Advertisment

டெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா? நிபுணர்களின் கருத்து என்ன?

பூகம்பங்கள் என்றும்  அறிவிக்கப்படாமல் தான் வர விரும்புகின்றன. கதவுகளைத் தட்டு முன்கூடியே சொல்லி வருவது அதற்கு  பிடிக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா? நிபுணர்களின் கருத்து என்ன?

கடந்த திங்கள்கிழமை 2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி அருகே உணரப்பட்டது. கடந்த மே மாதத்திலிருந்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட 11-வது நில அதிர்வாக இது அமைந்தது. இந்த 11-ல், 3.4 ரிக்டர் அளவு கோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஒன்றும் பதிவானது. விரைவில், மிகப்பெரிய நிலநடுக்கும் வருவதற்கான சாத்தியக்கூறுகளாக சமீபத்திய நிகழ்வுகள் அமைந்துள்ளதாக டெல்லி மக்கள் அச்சப்படுகின்றனர் . இருப்பினும், இந்த அச்சத்திற்கு போதிய அறிவியல் அடிப்படை இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisment

சமீபத்திய நிகழ்வுகள் வழக்கத்திற்கு மாறானதா? டெல்லியில் அசாதாரணமானது எதுவும்  உணரப்படவில்லை என்று டெல்லியில் அமைந்திருக்கும் நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் முன்னாள் தலைவர் வினீத் கெஹ்லோட் கூறினார். அவர், தற்போது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நிலநடுக்க  தரவூ பகுப்பாய்வூகள் படி, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர், மவுண்ட் அபுட், ஆரவல்லி பகுதி வரை 2 அல்ல 3 எண்ணிகையிலான நிலநடுக்கங்கள் ஏற்படும். இது, 2.5 ரிக்டர் முதல் அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமாக  உணரப்படும். புவியியல் மற்றும் நில அதிர்வு செயல்முறைகள் மென்மையானதாக இருக்காது. எனவே, சில நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கத்தை நாம் உணர்கின்றோம். கடந்த இரண்டு மாதங்களில் டெல்லியில் அசாதாரண நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

சிறிய அளவிலான நிலநடுக்க அதிர்வைக் கண்டறிதல், அந்த பகுதியில் நிறுவப்பட்ட நிலநடுக்க பதிவுக் கருகி எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் நில அதிர்வு அளவீடுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட 115 டிடெக்டர்களில், 16 டிடெக்ர்கள் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இதன் விளைவாக, மக்களால் உணரப்படாத  சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் கூட பதிவு செய்யப்படுகின்றன.மேலும், இந்த தகவல்கள் பொது வெளியில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.

பெரிய நில நடுக்கத்திற்கான சாத்தியக் கூறுகள் ?

ரிக்டர் அளவு கோளில் நான்கு அல்லது அதற்கும் குறைவான அளவிலான நில நடுக்கங்கள் எந்த சேதத்தையும் எங்கும்  ஏற்படுத்தாது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் உலகம் முழுவதும் பதிவாகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கண்டுபிடிக்க முடியாதவை. மேலும், அவை வரவிருக்கும் பெரிய நிலநடுக்கம் குறித்த சாத்தியக் கூறுகளாகவும் அமையவில்லை. ஒரு பெரிய நில நடுக்கத்திற்கு இது போன்ற சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று  அர்த்தமில்லை. இருப்பினும், ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்கள் பகுப்பாய்வுகளுக்கு பயன்படுத்தலாம்.

டெல்லியில்  பெரிய அளவிலான நிலநடுக்கும் ஏற்படாது என்று யாரும் சொல்லவில்லை. மாறாக, இந்த சிறிய நிலநடுக்கங்களை வைத்து பெரிய நிலநடுக்கம் வரும் என்பதை கணிக்க முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாய் உள்ளது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நிலநடுக்க நிபுணரான ஹர்ஷ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில்," ஒருவேளை நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்பதை கணிக்க முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். கணித்த பின்பு நாம் என்ன செய்ய முடியும்? நகர மக்கள் அனைவரையும் வெளியேற்ற முடியுமா? அது சாத்தியமா? பூகம்பங்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாக்க கணிப்பு மட்டும் போதுமானதாக அமையாது. நமது கட்டமைப்புகள் பெரிய நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும். அலுவலகம், வீடு, அல்லது  திறந்தவெளியில் இருக்கும்போது  நில நடுக்கத்தை உணர்ந்தால் ஓட சிறந்த இடம் எது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த வகையான விவாதங்கள்தான் அர்த்தமுள்ளவை. மாறாக, பொது விவாதம் என்றல் பெயரில் யூகம், வதந்தி,அரைகுறையான தகவல்கள் தான் நாம் காண்கிறோம், ”என்று அவர் கூறினார்.

டெல்லிப் பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் எப்போதும் சாத்தியம் தான். அந்த சாத்தியத்தை யாரும் நிராகரிக்கவில்லை. ஆனால் அவை நடக்கும் பொது இயல்பாக நடக்கும். பூகம்பங்கள் என்றும் அறிவிக்கப்படாமல் தான் வர விரும்புகின்றன. கதவுகளைத் தட்டு முன்கூடியே சொல்லி வருவது அதற்கு  பிடிக்காது" என்று தெரிவித்தார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment