Advertisment

ரூ. 4,051 கோடி செலவில் இலவச பேருந்து பயணத்திற்கான சக்தி திட்டம்: கர்நாடகா அரசு சந்திக்க போகும் சிக்கல்கள் என்ன?

Karnataka shakti scheme: பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும், புதிய காங்கிரஸ் அரசின் சக்தி திட்டத்தின் அறிவிப்பு சில இடங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Karnataka shakti scheme

Karnataka shakti scheme

Shakti Scheme finances: 2000 முதல் 2020-21 வரையிலான 20 ஆண்டு காலப்பகுதியில், கர்நாடக அரசு தனது நான்கு சாலைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பல்வேறு பயணிகளுக்கான சலுகைகள் தொடர்பாக வழங்க வேண்டிய ரூ.4,265 கோடியை செலுத்தவில்லை.  இந்த சூழ்நிலையில், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும், புதிய காங்கிரஸ் அரசின் சக்தி திட்டத்தின் அறிவிப்பு சில இடங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC) மற்றும் கல்யாண கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (KKRTC) ஆகிய நான்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமை பற்றி இங்கே பார்க்கலாம்.

சமீபத்திய சிஏஜி (CAG) அறிக்கை என்ன சொன்னது?

பிப்ரவரி 2023 இல் CAG வெளியிட்ட ஒரு தணிக்கை அறிக்கையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு (RTC) சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்தது, இது நிறுவனங்களின் நிதி நிலைமையை பாதித்துள்ளது.

31 மார்ச் 2021 நிலவரப்படி, நான்கு நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.4,689.09 கோடியாக இருந்தது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி கார்ப்பரேட்கள் சலுகைகளை நீட்டித்தன என்பது உண்மைதான், இருப்பினும், அதற்கான செலவினங்கள் திருப்பிச் செலுத்தப்படவில்லை, என்று மாநிலத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் CAG அறிக்கை கூறியது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு அதன் போக்குவரத்து வருவாய் தான் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது, மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில், குறிப்பாக கோவிட் காலத்தில் வருவாய் கிட்டத்தட்ட தொடர்ந்து குறைந்து வருகிறது.

சிஏஜி அறிக்கையின்படி, பெங்களூரு போக்குவரத்துக் கழகம் (BMTC) லாபத்தைப் பதிவு செய்த 2015-16 மற்றும் கேஎஸ்ஆர்டிசி லாபத்தைப் பதிவு செய்த 2015-16 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளைத் தவிர, நான்கு போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

சக்தி திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும்?

எரிபொருள் விலை உயர்வு, பேருந்து கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், ஒரு நாளைக்கு 41.81 லட்சம் பெண் பயணிகள் வீதம், சக்தி திட்டத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 337 கோடி செலவாகும். அதாவது ஆண்டுக்கு மொத்தம் ரூ. 4,051 கோடி. எனவே இந்த சலுகைகளை பெருநிறுவனங்கள் கவலையுடன் பார்க்கின்றன.

இந்த திட்டத்தால் கேஎஸ்ஆர்டிசியின் ஆண்டு வருமானம் ரூ.1,563 கோடிக்கு குறையும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. BMTCக்கு ரூ.770 கோடி, NWKRTC-க்கு ரூ.906 கோடிமற்றும் KKRTC-க்கு ரூ.810 கோடி குறையும்.

ஜூன் 1 ஆம் தேதி சக்தி திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, 2022-2023 ஆம் ஆண்டிற்கான நான்கு போக்குவரத்துக் கழகங்கங்களின் நிதி நிலைமை KSRTC க்கான தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியால் வழங்கப்பட்டது. அதன்படி மார்ச் 2023 இறுதியில் நான்கின் ஒட்டுமொத்த போக்குவரத்து வருவாய் ரூ.8,350 கோடி ஆகும்.

சலுகைகள் மற்றும் பிற காரணங்களால் நான்கு போக்குவரத்துக் கழகங்களும் ரூ.4,390 கோடி வருவாய் இழப்பை பதிவு செய்துள்ளன.

போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசாங்கம் எவ்வளவு திருப்பிச் செலுத்துகிறது?

போக்குவரத்துக் கழகங்கள் 2022-23 ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்கான அரசு மானியங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.3,606 கோடியைப் பெற்றுள்ளன. இது சமீபத்திய ஆண்டுகளில் மிக அதிகமாகும். கோவிட் ஆண்டுகளில், மாநிலம் 2020-21ல் ரூ.1,953 கோடியும், 2021-22ல் ரூ.1,208 கோடியும் வழங்கியுள்ளது.

ஆனால், அவை இன்னும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.

CAG அறிக்கையின்படி, 2015-16 முதல் 2020-21 வரையில், பணியாளர் செலவு (44.81 சதவீதம்) மற்றும் எரிபொருள் செலவு (31.64 சதவீதம்) RTC களின் முக்கிய செயல்பாட்டு செலவுகள் ஆகும்.

CAG அறிக்கையின்படி, 2015-16 மற்றும் 2019-20 க்கு இடையில் போக்குவரத்துக் கழகங்ககளின் மீட்கப்படாத செலவுகள் படிப்படியாக உயர்ந்துள்ளன, பெங்களூரு போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு கி.மீட்டருக்கு வசூலிக்கப்படாத செலவு கி.மீட்டருக்கு 0.3 ரூபாயில் இருந்து 13.52 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு டீசல் மற்றும் பணியாளர் கொடுப்பனவுகளின் அதிகரித்த விலைக்கு ஏற்ப, Automatic Fare Adjustment Formula ஃபார்முலா மூலம் கட்டணங்களைத் திருத்த கர்நாடக அரசு அனுமதித்த போதிலும், 2020 பிப்ரவரியில் ஒரே ஒரு திருத்தம் மட்டுமே கட்டணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

2014-15 வரை, ஆண்டுதோறும் கட்டணம் திருத்தப்பட்டதை தணிக்கை கவனித்தது, அதுவரையிலான கடைசித் திருத்தம் ஜனவரி 2015 இல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2020 வரை கார்ப்பரேஷன்கள் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை.

2015 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்த போதிலும், கார்ப்பரேஷன்கள் கட்டணத்தை மாற்றியமைக்காததற்கான காரணங்கள் பதிவு செய்யப்படவில்லை, என்று CAG அறிக்கை கூறியது.

மேலும், 2020 பிப்ரவரியில் கட்டணத்தை திருத்தியமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தபோது, ​​பெருநிறுவனங்கள் கோரும் 15 முதல் 20 சதவீத உயர்வுக்கு எதிராக 12 சதவீதமாக கட்டண உயர்வை கட்டுப்படுத்தியது, என்று அது கூறியது.

அரசு என்ன சொன்னது?

இத்திட்டத்தால் ஏற்படும் வருவாய் இழப்பீட்டை, முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில நிதித் துறை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆர்டிசிக்கள் வலியுறுத்தியுள்ளன.

போக்குவரத்து கழகங்களுக்கு நிதியுதவி அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது” என்று சக்தி திட்டத்தின் தொடக்க விழாவில் மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார். இலவச பேருந்து சேவைகளைப் பெறும் பெண்களுக்கு சக்தி அட்டைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு, நிதித் துறையின் நிதி வெளியீட்டு செயல்முறையை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில், ஆர்டிசி நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க, மோட்டார் வாகன வரியில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டது. கடந்த ஆண்டு, 1,505 கோடி ரூபாய்க்கான மோட்டார் வாகன வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த தொகையை பங்குகளாக மாற்றுவதன் மூலம் பெருநிறுவனங்கள் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment