Advertisment

பணவீக்க இலக்கு: ரிசர்வ் வங்கி நவ.3 சிறப்பு கூட்டம் ஏன்?

ரிசர்வ் வங்கி பணவீக்க இலக்கை அடையத் தவறிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.

author-image
WebDesk
New Update
Three key takeaways from RBIs report on state govt Budgets

ரிசர்வ் வங்கியின் மாநில அரசின் பட்ஜெட் அறிக்கையில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வியாழக்கிழமை (அக். 27) வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று கூடுதல் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தை நடத்துவதாகக் கூறியுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டை ஆர்பிஐ பராமரிக்கத் தவறியதால் இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று தொடர்ச்சியான காலாண்டுகள் அல்லது தொடர்ச்சியாக ஒன்பது மாதங்களுக்கு 2-6 சதவீத வரம்பிற்குள் பணவீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில் சிறப்பு கூட்டம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சட்டம், 1934 இன் பிரிவு 45ZN இன் விதிகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) ஒழுங்குமுறை விதி 7 மற்றும் பணவியல் கொள்கை செயல்முறை ஒழுங்குமுறை, 2016 ஆகியவற்றையும் மத்திய வங்கி குறிப்பிடுகிறது.

RBI சட்டத்தின் பிரிவு 45ZN என்ன சொல்கிறது?

2016 ஆம் ஆண்டில் பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட பணவியல் கொள்கையை RBI ஏற்றுக்கொண்ட பிறகு, சட்டத்தின் 45ZN இன் விதிகளின் கீழ் MPC கூட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
ரிசர்வ் வங்கி பணவீக்க இலக்கை அடையத் தவறினால், தோல்விக்கான காரணங்களை விளக்கி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகிறது.

மேலும், அந்த அறிக்கையில், மத்திய வங்கி எடுக்க உத்தேசித்துள்ள சரிசெய்தல் நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்ட தீர்வுகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பணவீக்க இலக்கை அடைய மதிப்பிடப்பட்ட நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

மற்ற ஒழுங்கு விதி 7 என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பணவியல் கொள்கை செயல்முறை ஒழுங்குமுறைகள், 2016 இன் ஒழுங்குமுறை 7 விதி ஆகியவை அரசாங்கத்திற்கு அனுப்பப்படும் அறிக்கையை விவாதிக்கவும், வரைவு செய்யவும், வழக்கமான கொள்கை செயல்முறையின் ஒரு பகுதியாக ஒரு தனி கூட்டம் திட்டமிடப்பட வேண்டும் என்று கூறுகிறது.

பணவீக்க இலக்கை பராமரிப்பதற்கு MPC பொறுப்பு என்றாலும், அறிக்கையை ஆர்பிஐ தயாரிக்கும். இதுதொடர்பாக பணவியல் கொள்கை கூட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். இந்த நிலையில் சிறப்பு கூட்டம் நவம்பர் 3ஆம் தேதி கூடுகிறது.

ரிசர்வ் வங்கி எப்போது அறிக்கையை அனுப்ப வேண்டும்?

ரிசர்வ் வங்கி பணவீக்க இலக்கை அடையத் தவறிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இந்நிலையில், செப்டம்பர் மாத சிபிஐ பணவீக்க விவரம் அக்டோபர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. எனவே, ரிசர்வ் வங்கி அரசுக்கு அறிக்கை அனுப்ப நவம்பர் 12ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

MPC கூட்டங்களின் அட்டவணை என்ன?

தற்போது, MPC ஒரு நிதியாண்டில் ஆறு முறை கூடுகிறது, இது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும். முழு நிதியாண்டுக்கான MPC கூட்டங்களின் அட்டவணை முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டின் தொடக்கத்தில், எம்பிசி ஏப்ரல் 6-8, ஜூன் 6-8, ஆகஸ்ட் 2-4, செப்டம்பர் 28-30 ஆகிய தினங்களில் கூடுகிறது. அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் 5-7 மற்றும் பிப்ரவரி 6-8 வரை நடைபெறுகிறது.

இந்த அட்டவணையின்படி, MPC ஏற்கனவே ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கூடியது. இருப்பினும், MPC ஆனது மே 2-4, 2022 வரை சுழற்சிக் கூட்டத்தை நடத்தியது,
இதில் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக உயர்த்தியது.

இந்த நிலையில், நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டமும் நிதியாண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அட்டவணைக்குப் புறம்பாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment