கோவிட் -19 நோயாளிகளில் பக்கவாதம்: நான்கு ஆய்வுகள் ட்ரெண்ட்

கோவிட் -19 நோயாளிகளிடையே எப்படி அடிக்கடி, எவ்வளவு பக்கவாதம் ஏற்படுகிறது என்பது பற்றி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள ஸ்ட்ரோக் இதழில் ஒரு தொடர் கட்டுரைகள்...

கோவிட் -19 நோயாளிகளிடையே எப்படி அடிக்கடி, எவ்வளவு பக்கவாதம் ஏற்படுகிறது என்பது பற்றி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள ஸ்ட்ரோக் இதழில் தொடர் கட்டுரைகள் நான்கு நாடுகளின் போக்குகளை ஆராய்ந்துள்ளன. இந்த ஆய்வின் கண்டுபிடிக்கப்பட்டவைகள்:

* கோவிட் -19 நோயாளிகளில் பக்கவாதம் விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே தோன்றுகிறது;

* இந்த பக்கவாதம் விகிதம் அதிக அளவில் இளைஞர்கள் இடையே காணப்படுகிறது.

* கோவிட் -19 நோயாளிகளில் ஏற்படும் பக்கவாதம் பெரும்பாலும் கொரோனா வைரஸ் இல்லாத நபர்களிடையே ஏற்படும் பக்கவாதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையாக இருக்கிறது. அதே நேரத்தில் பக்கவாதம் மாரடைப்பு ஏற்படும்போது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உலக அளவில் நேர விகிதங்கள் 2019-ம் ஆண்டின் முதல் பகுதியை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.

மார்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை நியூயார்க்கை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3,556 பேரில் 32 நோயாளிகளுக்கு (0.9%) மூளையில் இரத்த அடைப்பு பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அந்த 32 கோவிட்-19 நோயாளிகளை அனுமதிக்கப்பட்ட 46 பக்கவாத நோயாளிகளுடன் மட்டுமே ஒப்பிட்டுள்ளனர். கோவிட் அல்லாத பக்கவாத நோயாளிகளின் சராசரி வயது 70 ஆக இருக்கும்போது அதற்கு மாறாக கோவிட் நோயாளிகளின் சராசரி வயது 63 ஆக இருப்பதைக் கண்டறிந்தனர்.

கோவிட் நோயாளிகளிடையே பக்கவாதம் ( பக்கவாத அளவின் அடிப்படையில்) மிகவும் கடுமையாக இருந்தது. இந்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜில் இறந்திருக்க வாய்ப்புள்ளது (63.6% Vs.9.3%)

ஹாங்காங்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், பக்கவாதம் தொடங்கியதிலிருந்து மருத்துவமனைக்கு வரும் நேரம் தாமதமாக இருப்பதாகக் கூறியது. ஜனவரி 23 மற்றும் மார்ச் 24 தேதிக்கு இடையே குயின் மேரி மருத்துவமனையில் பக்கவாதம் தொடர்ங்கியதிலிருந்து மருத்துவமனைக்கு வரும் நேரம் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் சுமார் ஒரு மணிநேரம் அதிகமாக இருந்தது (154 நிமிடங்கள் vs 95 நிமிடங்கள்).

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி 2020 இல், இதே காலகட்டத்தில் பக்கவாதம் தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 40% குறைந்துவிட்டனர்.

நான்காவதாக பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 30 வரை, 2019 உடன் ஒப்பிடும்போது தொற்றுநோய்களின்போது இயந்திர த்ரோம்பெக்டோமி பெறும் மூளையில் ரத்த அடைப்பு பக்கவாத நோயாளிகளின் ஒட்டுமொத்த அளவில் 21% குறைவு (2019 இல் 844 மற்றும் 2020 இல் 668) இருப்பதைக் கண்டறிந்துள்ளது.   கூடுதலாக, ஒட்டுமொத்த சிகிச்சை செய்ய இமேஜிங் நேரம் அளவு அதிகரித்திருந்தது.  2019-இல் 126 நிமிடங்களாக இருந்த நிலையில் அதற்கு மாறாக 2020 இல் 145 நிமிடங்களாக உள்ளன. இமேஜிங்கிற்குப் பிறகு சிகிச்சைக்காக மற்ற வசதிகளுக்கு மாற்றப்பட்ட நோயாளிகளுக்கு இது 30 நிமிடங்கள் அதிகரித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close