Advertisment

“லீக்கான” 533 மில்லியன் முகநூல் பயனாளர்களின் தரவுகள்; இந்தியர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்?

author-image
WebDesk
New Update
Facebook Data Leak : What’s unique about leak of 533 million Facebook accounts, how are Indian users affected

Deeptesh Sen , Rounak Bagchi

Advertisment

Facebook Data Leak : இந்த ஆண்டின் ஆரம்பத்தில், 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியன் முகநூல் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்தது. இது தொடர்பாக ஜனவரியில் ஆலோன் கால் என்பவர் முதன்முறையாக தகவல் அளித்தார். டெலிகிராம் பாட்களை பயன்படுத்தி செல்போன் எண்களை இலவசமாக விற்பதாக கூறினார் ஹட்சன் ராக் என்ற சைபர் புலனாய்வு நிறுவனத்தில் பணியாற்றும் ஆலோன். முகநூலில் இருக்கும் சாத்தியங்களை பயன்படுத்தி இந்த பாட் செல்போன் எண்களை பெற்றுள்ளது.

முகநூலில் தனிநபர் தரவுகள் கசிவதாக கூறப்படுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் இது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் சிக்கியுள்ளது முகநூல். இதில் மிக முக்கியமாக கூற வேண்டும் என்றால் அது கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் தான். அரசியல் சார் நிறுவனம் ஒன்று முகநூலில் இருந்து 87 மில்லியன் நபர்களின் தனிநபர் தரவுகளை பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய விவகாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விசயம் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

தற்போது வெளியான தரவுகளின் தன்மை என்ன? அது எவ்வாறு கசிந்தது?

பெயர், முகநூல் அடையாளம், முகவரி, அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, வேலை செய்யும் இடங்கள், பிறந்த தேதி, முகநூலில் கணக்கு துவங்கிய நாள், உறவு, மற்றும் பயோ ஆகியவை அடங்கியவை தற்போது வெளியான தரவுகள். இந்த தரவுகளில் பாஸ்வேர் மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை.

முகநூலின் ontact importer feature-ல் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் பெறப்படும் தகவல்களை ஸ்கிராப்பிங் செய்து இந்த தரவுகள் பெறப்பட்டது. முகநூலின் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் மைக் க்ளார்க், ஹேக்கிங்க் செய்து திருடப்பட்ட தரவுகள் இவை இல்லை. ஆனால் ஸ்கிராப்பிங் மூலம் பெற்றுள்ளனர் என்று ப்ளாக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் கிடைக்கக் கூடிய பொதுவான தகவல்களை பெற ஸ்கிராப்பிங் என்பது மிகவும் சாதாரணமாக பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஸ்கிராப்பிங் என்பது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளை மறுபடியும் இணையத்தில் கிடைக்குமாறு செய்தது முகநூல் சேவையின் விதிமுறை மீறல்களாகும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றில், இன்ஸ்டகிராமில் உள்ள காண்டாக்ட் இம்போர்ட்ஸ் சிறப்பம்சத்தில் உள்ள ஒரு சிறிய பாதுகாப்பு குறையை பயன்படுத்தி ஒரு நபர் பயனாளர் பெயர்கள், போன் நம்பர்கள், இன்ஸ்டகிராம் கணக்குகள், அக்கௌண்ட் ஐ.டி. நம்பர்கள் ஆகியவற்றை பெற்றுவிட முடியும் என்பதை முகநூல் உறுதி செய்ததாக அவர் கூறினார். முகநூல் நிறுவனம் அதற்கு பின்னர், இது குறித்து எங்களுக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளது.

தற்போது இந்த கசிவு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அந்த மீறலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளது.

கசிந்த தரவுத் தொகுப்பில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்ணும் உள்ளன என்பதை கூறி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்த சைபர் ஆராய்ச்சியாளர் டேவ் வாக்கர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, , “பேஸ்புக்கை மன்னிப்பது கடினம், ஏனெனில் இந்த பிரச்சினை 2017 ஆம் ஆண்டில் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அதாவது தரவுகள் கசிய துவங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. 21 வயது பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளார் முகநூலில் இருக்கும் பாதகமான அமைப்பை பயன்படுத்தி எப்படி ஒரு மூத்த அரசியல் தலைவரின் தகவல்களை பெற முடியும் என்று ப்ருசெல்ஸ் வானொலி நிலையம் ஒன்றில் லைவ்வாக காண்பித்தார். ஆனால் அப்போது முகநூல் நிர்வாகம் அதனை நிராகரித்தது. மேலும் அவர்களின் பாதுகாப்பு அம்சத்தில் எந்தவிதமான தோல்வியும் இல்லை என்றும் கூறியது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு பயனர் அரை பில்லியன் மக்களின் தரவை பெற்றார்.

இந்த தரவு மீறலின் தனித்துவம் என்ன?

சமரசம் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கையும், ஆன்லைனில் வெளியிடப்பட்ட தரவுகளின் அளவும் மிகப்பெரிய மீறல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வெளிப்படுத்தப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளன, அவற்றில் அமெரிக்காவில் 32 மில்லியன் நபர்களின் தரவுகளும் இங்கிலாந்தில் 11.5 மில்லியன் பயனர்கள் தரவுகளும் இந்தியாவில் 6 மில்லியன் பயனர்களின் தரவுகளும் அடங்கும்.

ரெடிட் ஃபோரம்களில் பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த மீறலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாடாக இருந்தால், இது சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகையாக இருக்கும்.

“தரவின் அளவு மற்றும் பகிரப்பட்ட பொதுவாக கிடைக்கும் தன்மை ஆகியவை தற்போதைய மீறல்களை கடந்த காலங்களில் இருந்து வேறுபடுத்துகின்றன. அரை பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுத்தளம் எங்களிடம் உள்ளது, இது அனைத்து பேஸ்புக் பயனர்களில் 20% மட்டுமே என்று வாக்கர் கூறினார்.

கசிந்த 61 லட்சம் இந்தியர்களின் தரவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த போது சில முக்கியமான விசயங்கள் தெரிந்த வந்துள்ளன. தரவை ஆய்வு செய்யும் போது, பெருநகரங்களில் மிகவும் மோசமான அளவு டெல்லி வாழ் மக்களின் தரவுகள் பெறப்பட்டன. பெறப்பட்ட தரவுகளில் டெல்லியில் மட்டும் 1,55,00 நபர்களின் தரவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இருந்து 1,36,000 நபர்களின் தரவுகளும், கொல்கத்தாவில் 96 ஆயிரம் நபர்களின் தரவுகளும், சென்னையில் இருந்து 39 ஆயிரம் நபர்களின் தரவுகளும், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் முறையே 48 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் நபர்களின் தரவுகளும் திருடு போயுள்ளது. 49 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 12.5 லட்சம் பெண் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது.

publive-image

கசிந்த தரவுகளில் தனித்துவமாக காணப்படுவது என்னவென்றால் அதிக அளவில் வெளியிடப்பட்ட செல்போன் எண்கள் தான் என்கிறார் ட்ராய் ஹண்ட். தங்களின் தனித்தரவுகள் வெளியாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவும் HaveIBeenPwned என்ற இணைய சேவையில் பணியாற்றி வருகிறார் ட்ராய் ஹண்ட். இந்தியன் எக்ஸ்பிரசிடம் பேசிய அவர், ஆனால் இந்த விவகாரத்தில் முகநூல் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் தான் கசிந்துள்ளது என்றும், இது கிட்டத்தட்ட உலக அளவிலான மிகப்பெரிய போன் புக் பொதுவெளியில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

கசிந்த தரவுகள் முதலில் எங்கே காணக்கிடைத்தது?

500 மில்லியன் முகநூல் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய மிகப்பெரிய டேட்டா பேஸ் முதலில் டார்க் வெப்பில் பகிரப்பட்டது. இது சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் செயல்பாடுகள் மற்றும் திருடப்பட்ட தகவல்களை விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு இணையமாகும். இது உலகெங்கும் உள்ள சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான தரவுகளை பெற்றுக் கொள்ள இருக்கும் ஒரு இடமாகவே உள்ளது.

ஆரம்பத்தில் தரவுதளத்தில் ஆப்பரேட்டர்கள் டெலிகிராம் பயனர்களை ஒரு கட்டணத்திற்கு ஈடாக டேட்டாபேஸ் குறித்து வினவ அனுமதித்தனர். , இதன் மூலம் மில்லியன் கணக்கான பேஸ்புக் கணக்குகளுடன் தொடர்புடைய தொலைபேசி எண்களைக் காண முடிந்தது. இருப்பினும், சமீபத்தில் ஒரு ஹேக்கர் முழு தரவுத்தளத்தையும் டார்க் வெப்பில் இலவசமாக கிடைக்க செய்த போது, ஒருவரால் 533 மில்லியன் நபர்களின் தனிதரவுகளையும் அறிந்த கொள்ள வகை செய்தது.

