scorecardresearch

மீண்டும் மீண்டும் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய அந்த வார்த்தை.. அம்ரித் கால் என்றால் என்ன?

“அம்ரித் கால்க்கான எங்கள் பார்வையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவை அடங்கும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FM Sitharaman presents the first budget of Amrit Kaal What is Amrit Kaal and what does it signify
2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை “முதல் அம்ரித் கால் (Amrit Kaal) பட்ஜெட்” என்று கூறி தொடங்கினார். தொடர்ந்து, அவர் மீண்டும் மீண்டும் ‘அம்ரித் கால்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

“அம்ரித் காலில் நவீன தொழில்நுட்பம், அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவை அடங்கும்.
இதனை ‘ஜன்-பாகிதாரி’ (பொது பங்கேற்பு) ‘சப்கா சாத், சப்கா பிரயாஸ்’ (அனைவரின் முயற்சிகள், அனைவருக்கான வளர்ச்சி) மூலம் அடைய வேண்டியது அவசியம்” என்றார்.

அரசாங்கத்தால் முதன்முதலில் எப்போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது?

2021ஆம் ஆண்டு 75ஆவது சுதந்திர தின விழாவில் ‘அம்ரித் கால்’ என்ற வார்த்தையை முதன்முதலில் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தினார். டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய அவர், அம்ரித் காலின் குறிக்கோள் இந்தியாவிற்கும் இந்திய குடிமக்களுக்கும் செழுமையின் புதிய உயரங்களைச் சேர்ப்பதாகும் என்றார்.

தொடர்ந்து, ‘அம்ரித் கால்’ அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாடு தனது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பிளவைக் குறைக்கும்” என்றார்.

மேலும், மக்களின் வாழ்க்கையில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்கவும், இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்பவும் செயல்படத் தொடங்கும்” என்றார்.

தொடர்ந்து, “எங்கள் இலக்குகளை அடைய நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இப்போதே தொடங்க வேண்டும். இழப்பதற்கு நமக்கு ஒரு கணமும் இல்லை. இதுவே சரியான நேரம். நமது நாடும் மாற வேண்டும், குடிமக்களாகிய நாமும் மாற வேண்டும்” என்றார்.

ப்ளூம்பெர்க்கின் ஆய்வின்படி, கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது மோடி இந்த வார்த்தையை 14 முறை பயன்படுத்தி உள்ளார்.

‘அம்ரித் காலின்’ முக்கியத்துவம் என்ன?

அம்ரித் கால் என்பது வேத காலத்தில் பொற்காலத்தை குறிக்கும் சொல் ஆகும்.

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, ‘அமிர்த காலுக்கு’ முக்கியத்துவம் அளித்தது.
இந்தியாவில் வரவிருக்கும் காலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதியுடன் மிக வளமானதாக இருக்கும் என்று கூறியுள்ளது.

‘அம்ரித் கால்’ ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை விதைக்கிறது. அங்கு இந்தியா தன்னிறைவு பெறும் மற்றும் அதன் அனைத்து மனிதாபிமானக் கடமைகளையும் நிறைவேற்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Fm sitharaman presents the first budget of amrit kaal what is amrit kaal and what does it signify