நித்யானந்தாவின் கைலாசா… ஒரு புதிய நாடு எப்படி உருவாகிறது?

பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்று தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்துகிறது. இந்தியாவிலிருந்து தப்பியோடிய சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் எங்கேயோ அவர் தனது சொந்த…

By: Updated: December 5, 2019, 05:43:31 PM

பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்று தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்துகிறது. இந்தியாவிலிருந்து தப்பியோடிய சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் எங்கேயோ அவர் தனது சொந்த நாட்டை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கேட்டலோனியா, ஈராக்கில் குர்திஸ்தான், சீனாவில் திபெத் என உலகெங்கிலும், பல்வேறு பிரதேசங்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்றன. புதிய நாடுகளுக்கு திடீரென அதிக தேவை உள்ளது.

ஒரு பிரதேசம் எப்படி புதிய நாடாக மாறுகிறது?

இதற்கு நேரடியான விதிகள் இல்லை. சில கூட்டு தேவைகளுக்கு அப்பால், ஒரு பிராந்தியத்தின் தேசத்திற்கான தேடலானது, அது முக்கியமாக எத்தனை நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் தன்னை ஒரு நாடாக அங்கீகரிக்க நம்ப வைக்கிறது என்பதைப் பொறுத்தது. ஐக்கிய நாடுகள் சபை ஒரு பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதே ஒரு நாட்டிற்கான மிகப்பெரிய அங்கீகாரம்.

யார் தன்னை ஒரு நாடு என அறிவிக்க முடியும்?

யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். பிராந்தியங்கள் சுதந்திரத்தை அறிவிப்பதிலிருந்து தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. 2017-18 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில், பதல்கடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராமங்களுக்கு வெளியே நடப்பட்ட கல் பெயர்ப் பலகையில், கிராம சபை மட்டுமே இறையாண்மை அதிகாரமாக அறிவித்தன.

சோமாலியாவில் 1991 முதல் சோமாலிலாந்து தன்னை ஒரு தனி நாடு என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வேறு யாரும் அதை அங்கீகரிக்கவில்லை. செர்பியாவில் உள்ள கொசாவோ 2008 இல் சுதந்திரத்தை அறிவித்தது. சில நாடுகள் மட்டுமே அதை அங்கீகரிக்கின்றன.

ஒரு நாடு ஆவதற்கு தேவையான அளவுகோள்கள்

பரவலாக நான்கு அளவுகோள்கள் உள்ளன. அவை 1933 இன் மான்டிவீடியோ மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஒரு நாடாக ஆவதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசம், மக்கள், அரசு மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் மக்கள் என்பவர்கள் அவர்களின் தேசியத்தின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் கணிசமான பெரிய மக்கள்தொகை என வரையறுக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் தாய் நாட்டிலிருந்து விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் உள்ளிட்ட கருத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சுயநிர்ணயம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு

ஜூன் 1945 இல், சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருள் யாரால், எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு மக்களுக்கு உரிமை உண்டு என்பதாகும்.

இருப்பினும், மிகப் பழமையான, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிகளில் ஒன்று, நாடுகள் ஒருவருக்கொருவர் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது ஆகும். இது குழப்பமானதாகவும் இருக்கிறது. ஒரு நாட்டிற்கு தாய் நாட்டிலிருந்து வெளியேற உரிமை உண்டு என்றாலும், அவர்களின் கூற்றை விரைவாக அங்கீகரிப்பது என்பது ஒரு நாட்டை பிரிப்பதற்கு மற்ற நாடுகள் ஒப்புக்கொள்கின்றன என்பதாகும்.

ஒரு சில காலனித்துவ சக்திகள் பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் போது சுயநிர்ணய உரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் உரிமை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது ஒப்பீட்டளவில் எளிதானது.

இன்று, இந்த விவகாரம் பிரச்னையாக மாறி, ஒரு நாட்டிற்குள் சில பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்குவதல், நீண்டகால ஆயுத மோதல்கள் அல்லது இரண்டையும் உருவாக்குகிறது.

ஆகையால், தைவான் அதை ஒரு நாடு என்று கூறினாலும், மற்ற நாடுகள் அதைப் பற்றிய சீனாவின் உணர்வுகளை ஒத்திவைக்கின்றன.   கடந்த ஆண்டு, சீனா தனது கவலைகளை எழுப்பியபோது ஏர் இந்தியா தனது இணையதளத்தில் தைவானின் பெயரை சீனா தைபே என்று மாற்றியது.

ஐ.நா. சபை அங்கீகாரம் முக்கியமானது ஏன்?

ஐ.நா. அங்கீகாரம் என்பது ஒரு புதிய நாடு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றை அணுகுவதாகும். அதன் நாணயம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. அதன் நாணயம் அங்கீகரிக்கப்பட்டு அந்நாடு வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது.

பெரும்பாலும், ஐ.நா. உறுப்பு நாடுகள் ஒரு நாட்டை அங்கீகரிக்கின்றன, ஆனால், ஐ.நா அதை ஒரு அமைப்பாக அங்கீகரிப்பதில்லை. இது தாய் நாட்டின் ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு எதிரான பாதுகாப்பைப் பொறுத்து ஒரு நாட்டை நடுநிலையாக வைக்கிறது.

பெருமளவில், இதுவரை, ஒரு நாடு ஐ.நா.வின் கருத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதை எத்தனை பெரிய சக்திகள் அதை ஆதரிக்கின்றன என்பதையும், அந்த நேரத்தில் அதன் தாய் நாடு எவ்வளவு சர்வதேச செல்வாக்கைப் பயன்படுத்துகிறது என்பதையும் பொறுத்தது.

கிழக்கு தைமூர் போர்த்துகீசிய காலனியாக இருந்தபோது 1960 களில் இந்தோனேசியாவால் படையெடுக்கப்பட்டது. ஆனால், மேற்கத்திய சக்திகளுக்கு ரஷ்யாவிற்கு எதிரான நட்பு நாடாக இந்தோனேசியா தேவைப்பட்டது. கிழக்கு தைமூரின் துயரங்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. 1990 களில், நாடுகளின் அதிகார அணிவகுப்புகள் மாறிவிட்டன. கிழக்கு தைமூர் 1999 க்குள் வாக்கெடுப்பு நடத்தி 2002 இல் சுதந்திரத்தை அறிவித்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:From bougainville referendum to nithyanandas kailaasa how is a new country formed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X