/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-03T195717.690.jpg)
Harish Damodaran
விவசாயம் கர்ஜிக்கிறது என்று சொல்வது மிகைப்படுத்தலாக இருக்கலாம். ஆனால், இது நிச்சயமாக இன்றைய கோவிட்-பேரழிவிற்குள்ளான இந்திய பொருளாதாரத்தில் வழக்கம்போல வணிகத்திற்கு மிக நெருக்கமான ஒரு துறையாகும்.
விவசாய விதைப்பு புள்ளிவிவரத்தில், தற்போதைய காரிஃப் (பருவமழை) பருவத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை 13.9% அதிகமான பரப்பளவை நடவு செய்துள்ளனர். மேலும், சணல் தவிர, அனைத்து முக்கிய பயிர்களிலும் நடவு செய்துள்ள ஏக்கர் பரப்பளவு அதிகமாக உள்ளது. (அட்டவணை 1).
பயிரிடுவது அதிகரித்துள்ளதற்கு பெரும்பாலும் இயல்பான தென்மேற்கு பருவமழைதான் காரணமாக அமைந்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா முழுவதும் 453.3 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த இரண்டு மாதங்களுக்கான நீண்ட கால மழை பொழிவு சராசரி 452.2 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இதற்கு மாறாக 412.3 மி.மி மழை பொழிவு பதிவாகி உள்ளது. இந்த மழை பொழிவு 8.8% சதவீதம் பற்றாக்குறைவு ஆகும்.
இரண்டாவது புள்ளிவிவரம் விவசாய நடவடிக்கைகளுக்கு தடையின்றி விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்தது குறித்ததாகும். ஜூலை மாதம் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. (அட்டவணை 2).
இந்த வளர்ச்சி மீண்டும், பருவமழையுடன் ஒரு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 32% குறைவாக இருந்தது. ஜூலை 24ம் தேதி வரை ஒட்டுமொத்த மழைபொழிவு பற்றாக்குறை 18.6% ஆகவும் இருந்தது.
அதன்பிறகு, ஒரு அற்புதமான மீட்சியைத் தொடர்ந்து மழைக்காலம் (ஜூன்-செப்டம்பர்) மாதஙக்ளில் 10.4% உபரி மழையுடன் முடிவடைந்தது. ஆனால் அதற்குள் காரீஃப் விதைப்பு பட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது. பருவமழையின் இரண்டாம் பாதியின் நன்மைகள், நிலத்தடி நீர் அளவை கணிசமாக உயர்த்தவும் அணை நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்கும் வழிவகுத்தது. ரபி பருவ (குளிர்கால-வசந்த) பயிர்கள் மட்டும் அறுவடை செய்யப்பட்டன. முந்தைய ஆண்டை விட ரபி பருவ பயிரிடுதல் 9.5% அதிகரித்திருந்தது. இது நவம்பர் முதல் உர விற்பனையிலும் பிரதிபலித்தது.
தற்போது நடந்துகொண்டிருக்கும் காரிஃப் பருவத்தின் அடிப்படையில் தொடரும் இந்த போக்கானது, 2019-20 ரபி பருவத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக ஒரு பயிரை உற்பத்தி செய்யும் போக்கின் தொடர்ச்சியாகும்.
உழவு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான இயந்திரங்களின் போக்குவரத்துக்கு கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக அளவில் விளைச்சலை அறுவடை செய்யலாம்.
இந்திய உணவுக் கழகமும் மாநில நிறுவனங்களும் 389.75 லட்சம் டன் (எல்.டி) கோதுமையை எல்லா நேரத்திலும் வாங்கியுள்ளன. 2019-20 ஆண்டு பயிரிடப்பட்டதிலிருந்து 504.86 லட்சம் டன் அரிசியையும் (பொதுமுடக்கத்திற்குப் பிறகு 111.18 லட்சம் டன்னும்) வாங்கியுள்ளன.
இது, பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் கடுகு, கொண்டைக் கடலை மற்றும் கடலை ஆகியவற்றை நேரடி பரிமாற்றங்களின் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் பண்ணை பொருளாதாரத்தில் அரசு சுமார் ரூ.1,38,000 கோடி பணப்புழக்கத்தை செலுத்தியது.
இந்த காரீஃப் பருவத்தின்போது மேற்கண்ட பணப்புழக்கம் உற்பத்திக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான மண்ணின் ஈரப்பத சூழலை விவசாயிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து சரியாக உபரி மழை பெய்தது. அது குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு முந்தைய காலம் வரை நீடித்தது. இதனால், விவசாயிகள் வேகமாக விதைத்து, உரங்கள் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளில் முதலீடு செய்தனர்.
