Advertisment

Explained: காஸ்ட்லி ஆகும் டாலர்கள்.. அமெரிக்க சந்தையில் முதலீடு செய்யலாம்..!

இந்திய முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தைகளில் 50 முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
future dollar expenses

அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாட்டின் நாணயங்களும் வருங்காலத்தில் சரிவை சந்திக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப ரூ.80 ஆக சரிந்துள்ளது. இது வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோரை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வருங்காலத்தில் டாலரில் செலவு செய்ய முடியுமா என்ற அச்சமும் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது. கடந்த 11 மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு கல்வி செலவினங்கள் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க அமெரிக்க மியூச்சுவல் பண்ட் மற்றும் கடன் பத்திரங்களில் சர்வதேச அளவில் முதலீடு செய்யலாம்.

ஏனெனில் இந்தியப் பொருளாதாரம் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன் பொருளாதாரமாக திகழ்கிறது. ஆனால் அமெரிக்க பொருளாதாரம் உபரி பொருளாதாரம் ஆக உள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயரும் என்று ஃப்ளெக்ஸி கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் நாசர் சலீம் கூறுகிறார்.

மேலும் மற்ற நாட்டின் நாணயங்களும் வீழ்ச்சியை சந்திக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் இருந்து தப்பிக்க 3 வழிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நேரடி முதலீடு: இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மூலதன கணக்கு பரிவர்த்தனைகளுக்கு இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை அனுமதிக்கிறது.

ஐஎஃப்எஸ்சி ப்ளாட்பார்ம்: இந்திய முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தைகளில் 50 முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அமேசான், ஆல்பபெட், டெஸ்லா, மீட்டா ப்ளாட்பார்ம்ஸ், மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ், ஆப்பிள் மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதிகள்: முதலீட்டாளர்களால் பாதுகாப்பானதாக கருதப்படும் நிதி இதுவாகும். மேலும் நம்மூர் முதலீட்டாளர்களிடம் இருந்தும் பணத்தை திரட்டுகிறது. இதன் தினசரி மார்க்கெட் நிலவரத்தை கவனிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் அபாயமும் குறைவு. வெளிநாட்டு நிதியில் முதலீடு செய்வதற்காக இதனை அறிமுகப்படுத்தியுள்ளன.

கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டின் இறுதியில் மியூச்சுவல் பண்ட்களின் வெளிநாட்டு சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரத்து 808 கோடியாக இருந்தது. அதாவது சுமார் 2.9 பில்லியன் டாலர் ஆகும். இருப்பினும், தற்போதைய தரவகள் கிடைக்கவில்லை.

கடந்த கால தகவல்கள் வைத்து பார்க்கும்போது ரூ.50 ஆயிரம் கோடியை (6.7 பில்லியன் டாலர்) தாண்டியிருக்கும் என நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன. மியூச்சுவல் பண்ட்களில் வெளிநாட்டு முதலீட்டுகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் லக்சம்பர்க்கில் குவிந்துள்ளன.

இந்திய முதலீட்டாளர்களிடம் மாற்றம்

இந்திய முதலீட்டாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் முதலீடு செய்துவருகின்றனர். கிட்டத்தட்ட ரூ.56 ஆயிரம் கோடியை தொடும் இந்த முதலீடுகள் நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த முதலீடுகள் பெரும்பாலும் கடன் பத்திரங்களில் உள்ளன. அந்த வகையில் உள்நாட்டு சந்தையில் 3-4 சதவீத புள்ளிகள் வரை வழங்குகிறது. அமெரிக்க பொருளாதாரம் சரிவை கண்டபோதிலும் கடன் பத்திர முதலீடு சரிவடையவில்லை.

நடப்பாண்டில் அமெரிக்காவிலும் பணவீக்கம் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இது அந்நாட்டின் பண வீக்கத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்ற வகையில் நேர்மறையான சமிக்ஞைகள் சந்தைகளில் காணப்படுகின்றன. மேலும் இது சந்தைகளில் தடுமாறும் பங்குகளை மீட்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கி விதி:

செபியில் பதிவு செய்யப்பட்ட இந்திய பரஸ்பர நிதிகள், 7 பில்லியன் டாலர்கள் என்ற மொத்த வரம்புக்குள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இது 2016ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக கூறுகிறது.

இந்த பொதுவரம்பு இதுவரை அதிகரிக்கப்படவில்லை. இதனை அதிகரிக்க கோரிக்கைகளும் எழுகின்றன. இதற்கிடையில், மியூச்சுவல் பண்ட்களில் வரம்புக்குட்பட்ட வெளிநாடு முதலீடு செய்ய அனுமதிக்கிறது.

America Best Investment Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment