விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பேசப்படும் தீப் சிது: யார் இவர்?

Farmers Protest March in Delhi : விவசாய சங்கங்களை விட சிதுவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

1984 ஆம் ஆண்டில் முக்த்சர் மாவட்டத்தில் பிறந்தவர் தீப் சிது. சட்டம் பயின்ற இவர், ஹன்ட் தி கிங்பிஷர் காலண்டர் என்ற விருதை பெற்ற பின், பார் கவுன்சிலில் இருந்து விலகி திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.

2015 ஆம் ஆண்டு ராம்தா ஜோகி  என்ற இந்திப் படத்தில் அறிமுகமான இவர், 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோரா தாஸ் நம்ப்ரியா என்ற திரைப்படத்தின் மூலம் சிது திரைத்துறையில் பிரபலமடைந்தார். இப்படத்தின் இரண்டாவது பாகம் கொரோனா பொது முடக்கநிலையால் பாதிக்கப்பட்டது.

இந்திய திரைப்பட நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் குர்தாஸ்பூர் எம்.பியுமான சன்னி தியோலுடன் சிது நெருக்கமாக கருதப்படுகிறார். 1997ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் வினோத் கண்ணாவுக்கு பதிலாக சன்னி தியோலுக்கு அக்கட்சி சீட் கொடுத்ததில் இருந்து, சிதுவின் அரசியல் பயணமும் தொடங்கியது. பிரசாரத்தின் போது, உள்ளூர் மக்களுடன் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்த சிது பெரிதும் பங்காற்றினார்.

சிதுவின் ஜோரா தாஸ் நம்ப்ரியா திரைப்படத்தின்  இரண்டாம் பாகம் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கின் போது வெளியானது. ஊரடங்கு காலங்களில்   சீக்கிய வரலாறு எவ்வாறு திருத்தியமைக்கப்பட்டது    என்பது குறித்த அஜ்மீர் சிங்கின் படைப்புகளை விரிவாகப் படித்ததாக சிது தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு காலங்களில் சீக்கியர்களின் அரசியல், வரலாறு, பொருளாதாரம், கல்வி தொடர்பான சிதுவின் வீடியோக்கள் பேஸ்புக் பக்கத்தில் பெரும் வரவேற்பை பெறத் தொடங்கின.

வேளாண் சட்டமசோதாக்கள் தொடர்பாக பஞ்சாப் விவசாயிகள் போராட்டங்களில் ​சிதுவும் கலந்து கொள்ளத் தொடங்கினார். செப்டம்பர் 25 ஆம் தேதி விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தின் போது, சிதுவும் மற்ற கலைஞர்களும் ஹரியானாவுடனான  ஷாம்பு எல்லையில் தர்ணாவுக்கு அழைப்பு விடுத்தனர். இது, சிதுவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிதுவின் அழைப்பை ஏற்று பெருந்திரலான பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாய சங்கங்களை விட சிதுவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

அரசியலில் அனுபவம் இல்லை என்றாலும், ஹரியாணாவின் ஷாம்பு எல்லைப் பகுதியில் நிரந்தர தர்ணாவை விரைவில் தொடங்கினார். பஞ்சாப் மாநிலத்துக்காக குரல் கொடுக்க பலதரப்பட்ட அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து துரிதமாக செயல்படும் தளத்தையும் தொடங்கினார்.

 

 

விவசாய சங்கங்களின் நிலைப்பாடு என்ன?

பெரும்பாலான விவசாயிகள் தொழிற்சங்கங்கள், குறிப்பாக தீவிர இடதுசாரி அமைப்பான பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்), சிதுவை ஒரு அச்சுறுத்தலாகவே கருதுகின்றனர். தனது, நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு சிது  கவனத்தை திசைதிருப்பும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

எம்.எஸ்.பி. அறிவிப்பு மற்றும் ஏ.பி.எம்.சி. செயல்பாடுகளைத் தாண்டி, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் பஞ்சாபியின் அடிப்படை அடையாளம் ஆகியவற்றின் பின்னணியில் சிது பேசிவருகிறார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைப்பாவையாக  சிது செயல்பட்டு வருவதாக கூறும் விவசாய அமைப்புகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சன்னி தியோலுடன் சிது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றன. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சிது, பஞ்சாப் மாநிலத்தின் அடிப்படை பிரச்சினைக்காக போராடுவதாகக் கூறினார்.

‘டெல்லி சாலோ’ அழைப்பின் போது ஹரியானா அரசு விதித்த தடுப்புகளை களைய வேண்டாம் என்று பெரும்பாலான விவசாய அமைப்புகள் முடிவு செய்திருந்தாலும், பாரதிய கிசான்  ( (சித்துபூர்) அமைப்போடு  இணைந்து ஷாம்பு எல்லையில் உள்ள தடுப்புகளை சிது உடைத்தெரிந்தார். இது மற்ற விவசாய அமைப்புகளையும் டெல்லியை நோக்கி பயணிக்க  கட்டாயப்படுத்தியது. டெல்லி செல்லும் வழியில் பாதுகாப்பு படையினருடனான அவரது வாதம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

பிந்த்ரன்வாலேவை  மேற்கோள் காட்ட  தயங்குவதில்லை:

தனது பொதுக் கூட்டங்களில், சிது மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா ஆகியோரின் கூற்றுகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவார். அவரது உரைகள், இந்திய அரசியலமைப்பின் கீழ் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் கோருவதை மையமாகக் கொண்டுள்ளன.  1970-80 களில் கூட்டாச்சி தத்துவத்தை வலுப்படுத்த பஞ்சாப் மேற்கொண்ட போராட்டங்களை அரசு இயந்திரங்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Farmers protest who is deep sidhu farmers protest march in delhi

Next Story
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வழக்கு: மூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை என்றால் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com