நிச்சயமற்ற ஆதாரங்கள்
இருப்பினும், விவசாயத்திற்கு நிச்சயமற்ற மூன்று ஆதாரங்கள் தற்போது உள்ளன. முதலாவது மழைக்காலத்திலிருந்து ஜூன் மாதத்தில் நாட்டிற்கு 17.6% இயல்பான மழை பெய்தது. ஆனால் ஜூலை மாதம் 9.9% பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டது. அது மாதத்தின் இரண்டாவது பாதியில் 19.2% ஆக விரிவடைந்தது. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு நீண்ட கால சராசரி 104% ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதில் 8% கூடக் குறைவு இருக்கலாம்.
இந்தியப் பெருங்கடலின் இருமுனைப் பகுதி சூழ்நிலையில் மீதமுள்ள மழைக்காலத்தின் பகுதி தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், விதர்பா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஈரப்பதம் தொடங்கும் பகுதிகளில் உள்ளன. இது பயிர்களின் வளர்ச்சியில் ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த சில நாட்களில் இது பிரச்னையாகும்.
இரண்டாவது அச்சுறுத்தல் பாலைவன வெட்டுக்கிளிகளிலிருந்து வந்துள்ளது. இந்தோ-பாகிஸ்தான் எல்லையின் இருபுறமும் இந்த பூச்சிகளின் இனப்பெருக்கம் நடந்து வருவதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது. "இந்தியாவில், ஜோத்பூருக்கும் சுருவுக்கும் இடையில் ராஜஸ்தானின் பரந்த பகுதியில் ஏராளமான வளர்ந்த வெட்டுக்கிளி கூட்டங்கள் திரளாக முட்டையிடுகின்றன. அதே நேரத்தில் அந்த இடத்திலிருந்து குஞ்சு பொறித்து பறந்து செல்வது பாலோடியிலிருந்து குஜராத் வரை தெற்கே நிகழ்ந்தன. இந்த இனப்பெருக்கத்தின் விளைவாக முதிர்ச்சியடையாத சிறகுகள் நிறைந்த பெரிய வெட்டுக்கிளிகள் கூட்டங்கள் வளரும் காரீப் பருவ பயிரை உண்ணத்தொடங்கும்போது சிக்கல் ஏற்படும். அரசு நிறுவனங்கள், தங்கள் பங்குக்கு ஜூலை 30ம் தேதி வரை 10 மாநிலங்களில் கிட்டத்தட்ட 4.57 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் மற்றும் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மே-ஜூன் மாதங்களில் முந்தைய வெட்டுக்கிளி கூட்டம் படையெடுத்தபோது ரபி பருவ பயிர்கள் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டிருந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இறுதியான அழுத்தம் பாலில் இருந்து வருகிறது. இந்தியாவில் பால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்க்கான ஆதாரமாகவும் பெரும்பாலான விவசாயிகளின் பணப்புழக்கத்துக்கு காரணமாகவும் உள்ளது. மார்ச் 25ம் தேதி பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததிலிருந்து பால் விலை லிட்டருக்கு ரூ.10 அல்லது அதற்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. இது நிச்சயமாக கிராமப்புற வருமானத்தை பாதிக்கும். நாட்டில் மதிப்பிடப்பட்ட 50 கோடி லிட்டர் தினசர் பால் உற்பத்தியில் 12 கோடி முதல் 12.5 கோடி லிட்டர் பால் அமைப்பாக்கப்பட்ட கூட்டுறவு மற்றும் தனியார் துறை பால்பண்ணைகளால் கையாளப்படுகிறது. லிட்டருக்கு ரூ.10 விலை வீழ்ச்சி என்பது ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.125 கோடி வருமான இழப்பு என்று பொருள் ஆகும். எருமைகள் கன்றுகள் ஈனுவதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கும். இயற்கையில் வெப்பநிலை குறைவதால் மேம்பட்ட தீவனம் குறைகிறது இதனால் இழப்புகள் அதிகரிக்கக்கூடும். மந்தமான திருவிழா காலமும் பால் சார்ந்த இனிப்புகளுக்கான குறைவான தேவையும் இந்த பிரச்னைகளுக்கு உதவப்போவதில்லை.
கோவிட் கட்டவிழ்த்துவிட்ட பொருளாதார இருட்டுக்கு மத்தியில் விவசாயம் இப்போது வரை ஒரு பிரகாசமான தீப்பொறியாக இருந்து வருகிறது. ஆனால், வரும் நாட்கள் பலவீனமான இடங்களையும் அம்பலப்படுத்தக்கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.