டார்க் வெப் மற்றும் இதர பகிர் தளங்களில் இந்த தரவுகள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. இதனை பயன்படுத்தும் பயனர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக சட்டத்திற்கு புறம்பாக இந்த தரவுகளை பயன்படுத்தும் நபர்காள். உலகம் முழுவதும் சட்டங்கள் வேறாக இருக்கின்றன. ஆனால் இந்த காரணத்திற்காக கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளும் பாதீக்கப்படும். ஒவ்வொரு முறையும் தரவுதளம் விற்கப்படும் போதும் ​​தரவு பழையதாகவும் குறைவாகவும் அரிதாக மாறும் போது மதிப்பு குறைகிறது. இந்தத் தரவை கிடைக்கச் செய்த நபர் 10,000 டாலர் செலுத்தியதாகக் கூறுகிறார், அது ஒரு துல்லியமான விலையாகத் தோன்றும், ஆனால் முன்பு அதை வாங்கியவர்கள் அதிக பணம் செலுத்தியிருக்கலாம், ”என்று டேவ் வாக்கர் கூறியுள்ளார்.

இவ்வளவு மதிப்புள்ள ஒரு தரவை இலவசமாக தர காராணம் என்ன என்று கேட்ட போது , பயனர்கள் பெரிய அளவில் மலிவாக விற்க அல்லது தளங்களில் தங்கள் நற்பெயரை அதிகரிக்க இதைச் செய்வார்கள். இந்தத் தரவு கிடைக்கக்கூடிய இடத்திற்கு மக்களை நேரடியாக வழிநடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதைக் கண்டுபிடிக்க யாராவது தூண்டினால் இது ஒரு சவாலாக இருக்காது என்று வாக்கர் கூறினார்.

publive-image

இந்த தரவை எதற்காக பயன்படுத்தலாம்?

செல்போன் எண்கள், முகவரிகள் உள்ளிட்ட பல தகவல்கள் கொண்ட இந்த கசிவின் மூலம் தனியுரிமை கேள்விக்குறியாகியுள்ளது.

ஃபிஷிங் தாக்குதல்களுக்கும், குறுஞ்செய்திகள், மார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் இலக்கு விளம்பரங்களுக்கும் ஸ்பேம் அனுப்புவதற்குப் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொலைபேசி எண்கள் பொதுவில் கிடைப்பது அடையாள சரிபார்ப்புக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும்போது கவலை அளிக்கிறது. ஆன்லைன் கொடுப்பனவுகள் உட்பட பெரும்பாலான டிஜிட்டல் சேவைகளுக்கு, இப்போதெல்லாம் சரிபார்ப்புக்காக அங்கீகார குறியீடுகள் அனுப்ப தொலைபேசி எண்கள் தேவைப்படுகின்றன.

டேவ் வாக்கர் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஃபிஷிங் என்று கூறினார், அங்கு தாக்குதலுக்கு நம்பகத்தன்மையைச் சேர்க்க ஸ்பேம் செய்திகளில் துல்லியமான தரவு சேர்க்கப்படலாம். இந்த தரவுகள் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை எளிதாக ஒருவர் பிஷிங் அட்டாக்கிற்கு பயன்படுத்தலாம். ஆனாலும் பலர் தங்களின் அலைபேசி எண்களை எம்.எஃப்.ஏவாகவும், கணக்குகளை திரும்பப் பெறும் அக்கௌண்ட் ரெக்கவரி எண்களாகவும் பயன்படுத்துகின்றனர். மக்களின் அலைபேசி எண்களை திருடுவது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தனிநபர்கள் உருவாக்கிக் கொள்ள பயன்படுகிறது என்று அவர் கூறினார்.

உயர்மட்ட அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தொடர்புகள் எளிதில் கிடைக்க கூடிய வகையில் உள்ளது. உதாரணமாக முகநூல் நிறுவனரின் அலைபேசி எண்ணை நாங்கள் கண்டு பிடித்தோம் என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எஃப். செக்யூர் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சி அதிகாரி மிக்கோ ஹைப்போனென் வாக்கரின் கருத்தில் உடன்பட்டார். அரசியல்வாதிகள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர்களுக்கு பெரிய சேதம் ஏற்படும். தங்களின் எண்களை மறைமுகமாக வைக்க அவர்களுக்கு காராணம் இருந்த போதிலும் அது தற்போது கசிந்துள்ளது. ஃபேஸ்புக்கிற்கு நன்றி என்று கூறிய அவர் ”உங்களின் செல்போன் எண்கள் ஹேக் செய்யப்படாமல் ஸ்கிராப்பிங் மூலம் பெறப்பட்டிருப்பது அவ்வளவு மோசமானது இல்லை என்று உறுதி அளிக்கிறது ஃபேஸ்புக். ஆனால் பட்டியலிடப்படாத எண்ணை பராமரிக்க முயற்சிக்கும் பயனர்களுக்கு, ஹேக்கிங் மற்றும் ஸ்கிராப்பிங் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு அவ்வளவு முக்கியமல்ல என்றும் கூறினார்.

ஜெய்ப்பூர் காவல்துறையின் சைபர் செல் பிரிவுடன் தொடர்பில் இருக்கும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி முகேஷ் சௌத்ரி இது குறித்து பேசுகையில், இந்த கசிவுகள் வரும் போது மார்க்கெட்டிங்கிற்காக இதனை பயன்படுத்துவது தான் இலக்காக இருக்கும். ஹேக்கர்கள் பெறப்பட்ட தரவை நகரம், வயது, பாலினம், மற்றும் பணம் செலுத்தும் அளவு ஆகியவற்றை பிரித்து தனியார் நிறுவனங்களுக்கும் அரசு கட்சிகளுக்கும் விற்பனை செய்து விடுவார்கள். , மீறலில் இருந்து பெறப்பட்ட தொலைபேசி எண்களை அவர்கள் பயனர் ஐடி அல்லது கடவுச்சொல்லாகப் பயன்படுத்தி ஒருவரின் சுயவிவரத்தை உள்ளிட்டு பின்னர் பணத்தை கோருகிறார்கள். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் இது மிகவும் பொதுவான நிகழ்வு. சில நேரங்களில், வி.வி.ஐ.பி-களுக்கு சொந்தமான எண்களைக் காணும்போது, ​​அவர்கள் அதை நல்ல விலைக்கு விற்கிறார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

முகநூல் நிறுவனத்தின் பதில் என்ன? பாதுகாப்பு நிபுணர்கள் என்ன கூறுகின்றனர்?

இந்த தரவுகள் 2019ம் ஆண்டு ஸ்கிராப்பிங் செய்யும் போது பெறப்பட்டதாகும் என்று மைக் க்ளார்க் ப்ளாக்கில் குறீப்பிட்டுள்ளார். இது இணைய சேவைகளை அகற்றுவதற்கான தளக் கொள்கைகளை வேண்டுமென்றே மீறும் மோசடிகாரர்களுடன் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டிருக்கும் உறவைக் காட்டும் மற்றுமொரு உதாரணமாகும்.நாங்கள் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, 2019 ஆம் ஆண்டில் இந்தத் தரவைத் பெற வழிசெய்த குறிப்பிட்ட பிரச்சினை இனி இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்”

செப்டம்பர் 2019 க்கு முன்னர் எங்களின் கான்டாக்ட் இம்போர்ட்டர் பிரியரை பயன்படுத்தி தீங்கு ஏற்படுத்தும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மக்களின் பேஸ்புக் சுயவிவரங்களிலிருந்து தரவுகள் பெறப்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம். இதனை அறிந்து நாங்கள் கான்டாக்ட் இம்போர்ட்டரில் மாற்றங்களை செய்தோம்.

ஸ்கிராப்பிங் நடந்தபோது மேடையில் பொதுவில் இருந்த தகவல்கள் மட்டுமே சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று பேஸ்புக் கூறியிருந்தாலும், தங்களின் அலைபேசி எண்களை ப்ரைவசி செட்டிங்கில் மாற்றி இருந்தவர்களும் கூட இதனால் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

முகநூல் வைத்திருக்கும் தரவுகளின் அளவு கூட கூட பாதுகாப்பு மிகப்பெரிய விசயமாக இருக்கும். இந்த கசிவு கடைசி என்றும் கூறிவிட இயலாது. அவர்களின் அச்சங்களை ஏறக்குறைய உறுதிப்படுத்தி, மீறப்பட்ட பேஸ்புக் கணக்குகளின் புதிய தரவு தொகுப்பு இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இது ஒரு புதிய டெலிகிராம் போட் மூலம் அணுகப்படலாம், இது பணத்திற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட பக்கத்தை விரும்பிய பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்களை வெளிச்சப்படுத்துகிறது என்று வைஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான மெக்காஃபி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ராஜ் சமனி, அனைவருக்கும் ஒரு பெரிய கவலையாக உள்ளது என்னவென்றால், மில்லியன் கணக்கான பயனர்களின் கசிந்த தரவு இப்போது ஆன்லைனில் எளிதாக கிடைக்கிறது என்பது தான். முகநூலுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சினையை கண்டுபிடித்து சரிசெய்தார்கள் என்ற அவர்களின் பதில் மில்லியன் கணக்கான மக்களுக்கு வசதியாக இருக்க வாய்ப்பில்லை, அதன் தனிப்பட்ட தரவு இப்போது அணுகக்கூடியது மற்றும் மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படலாம். கிடைக்கப்பெற்ற தரவு என்பது நாம் எளிதில் மாற்ற முடியாத விஷயங்கள் என்று கூறினார்.

இந்த தரவு பழையதாக இருந்தாலும், அது மாறாதது என்று ட்ராய் ஹன்ட் ஒப்புக் கொண்டார் - மக்கள் தங்கள் முகவரிகள், தொலைபேசி எண்கள் அல்லது கசிவின் ஒரு பகுதியாக இருக்கும் பல விவரங்களை மிக அரிதாகவே மாற்றுகிறார்கள்.

Technology Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment