1965ம் ஆண்டுக்கு பிறகு அரபிக்கடலில் ஒரே நேரத்தில் கியார் மற்றும் மகா புயல்கள் உருவாகியுள்ள நிலையில், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அரபிக்கடலில் சமீபத்தில் உருவான 2 புயல்களுக்கிடையே என்ன வித்தியாசம்?
1965ம் ஆண்டு, அதாவது 55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அரபிக்கடலில் ஒரேநேரத்தில் கியார் மற்றும் மகா என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு புயல்கள் உருவாகியுள்ளன. அரபிக்கடலில் 2007ம் ஆண்டில் கோனு புயல் உருவானது. அதற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கியார் புயல் கருதப்படுகிறது. அரபிக்கடலை விட, வங்காள விரிகுடா கடலில் தான் அதிகளவில் புயல்கள் உருவாகி வந்தன. ஆனால், சமீபகாலமாக, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல்களில் புயல்கள் தொடர்ந்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் மட்டும் அரபிக்கடலில் 4 புயல்கள் உருவாகியுள்ளன. சமீபகாலமாக அரபிக்கடலில் அதிகளவில் புயல்கள் உருவாவதற்கு பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் நிகழ்வுகளினால்தான் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரபிக்கடலில் ஒரேநேரத்தில் எவ்வாறு 2 புயல்கள் உருவாகின?
இந்திய வானிலை ஆய்வுமைய தகவலின்படி, அரபிக்கடலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடல்நீரின் வெப்பநிலை சாதாரண அளவைவிட அதிகமாக உள்ளது. இந்த கடல்நீரின் வெப்பமே, கடலில் அழுத்தமாக மாறி, சிறிதுகாலத்திற்குள்ளாகவே புயலாகவோ அல்லது சக்தி வாய்ந்த புயலாகவோ மாற வாய்ப்புள்ளது.
இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை, அக்டோபர் 16ம் தேதியுடன் முடிவடைந்தது, பத்து நாட்களுக்காக அதாவது அக்டோபர் 26ம் தேதி, அரபிக்கடலில் கியார் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புயல், தற்போது காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இது ஓமன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் அவ்வாறு நடக்கவில்லை. இந்நிலையில், அரபிக்கடலில் அக்டோபர் 31ம் தேதி மகா புயல் உருவானது. இந்த புயல் தற்போது குஜராத் மாநிலத்திவ் வேரவல் பகுதியிலிருந்து 540 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
மகா புயலால் எத்தகைய பாதிப்பு ஏற்படும்?
மகா புயல், அரபிக்கடலில் லட்சத்தீவுகளுக்கும் கேரளாவுக்கும் இடையே உருவாகியுள்ளது. மேற்குநோக்கி நகரத்துவங்கிய இந்த புயல், தற்போது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நவம்பர் 02ம் தேதி மாலைநேரத்தில், புயல், குஜராத் மாநிலம் வேரவல்லிருந்து 520 கி.மீ. தொலைவிலும், குஜராத்தின் டையூ பகுதியில் இருந்து 540 கி,மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி பிற்பகல்வாக்கில் புயல் திவீரமடையும். இதன்காரணமாகப தெற்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் பலபகுதிகளில் நவம்பர் 5ம் தேதி முதல் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு குஜராத்தின் பலபகுதிகள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதிகளான நாசிக், ஜல்கான், மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை நல்ல மழைப்பொழிவு இருக்கும்
கியார் புயலால், கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் நல்ல மழை பொழிந்துள்ள நிலையில் ஒரு வார கால இடைவெளியில், மகா புயலால், மீண்டும் மகாராஷ்டிராவிற்கு மழை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடா கடலின் தற்போதைய நிலை?
2019ம் ஆண்டின் முற்பகுதியில் வங்காள விரிகுடா கடலில் ஃபனி புயல் உருவானது. இந்த புயல் ஒடிசா மாநிலத்தை துவம்சம் செய்தது யாராலும் மறந்திருக்க முடியாது. தற்போது வங்காள விரிகுடா கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. நவம்பர் 3 முதல் 6ம் தேதிவாக்கில் அந்தமான் அருகே அது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அது புயலாக மாறிய பிறகு, அது நகரும் திசையை நோக்கி அதுக்கு பெயர் சூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.