Zeeshan Shaikh , Vishwas Waghmode
Shiv Sena and BJP in Maharashtra : சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 வருடங்களை வீண் செய்துவிட்டது என்றும் பாஜக துரோகம் இழைத்துவிட்டது என்றும் ஞாயிறு அன்று மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினேர். வலுவான இந்த அறிக்கை அக்கட்சிக்கும் ஒரு காலத்தில் அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்து பாஜகவிற்கும் சறுக்கலாக அமைந்துவிட்டது.
ஆரம்ப கால பயணம்
பால் தாக்கரே இக்கட்சியை 1966-ல் நிறுவிய பிறகு மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சிவசேனா போராடியது. மேலும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் தேவை சார்ந்த உறவைக் கொண்டிருந்தது. குறுகிய கால கூட்டணி கட்சியினரை எதிர்த்த தருவாயிலும் கூட கூட்டணி கட்சியினரால் நன்கு பலம் அடைந்தது சிவ சேனா.
சேனா ஒரு கடினமான பிராந்திய அடையாளத்தை வென்றெடுக்கத் தொடங்கியது. அடிக்கடி மும்பையில் குடியேறியவர்களை இலக்காக வைத்து பூர்வாங்க மக்களுக்கான அரசியலை நடத்தியது. பாஜகவுடன் கூட்டணி வைத்த போது 1989ம் ஆண்டு இந்துத்துவா அணியில் குதித்த சிவசேனா மும்பையை கடந்து கிராமப்புற மகாராஷ்ட்ராவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயன்றது.

இந்த கூட்டணி இரு தரப்பினருக்கும் பயனளித்தது. பாஜக தேசிய கட்சியாக பலம் பெற சிவசேனா ஊட்டமளித்தது. சேனா உதவியுடன் பாஜக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆழப்பரவியது. சேனாவின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதில் சிறிதும் கவலைப்படவில்லை என்றாலும் பாஜக தலைவர்கள் அடல் பிஹாரி, எல்.கே. அத்வானி ஆகியோருடன் உறவை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபட்டார் மறைந்த ப்ரோமோத் மகாஜன். மஹாராஷ்டிராவில் காவி கூட்டணியில் சேனாவின் ஆதிக்க நிலையை அங்கீகரிப்பதற்காக மத்திய பாஜக தலைவர்கள் தாக்கரே இல்லமான மாடோஸ்ரீக்கு (Matoshree) நேரில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நரேந்த்ர மோடியின் செல்வாக்கு உயர துவங்கிய போது இரண்டு கட்சியினருக்கும் இடையே இருந்த உறவிலும் மாற்றம் ஏற்படத்துவங்கியது. 2014ம் ஆண்டு தேர்தலில் மோடிக்கு கிடைத்த ஆதரவு, பாஜக இனியும் சிவசேனாவிற்கு அடிபணிய தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அதே ஆண்டில் சட்டமன்ற தேர்தல் உறுதி செய்யப்பட்ட பிறகு பாஜக அதிக இடங்களை தொகுதிப் பங்கீட்டில் கோரியது. மேலும் எந்தப் புரிதலும் எட்டப்படாதபோது, சேனாவுடனான 25 ஆண்டுகால தேர்தல் கூட்டணியை முறித்துக் கொள்ளத் தீர்மானித்தது பாஜக.
பிறகு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தனர் அக்கட்சியினர். ஆனாலும் கூட அதன் பிறகு பல்வேறு விதமாக இந்த உறவு சிதையத் துவங்கியது. 2014-19 பிஜேபி-சேனா அரசாங்கம் கூட்டணியினரால் சிதைந்தது. அதனை தொடர்ந்தும் தேர்தலில் ஒன்றாக கூட்டணியாக களம் இறங்கினாலும் கூட அடுத்து ஆட்சி அமைக்கும் போது கூட்டண் இறுதியாக பிளவுற்றது. சேனா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
லாப நஷ்டங்கள் என்ன?
இரண்டு கட்சிகளும் இணைந்து மகாராஷ்ட்ராவை 9 வருடங்கள் 7 மாதங்கள் ஆட்சி செய்தன. 1995-99 வரை மனோகர் ஜோஷி மற்றும் நாராயண் ரானே கூட்டணி ஆட்சியில் சிவசேனா ஆதிக்கம் செலுத்தியது. பிறகு 2014 – 19 ஆண்டுகளில் பாஜக ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த காலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பொறுப்பு வகித்தார்.
1990 – 2019 வரையிலான 7 சட்டமன்ற தேர்தல்களில், 2014 தேர்தல் தவிர்த்து, கூட்டணியாகவே களம் இறங்கினார்கள் இக்கட்சியினர். பாஜகவின் வாக்கு வங்கி 10.71%-ல் இருந்து 25.75% ஆக உயர்ந்தது. 2014ம் ஆண்டு தேர்தலின் போது உச்சம் பெற்ற பாஜக 27.81% வாக்கு வங்கியை தக்கவைத்தது.
ஆனால் சிவசேனாவின் நிலையோ வித்தியாசமானது. வாக்கு வங்கி 15.94% ஆக 1990-களில் இருந்தது. தற்போது அது 16.41% ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. 2004ம் ஆண்டு அதிகபட்சமாக 19.97% வாக்கு வங்கியை கொண்டிருந்தது சிவசேனா. 2014ம் ஆண்டு 19.35% வாக்கு வங்கியை தக்க வைத்தது இந்த காவிக் கட்சி.
தற்போது நிலவும் விரோத மனப்போக்கிற்கு காரணம் என்ன?
பாஜக மகாராஷ்ட்ராவில் தன்னை விரிவுப்படுத்திக் கொள்ள காட்டும் தீவிரமே தற்போது இவ்விரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணம். சிவசேனாவின் அரசியல் போக்கில் இது பிரச்சனையை தூண்டுகிறது. பாஜகவின் தற்போதைய தலைமை, முன்னால் கூட்டணி கட்சியினருக்கான கோரிக்கைகளுக்கு சிறிதளவே செவிசாய்க்கிறது. இதனால் பாதுகாப்பற்றதாக உணர துவங்கியது சிவசேனா.
மஹா விகாஸ் அகாடி அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து, கட்சிகள் அடிக்கடி ஒருவரையொருவர் அவமதிக்கும் நோக்கில் தங்களின் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். இந்துத்துவாவை கைவிட்டதாக பாஜக தாக்கரேவை குற்றம் சுமத்துகிறது. அதே நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக இந்திய ஜனநாயகத்தை பலவீனமடைய செய்கிறது பாஜக என்று சிவசேனா பதில் தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலைமை இறுதியில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வசைபாடும் சூழலுக்கு இட்டுச் சென்றதோடு தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தும் போக்கிற்கும் ஆளாக்கியது. கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக கூறியது சிவசேனாவை மேலும் கோபத்திற்கு ஆளாக்கியது. பதிலுக்கு 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்தது சேனா அரசு. இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசாங்க செயல்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்த ஆளுநர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்துகிறது பாஜக என்ற எம்.வி.ஏ கூட்டணியின் நம்பிக்கை, இக்கட்சிகளுக்கு இடையேயான வெறுப்பிற்கு வலுசேர்த்துள்ளது.
முதல்வர் பேச்சில் இடம் பெற்றிருக்கும் குறிப்பு
2019ம் ஆண்டு ஆட்சி அமைத்த பிறகு சிவசேனா தற்போது ஒரு அரசியல் சோதனையை எதிர்கொள்கிறது. மும்பை மாநகராட்சி உட்பட நகர்புறங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கட்சியின் தனிப்பட்ட கொள்ளையாகக் கருதப்படும் நாட்டின் பணக்கார குடிமை அமைப்பாகவே உள்ளது மும்பை மாநகராட்சி. எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர் கட்சியினர்.
மும்பை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவை ஓரங்கட்ட தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது பாஜக. ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான முதல்வரின் எதிர்ப்பு பேச்சு, கட்சி சவாலை சமாளிக்க தயாராக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சிவசேனா கட்சி தனது தளத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறது என்று தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் என்.சி.பி. கட்சிகளுடனான கூட்டணி சேனாவிற்கு மேலும் சரிவை தான் தரும் என்று பாஜக திடமாக நம்புகிறது. சில இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் சேனா 4வது இடத்தை தான் தக்க வைத்தது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை பகுப்பாய்வு செய்யாமல் பாஜக மீது கோபத்தை வெளிப்படுத்தி என்ன ஆகப் போகின்றது என்று பாஜக தலைவரும் முன்னாள் மகாராஷ்ட்ரா முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி எழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil