் ஆர். ஷமேதாவின் திருமண ரத்து வழக்கில் முக்கிய விவாகரத்து வழங்கியது. இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பினை நன்றாக ஆராய்ந்த பின்னரே இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டது. ஒரு திருமண பந்தம் முற்றிலும் வொர்க்அவுட் ஆகாத நிலை, உணர்ச்சி ரீதியாக மீட்கப்பட இயல்லாத நிலை, இனி இருவரும் இணைந்து வாழமுடியாத நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வெகு சில வழக்குகளே இது போன்ற சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது. இப்படியான மனரீதியான முறிவுகள் ஏற்பட்ட பின்னர் அந்த திருமண உறவானது பயனற்றது தான். அதனை தொடரும் பட்சத்தில் மேலும் மேலும் உணர்ச்சி ரீதியிலான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும். இருவரும் பிரிந்து இருப்பது தான் நலம்.
சட்டம் 142 உச்ச நீதிமன்றங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. சட்டம் சில சமயங்களில் முழுமையான நீதியை வழங்க இயலாமல் போகும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் தீர்ப்பினை வழங்கலாம். பல சமயங்களில் ஒரு திருமணம் மனதளவில் முடிவுக்கு வந்த பின்பு, நீதிமன்றம் இந்த சிறப்பு அதிகாரத்தின் கீழ் அந்த திருமண பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இந்திய சட்ட ஆணையம் இதற்கு முன்பு இரண்டு முறை, மனதளவில் முறிந்த உறவு என்பதின் அடிப்படையில் இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்டம் விவாகரத்து வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. சட்ட ஆணையம் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டில் தனது 71 வது அறிக்கையிலும், 2009 இல் 217 வது அறிக்கையிலும் இந்த திருத்தங்களை பரிந்துரைத்தது.
அரசியலமைப்பின் பிரிவு 142
பிரிவு 142 (1) இன் கீழ், “உச்சநீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி இது போன்ற உத்தரவை வழங்கலாம் அல்லது இதற்கு முன் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கிலும் முழுமையான நீதியை நிலை நிறுத்த தேவையான உத்தரவை பிறப்பிக்கலாம். இது பொதுவாக மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் முழுமையான நீதியை" உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இது போன்ற அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த மாதம், இது அயோத்தி தீர்ப்பின் போது பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.