Shaju Philip
how Kerala’s Covid-19 story changed : ஏப்ரல் கடைசி வாரத்தில் 24 ஆக்டிவ் கேஸ்கள் மற்றும் ஜனவரியில் இருந்து வெறும் 500 கேஸ்கள் என்ற நிலையிலேயே இருந்தது கேரளா. மேலும் மற்ற மாநிலங்கள் கடும் சவால்களை சந்தித்துக் கொண்டிருந்த போது கொரோனா கர்வ் மட்டுப்படுத்தப்பட்டது என்று அறிவித்திருந்தது. நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது கேரளா அதிகம் பாதிப்பிற்கு ஆளாகும் மாநிலங்களில் 14வது இடத்தில் உள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி கணக்கின் படி, கேரளாவில் 76,525 நபர்களுக்கு மொத்தமகாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 31% பேர் நோய்க்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் 21.3% பேர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 7.92 லட்சம் பேர் மகாராஷ்ட்ராவில் பாதிப்படைந்த நிலையில் 25% நபர்கள் கொரோனா வைரஸிற்கு சிகிச்சை பெற்று வருகிறனர்.
கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து கேட்ட போது அதிக அளவில் நடத்தப்படும் பரிசோதனைகளை காரணம் என்று கூறப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மொத்தமாக 40, 352 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அன்று 2476 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 31ஆம் தேதி 1530 நபர்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டது. அன்று 18027 நபர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி பரிசோதனைகள் மேலும் குறைய துவங்கின. அன்று 14137 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1140 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூலை முதல் வாரம் வரையில் கேரளாவில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 200 லிருந்து 300 வரை என்ற ரீதியில் தான் இருந்தது. ஏப்ரல் மே மாதங்களில் 500 முதல் ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கொரானா அறிகுறி மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அப்போது மாநில சுகாதாரத்துறை ”சோதனை சோதனை” என்ற மந்திரத்தை மட்டும் பின்பற்றவில்லை. தனிமைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றுகிறோம் என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பெரும் தொற்று காரணமாக கேரள அரசு தினமும் செய்யப்படும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
ஆரம்பகாலங்களில் கேரளாவில் பதிவான தொற்று பெரும்பாலாக வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்தவர்களாலும் தொற்று ஏற்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்ததாலும் உருவானது. மே மாத ஆரம்பம் வரை 10 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் ஏற்பட்ட தொற்று ஆகும். அதன் பிறகு லோக்கல் ட்ரான்ஸ்மிசன் மாநிலத்தில் கிராபையே மாற்றிவிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பயணம் செய்தவர்களில் வெறும் 19 சதவீதத்தினருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 82 நபர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்துள்ளனர். அதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர் தொற்றின் காரணமாக கிட்டத்தட்ட 61 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக ஏற்படும் பாதிப்பில் 10% நபர்களுக்கு மட்டுமே ட்ராவல் ஹிஸ்ட்ரி இருக்கிறது.
To read this article in English
200க்கும் மேற்பட்ட ஹாட்ஸ்பாட்கள்
கேரளா முழுவதும் கிட்டத்தட்ட 200 இடங்களில் ஹாட்ஸ்பாட்கள் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகமாக இருக்கும் கடற்கரை பகுதிகள், சந்தைகள், அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மால்கள் என அனைத்து இடங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பிட்ட நகர மற்றும் கிராம வார்டுகளிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு சிகிச்சைகளுக்காக சுகாதார மையங்களை நாடிச்சென்றவர்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருக்கும் மத்திய சிறைச்சாலையில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சுகாதார மையங்களுக்கு சென்று அதன் மூலமாக நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர். சில ஹாட்ஸ்பாட்கள் இன்னும் ஆக்டிவாக இருக்கின்ற நிலையில் பல்வேறு இடங்களில் தொற்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பை குறைத்துக் கொண்டது
லாக்டவுன் காலங்களில் சமூக பங்களிப்பு மற்றும் அடிமட்டத்தில் இருந்து அரசின் கண்காணிப்பு போன்றவை திறமையாக செயல்பட்டன. ஆனால் காலப்போக்கில் அந்த நடவடிக்கைகள் வீக்கம் பெற துவங்கியது. ஜூலை 1ம் தேதி, உயர்மட்ட குழு வெளியிட்ட அறிக்கையில் குவாரண்டைன் மேனேஜ்மெண்ட்டில் ஏற்பட்ட குறைகளை பட்டியலிட்டது. குவாரண்டைனில் இருப்பவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை குறைய துவங்கியது. ஜூன் 1ம் தேதி 73949 நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவர்களை உள்ளூர் சுய நிர்வாகம் கண்காணித்து வந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 50% மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டனர். அதேசமயம், காவல்துறை 67 சதவீதத்தையும், சுகாதாரத் துறை 73 சதவீதத்தையும், வருவாய் 2 சதவீதத்தையும் மட்டுமே தொடர்பு கொண்டது. ஜூன் 20 அன்று மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக இருந்தபோது, அரசுத் துறைகளின் கண்காணிப்பு குறைந்தது. அந்த நாளில், உள்ளூர் சுய-அரசுத் துறையானது தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 43 சதவீதத்தினரை மட்டுமே தொடர்பு கொண்டது. அதே நேரத்தில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் சுகாதாரத் துறை 60.4 சதவீதம். காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் வழக்குகளை பதிவு செய்வதால், தனிமைப்படுத்தலுக்கு இணங்காததும் ஒரு காரணமாக மாறிவிட்டது” என்று கூறியது.
சந்தைகள் மூலம் பரவிய கொரோனா
விமான நிலையங்கள், துறைமுகங்கள், மாவட்ட எல்லைகள் மற்றும் பயணிகள் என அனைவரையும் ஸ்க்ரீன் செய்தோம். ஆனால் பல்வேறு மாநிலங்களின் சந்தைகளில் இருந்து கேரளாவிற்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த ட்ரக்குகள், மற்றும் கார்கோக்களில் கிருமி நீக்கம் செய்யப்படவில்லை. பெரிய பெரிய சந்தைகளில் இருந்து சின்னஞ்சிறிய கிராமங்களுக்கும் இப்படி தான் கொரோனா பரவியது. ஜூலை 13ம் தேதி தான் உயர்மட்ட குழு, “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டுமெனில் ட்ரெக் வாகன ஓட்டிகளையும் சோதனையிட வேண்டும்” என்று பரிந்துரை செய்தது. ஆனால் அப்போதே பல்வேறு சந்தைகளில் கொரோனா பரவ துவங்கியது. திருச்சூரில், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த ட்ரக்குகள் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அனைத்து சந்தைகளிலும் இதனை பின்பற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணம் என்ன என்றே தெரியாத நிலை
ஜூலையில் இருந்து ட்ராவல் ஹிஸ்ட்ரி மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் அல்லாதோரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கிரிமினல் வழக்குகளுக்காக கைதி செய்யப்பட்டவர்களும் கொரோனாவிற்கு ஆளானர்கள். ஒற்றை இலக்கத்தில் இருந்து காரணம் தெரியாமலேயே கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 159 நபர்கள் இப்படி கொரோனா வைரஸிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இறந்து போனவர்கள், மரணத்திற்கு பிறகு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இணக்கம்
ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து, அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியது என்ற எண்ணம் மனநிறைவுக்கு வழிவகுத்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டபோது, கேரளா இவற்றை மேலும் தளர்த்தியது. இது பொது போக்குவரத்தை அனுமதித்தது, மேலும் பல பகுதிகளை பசுமை மண்டலங்களாக தரப்படுத்தியது.
ஒவ்வொரு கட்டத்திலும், மால்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதன் மூலமும், திருமணங்களை அனுமதிப்பதன் மூலமும் மத்திய தளர்வுகளை விட கேரளா ஒரு படி மேலே இருந்தது. பல திருமணங்கள் மற்றும் மரண நிகழ்வுகளில் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவை கோவிட் -19 ஹாட்ஸ்பாட்டாக மாறியது. ஆகஸ்ட் 3 ம் தேதி, கேரள முதல்வர் பினராயி விஜயன் இதற்கு மக்களை காரணம் காட்டினர். கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினருக்கு தொடர்பு-தடமறிதல் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்வகிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
கேரளா எப்படி வித்தியாசமாக இருந்தது
முதல் கட்டமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, கேரளாவின் வழக்குகள் பெரும்பாலும் வெளிநாட்டில் வைரஸ் ஹாட்ஸ்பாட்களிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகளாக தான் இருந்தது . ஏப்ரல் மாதத்தில் முழுமையான ஊரடங்கு இருந்ததால் கேரளாவின் பணி இந்த குழுக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல் மற்றும் சிகிச்சையளிப்பது மட்டுமே. நாட்டின் பிற இடங்களில், கோவிட் -19 விஸ்வரூபம் காட்ட துவங்கியது. இவை அனைத்தும் கேரளாவில் கோவிட் -19 போர் முடிந்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.