பிடனின் பிரச்சாரம் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றி, சமூக விலகல் மற்றும் முகமூடி அணிவது போன்ற கோவிட் -19 தணிப்பு உத்திகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் பலவற்றை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்துவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்று பல்வேறு யுக்திகள் எப்படி இந்தக் கொரோனா காலத்தில் இருவராலும் பின்பற்றப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
விர்ச்சுவல் பேரணி vs உண்மை பேரணி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் பல தனிப்பட்ட பேரணிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளில் பெரிய அளவில் அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர், அவர்களில் பலர் முகமூடி அணியாமல் நெருங்கிய இடங்களில் கூடியிருந்தனர். இந்த வார தொடக்கத்தில் இதுபோன்று ஒரு நிகழ்வில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசினார். கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவு, உள்விளையாட்டு அரங்கு போல் அமைந்திருந்த மைதானத்தில் நடந்த மிகப்பெரிய கூட்டம் இது. கொரோனா பேரிடர் காரணமாக, முக்கியமான நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கூட கூடாது என்பது அரசின் விதி. அந்த விதியை, இந்தக் கூட்டம் அப்பட்டமாக மீறியுள்ளது. இதனால் கோவிட் -19 வழக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஓக்லஹோமாவில் நடந்த பேரணி நிகழ்வுக்கு பிறகு, கூட்டத்தில் கலந்துகொண்ட பிரச்சார ஊழியர்கள் மற்றும் இரகசிய சேவை முகவர்கள் எனப் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. ஆனால், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதில் வித்தியாசமான யுக்திகளை கையாள்கிறார். குறைந்த எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன், சமூக விலகலை கடைப்பிடித்து நடத்தப்படுகிறது. கூடவே அதிக அளவில் விர்ச்சுவல் பேரணிகளை நடத்துகிறார். முகமூடி அணிந்து சமூக விலகல் கட்டாயமாக்கப்பட்டு, அதன்பிறகே உரைகள் நிகழ்த்துகிறார். இதேதான், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் செய்ய வைக்கிறார்.
டிவியில் பிடன், பேஸ்புக்கில் டிரம்ப்!
தேர்தல் நெருங்கி வருவதால், இரு வேட்பாளர்களும் தங்கள் பயணத்தை அதிகரித்துள்ளனர். குறிப்பாக முக்கிய மற்ற மாகாணங்களுக்கு பயணங்கள் மேற்கொள்கின்றனர். டிரம்ப் டிஜிட்டல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துகையில், பிடன் அதிக தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக, சமீபத்திய மாதங்களில் அதிக முதலீடு செய்துள்ளார் பிடன். வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு அறிக்கையின்படி, ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 7 வரை பிடன் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக சுமார் 90 மில்லியன் வரை செலவிட்டுள்ளார். இது டிரம்ப் செலவிட்டதை விட நான்கு மடங்கு அதிகம்.
ஆனால் சமீபத்தில் டிரம்ப் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் டிஜிட்டல் விளம்பரங்களில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன்மூலம் விளம்பர செலவினங்களின் இடைவெளியைக் குறைக்க முயற்சித்து வருகிறார். 2019 முதல் இந்த இரு தளங்களிலும் டிஜிட்டல் விளம்பரத்திற்காக சுமார் 170 மில்லியன் டாலர்களை டிரம்ப் செலவிட்டதாகவும், பிடன் 90 மில்லியன் டாலர்களை மட்டுமே செலவிட்டதாகவும் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால் சமீபத்திய வாரங்களில், பிடன் பேஸ்புக் மற்றும் கூகுள் பிரச்சாரங்களை கணிசமாக அதிகரித்துள்ளார்.
வீடு வீடாக பிரச்சாரம்!
இரு வேட்பாளர்களின் ஆதரவாளர் படைகள் வீடு வீடாகச் சென்று, தங்கள் ஜனாதிபதி வேட்பாளரை கரைச் சேர்க்க முயற்சிக்கின்றனர். வீடு வீடாகச் சென்று, தங்கள் கட்சி வேட்பாளரின் பல நற்பண்புகளை புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்த வகையிலான பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சிக்கு பின்னடைவே எனக் கூறப்படுகிறது. அதேசமயம், ஜனாதிபதி டிரம்ப்பின் பிரச்சாரம் வாரத்திற்கு குறைந்தது ஒரு மில்லியன் வீடுகளைச் சென்று சேரும் வகையில் அமைந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்த கள ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஜூன் மாத தொடக்கத்தில் இதற்காக ஜூன் மாதத்திலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி திரட்டல்: ZOOM காலில் பிடன், திறந்தவெளி நிகழ்வுகளில் டிரம்ப்!
டிரம்ப் ஜூன் முதல் பல தனிப்பட்ட நிதி திரட்டும் நிகழ்வுகளை நடத்தி வருகையில், ஜோ பிடனோ ZOOM அழைப்புகள் மூலம் தனது ஆதரவாளர்களை சந்தித்து நிதி திரட்டி வருகிறார். கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, நாடு முழுவதும் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் இடம்பெறும் விர்ச்சுவல் நிகழ்வுகளை நடத்தி அதன்மூலம் நிதி திரட்டி வருகிறார் பிடன். இதன்மூலம் டிரம்பை விட அதிக நிதியை பிடனால் குவிக்க முடிகிறது. ஆகஸ்ட் மாதம் மட்டும், பிடனும், அவரின் கட்சியினரும் மொத்தம் 364.5 மில்லியன் டாலர்களை நிதியாக திரட்டி இருக்கின்றனர் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. மேலும், கிடைத்த மொத்த தொகையில் ஒரு பெரிய பகுதி சிறிய டாலர் நன்கொடையாளர்களிடமிருந்து பெற அவரது பிரச்சாரம் கைகொடுத்தது.
இதற்கிடையில், அதே மாதத்தில், டிரம்ப் நேரடி பிரச்சாரம் மூலம் சுமார் 210 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளார். நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து திரட்டப்பட்ட 1.1 பில்லியன் டாலர்களில் 800 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏற்கனவே செலவழித்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதியின் மறுதேர்தல் பிரச்சாரம் அதன் பண நன்மையை இழந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“