நிதி குறைப்பு, விசா சரிபார்ப்பு: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் நெருக்கடி! இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நிதி குறைப்பு, விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் இந்திய மாணவர்கள் கடும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட H.R.1 சட்டம், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மானியங்களைக் குறைத்து, ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வழிவகுத்துள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நிதி குறைப்பு, விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் இந்திய மாணவர்கள் கடும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட H.R.1 சட்டம், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மானியங்களைக் குறைத்து, ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வழிவகுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
visa scrutiny

நிதி குறைப்பு, விசா சரிபார்ப்பு: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் நெருக்கடி! இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

அமெரிக்காவில் உள்ள உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வகங்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளதால், நிதி உதவி இன்றி ஆராய்ச்சி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

Advertisment

"உயர்கல்வியை பாதிக்கும் மத்திய அரசின் கொள்கை மாற்றங்களால் இந்த சவாலான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது," என்று ஸ்டான்போர்ட் நிர்வாகம் $140 மில்லியன் நிதி பற்றாக்குறையை அடுத்து 363 வேலைகளைக் குறைப்பதாக அறிவித்தது. இதே நிலைமை அமெரிக்காவின் மற்ற உயரடுக்கு பல்கலைக்கழகங்களிலும் நிலவுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், டிரம்ப் நிர்வாகம் $2 பில்லியனுக்கும் அதிகமான நீண்டகால ஆராய்ச்சி மானியங்களை நிறுத்தி வைத்ததால், மருத்துவம், பொறியியல், அறிவியல் துறைகளில் பல ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கை என ஹார்வர்ட் வாதிடுகிறது. தேசிய சுகாதார நிறுவனம் (NIH) ஹார்வர்ட் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவமனைகளுக்கு வழங்கி வந்த சுமார் $110 மில்லியன் மானியங்களை பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கொலம்பியா பல்கலைக்கழகத்தில்,மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கி வந்த 180 ஆராய்ச்சியாளர்கள் வேலை இழந்தனர். இந்நிலைமைக்கு முக்கிய காரணம், ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட H.R.1, அல்லது தி ஒன்பிக் பியூட்டிபுல் பில் ஆகும். இந்த சட்டம் மத்திய அரசின் ஆராய்ச்சி மானியங்களை நிறுத்தி வைத்தது.

இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்

Advertisment
Advertisements

இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரிய குழுவாக உள்ளனர். இந்த புதிய கொள்கைகள் அவர்களுக்கு 3 முக்கிய துறைகளில் சவால்களை ஏற்படுத்துகின்றன: நிதி, குடியேற்றம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு.

வெளிநாட்டு மாணவர்களுக்கு என்ன நடக்கிறது?

அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த ஆண்டு 6,000 க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை ரத்து செய்துள்ளது. இதில் சுமார் 4,000 விசாக்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவை. அதே சமயம் 200–300 விசாக்கள், பாலஸ்தீன ஆதரவு செயல்பாடுகளுடன் தொடர்புடைய "பயங்கரவாத ஆதரவு" என்ற குற்றச்சாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் இப்போது விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகப் பக்கங்களை "அமெரிக்க எதிர்ப்பு" அல்லது "யூத எதிர்ப்பு" பதிவுகள் உள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு சமூக வலைதளப் பதிவும் அபாயகரமானதாக மாறியுள்ளது.

இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

விசா விண்ணப்பத்தில் சிக்கல்: வெளியுறவுத் துறையின் உத்தரவின்படி, தூதரகங்கள் F-1 விசாவிற்கான புதிய நேர்காணல் சந்திப்புகள் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் பல மாணவர்கள் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டியுள்ளது.

நேர்காணல்: நேர்காணல் நடைபெறும்போது, விண்ணப்பதாரர்கள் சமூக ஊடகப்பக்கங்களை பொதுவில் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். எந்தவொரு தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்பையும் (Privacy Setting) அதிகாரிகள் சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.

விசா வழங்கும் விகிதத்தில் சரிவு: இந்த கொள்கைகளின் தாக்கம் புள்ளிவிவரங்களில் தெளிவாகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட F-1 விசாக்களின் எண்ணிக்கை 9,906 மட்டுமே. இது முந்தைய ஆண்டை விட 27% சரிவு. 2023 இல் இதே காலகட்டத்தில் சுமார் 15,000 விசாக்கள் வழங்கப்பட்டன.

விசா செலவுகள் அதிகரிப்பு: 2026-ம் ஆண்டு முதல், மாணவர்கள் உட்பட அனைத்து குடியேற்றம் அல்லாத விசா விண்ணப்பதாரர்களும், வழக்கமான செயலாக்கக் கட்டணத்துடன் கூடுதலாக $250 (சுமார் ரூ. 21,000) மற்றும் $24 (சுமார் ரூ. 2,000) போன்ற கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

நேரடி நேர்காணல் கட்டாயம்: செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட, அனைவரும் விசா நேர்காணலுக்கு நேரில் வர வேண்டும். இந்த புதிய கொள்கை, சுற்றுலா, வணிகம் (B-1/B-2), மாணவர்கள் (F, M), வேலை (H-1B), மற்றும் பரிமாற்ற விசாக்கள் (J) போன்ற முக்கிய பிரிவுகளையும் பாதிக்கிறது.

H.R.1 சட்டத்தின் பங்கு என்ன?

கடந்த ஜூலை மாதம், அமெரிக்க அரசு H.R.1 (H1 Bill) என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் அரசுக்கு கடன் வாங்கும் வரம்பை அதிகரித்தாலும், அரசு செலவினங்களை குறைக்கிறது. இதனால், பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மானியங்களுக்கான நிதி குறைந்து விட்டது. மேலும், இந்த சட்டம் பணக்கார தனியார் பல்கலைக்கழகங்களின் சேமிப்பு நிதிகளுக்கு அதிக வரி விதிக்கிறது.

இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் மாணவர் உதவிக்கான நிதி குறைந்துவிட்டது. ஆராய்ச்சி வேலைகள் (அ) நிதி உதவியை நம்பியிருக்கும் இந்திய மாணவர்களுக்கு, வாய்ப்புகள் குறைந்து போட்டி அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது F-1 மற்றும் H-1B விசாக்களை எப்படிப் பாதிக்கிறது?

F-1 விசாவில் இருக்கும் மாணவர், தனது படிப்பைத் தொடர்வதற்கும், நிதி ஆதரவைப் பெறுவதற்கும் முழுநேர மாணவராக இருக்க வேண்டும். ஆனால் ஆராய்ச்சி உதவியாளர் (RA) அல்லது ஆசிரியர் உதவியாளர் (TA) வேலைகள் மூலம் கிடைக்கும் நிதி குறையும்போது, அவர்களின் கல்வி கட்டண தள்ளுபடி மற்றும் உதவித்தொகை திடீரென நிறுத்தப்படலாம். இதனால் மாணவர்கள் வகுப்புகளுக்கு பணம் செலுத்த முடியாமல், தங்கள் F-1 விசா நிலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

பட்டப்படிப்புக்குப் பிறகு பெரும்பாலான இந்திய மாணவர்கள் குறி வைக்கும் H-1B விசாவுக்கான வாய்ப்புகளும் குறைகின்றன. ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் துறைகள் சுருங்கி வருவதால், மாணவர்கள் தங்கள் H-1B விண்ணப்பங்களை வலுப்படுத்த உதவும் அனுபவங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் பிரபலமான நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

Explained

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: