Advertisment

நேட்டோவில் இணைந்த பின்லாந்து; இது ரஷ்யா, மேற்கு நாடுகளுக்கு உணர்த்துவது என்ன?

பின்லாந்து அதன் நடுநிலையை கைவிட எது தூண்டியது, இதற்கு முன்பு ரஷ்யாவுடனான அதன் உறவுகள் என்ன, இந்த நடவடிக்கை நேட்டோ, ரஷ்யா மற்றும் பின்லாந்திற்கு உணர்த்துவது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Finland NATO, why Finland joined NATO, finlandisation, winter war, நேட்டோவில் இணைந்த பின்லாந்து; ரஷ்யா, மேற்கு நாடுகளுக்கு உணர்த்துவது என்ன, soviet union, russia ukraine war, express explained

நேட்டோவில் இணைந்த பின்லாந்து

பின்லாந்து நேட்டோ-வில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) இணைந்தது. இது ஐரோப்பாவின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அணிவகுப்பில் ஒரு உறுதியான மாற்றத்தைக் குறிக்கிறது. ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துகிறது. அமெரிக்கா தலைமையிலான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ - NATO) சேர, ரஷ்யாவுடன் 1,340 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சிறிய நார்டிக் நாடு, 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வந்த ராணுவ அணிசேரா கொள்கைக்கு முடிவு கட்டியுள்ளது - உண்மையில், பனிப்போர் ஆண்டுகளில், சோவியத் யூனியனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான நடுநிலைக் கொள்கையானது ‘பின்லாந்துமயமாக்கம்’ என்று அறியப்படுகிறது. மேலும், பின்லாந்துமயமாக்கல் என்பது ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்புக்கு முன் விவாதிக்கப்பட்ட தேர்வுகளில் ஒன்று.

Advertisment

பின்லாந்து அதன் நடுநிலையை கைவிட எது தூண்டியது, இதற்கு முன்பு ரஷ்யாவுடனான அதன் உறவுகள் என்ன, இந்த நடவடிக்கை நேட்டோ, ரஷ்யா மற்றும் பின்லாந்திற்கு என்ன உணர்த்துகிறது?

பின்லாந்து ஏன் நேட்டோவில் இணைந்தது?

இதற்கான பதில் எளிமையானது - உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போருக்குச் செல்வது, அதன் சிறிய அண்டை நாடுகளை நேட்டோ சலுகைகளை ஆதரிக்கும் சக்திவாய்ந்த ராணுவத்தை ஏங்க வைத்துள்ளது, அதன் சாசனத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் எந்த ஒரு உறுப்பினர் தாக்கப்பட்டாலும் பாதுகாக்க வேண்டும்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு பின்லாந்தும் அதன் அண்டை நாடுகளான ஸ்வீடனும் நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தன. எந்தவொரு புதிய விண்ணப்பதாரரும் கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும், பின்லாந்து இப்போது 31-வது நேட்டோ உறுப்பினராக இருக்கும்போது, ​​ஸ்வீடனின் முயற்சியை துருக்கி மற்றும் ஹங்கேரி நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நேட்டோ உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் உறுப்பினர்கள்: 1949 முதல், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 12 நிறுவன உறுப்பு நாடுகள்; கிரீஸும் துருக்கியும் 1952-ல் இணைந்தன; 1955-ல் ஜெர்மனியும் 1982-ல் ஸ்பெயினும் 1999-ல் செக்கியா, ஹங்கேரி மற்றும் போலந்து; பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா நாடுகள் 2004-ல் இணைந்தன; 2009-ல் அல்பேனியா மற்றும் குரோஷியா நாடுகளும் 2017-ல் மாண்டினீக்ரோ; 2020-ல் வடக்கு மாசிடோனியாவும் இணைந்தன். இறுதியாக, பின்லாந்து இணைந்துள்ளது.

பின்லாந்து - ரஷ்யா உறவுகள்

சோவியத் யூனியன் ஒரு வலிமைமிக்க சக்தியாக இருந்தபோது, ​​பின்லாந்து தனது பெரிய அண்டை நாடுகளுக்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக் கொண்டது.

1939-40-ல் பனிப் போருக்குப் பிறகு இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பின்லாந்து எல்லைக்கு மிக அருகில் இருந்த லெனின்கிராட் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) நகரை பாதுகாப்பாக வைத்திருக்க சோவியத்துகள் பின்லாந்தின் மீது படையெடுத்தனர். இருப்பினும், சிறிய மற்றும் மோசமாக ஆயுதம் ஏந்திய பின்லாந்து ராணுவம் சோவியத் இராணுவத்திற்கும் அதன் நற்பெயருக்கும் சேதத்தை ஏற்படுத்தியதால், கடுமையான் எதிர்ப்பை அளித்தது. மாஸ்கோ சமாதான உடன்படிக்கையுடன் போர் முடிந்தது. அங்கு பின்லாந்து சோவியத் யூனியனிடம் பிரதேசங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உலகப் போர் முடிவடைந்த பின்னர், ஃபின்ஸ் மேற்கத்திய இராணுவக் கூட்டணிகளில் இருந்து விலகி சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு நலன்களை மதித்தார்கள். சோவியத் யூனியன் சரிந்து பின்லாந்து மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டிய பின்னரும் கூட, அது நேட்டோவில் இருந்து விலகி இருந்தது, இது ரஷ்யாவிற்கு ஒரு திட்டவட்டமான ஆத்திரமூட்டலாக இருந்திருக்கும்.

ஆனால் பல ஆண்டுகளாக அமைதி நிலவிய போதிலும், பின்லாந்து படையெடுப்பிற்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது. நாட்டில் கட்டாய ராணுவ சேவை உள்ளது. வழக்கமான பேரிடர் பயிற்சி அளிக்கிறது. தி நியூயார்க் டைம்ஸ் செய்திப்படி, அதன் பாதுகாப்புச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகும். இது நேட்டோவால் கோரப்பட்ட இலக்கு எண்ணிக்கை, ஜெர்மனி போன்ற உறுப்பு நாடுகள் கூட எட்டவில்லை.

நேட்டோவில் பின்லாந்து இணைந்ததன் முக்கியத்துவம்

பின்லாந்தைப் பொறுத்தவரை, நாடு பாதுகாப்பு அடிப்படையில் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போது, ​​அது ரஷ்யாவிலிருந்து வரும் குறிப்பிடத்தக்க வர்த்தகம் மற்றும் சுற்றுலா வருவாயை இழக்கிறது. மேலும், அது கிழக்கிற்கான மேற்கு நுழைவாயிலாக இருந்து வருகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, பின்லாந்து மாஸ்கோவுடனான உறவுகளை சிதைக்கும். பால்டிக் கடல் மற்றும் ஐரோப்பாவில் பெரிய அளவில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பிரசன்னமாக அதன் நிலையில் இருந்து மாறி, ஒரு ஆபத்தான வரலாற்றுத் தவறை செய்துள்ளது என்று ரஷ்யா கூறியுள்ளது. “பின்லாந்து இப்போது கடந்த காலத்தின் ஒரு விஷயம். சர்வதேச விவகாரங்களில் தனது சிறப்புக் குரலை இழந்து, எதையும் முடிவு செய்யாத (நேட்டோ) சிறிய உறுப்பினர்களில் ஒன்றாக பின்லாந்து மாறியுள்ளது. இந்த அவசர நடவடிக்கையை வரலாறு தீர்மானிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று ரஷ்ய அமைச்சக அறிக்கையைக் குறிப்பிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நேட்டோவைப் பொறுத்தவரை, பின்லாந்தைச் சேர்ப்பது ரஷ்யாவிலிருந்து தாக்குதலைத் தடுக்க பயிற்சி பெற்ற ராணுவத்தைக் கொண்டுவருகிறது. மேலும், அந்த நாட்டுடனான அதன் எல்லையை இரட்டிப்பாக்குவதன் மூலம், ரஷ்யாவிற்கு நெருக்கமாக ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு நல்ல இடம் இருக்கிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, பின்லாந்தின் நடவடிக்கை நேட்டோவை அதன் கதவுகளுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. அது மிகக் கடுமையாக எதிர்க்கும் விஷயத்தையும், அதைத் தடுப்பதும் உக்ரைன் படையெடுப்புக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டது.

ரஷ்யா இப்போது அதன் மேற்கு மற்றும் வடமேற்கில் ராணுவத் திறனை வலுப்படுத்துவதாக திங்கள்கிழமை கூறியது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு பின்லாந்தின் சேர்க்கை உக்ரைன் மோதலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உயர்த்தியுள்ளது என்று கூற்யதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Russia Nato Finland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment