இந்தியாவின் வசுதைவ குடும்பகம் Vs சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு
இந்தியாவின் கருப்பொருளான “ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்”, உண்மையில் சீனாவின் “ஒரு பெல்ட், ஒரு சாலை” என்பதிலிருந்து ஈர்க்கப்பட்டதாக பெய்ஜிங் ஒரு கருத்தை முன்வைத்துள்ளது.
India versus China is also Vasudhaiva Kutumbakam versus One Belt One Road
சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜி 20 உச்சி மாநாட்டைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதால், இந்தியா மற்றும் சீனாவின் மத்தியஸ்தர்கள், கூட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக ஒரே பெல்ட், ஒரு சாலை யோசனை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,
Advertisment
அதே நேரத்தில் இந்தியா வசுதைவ குடும்பத்தையும் சேர்க்க விரும்புகிறது.
இந்தியாவும் சீனாவும் இறுதி உச்சிமாநாட்டின் பிரகடனத்தில் தங்கள் சொந்த தத்துவ முத்திரையை வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தியாவின் கருப்பொருளான “ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்”, உண்மையில் சீனாவின் “ஒரு பெல்ட், ஒரு சாலை” என்பதிலிருந்து ஈர்க்கப்பட்டதாக பெய்ஜிங் ஒரு கருத்தை முன்வைத்துள்ளது.
எனவே இது தகவல்தொடர்பு பகுதியாக இருக்கலாம். ஆனால் இந்தியா இதற்கு உடன்படவில்லை மற்றும் இதை கூட்டு ஆவணத்தில் சேர்ப்பதை எதிர்த்து வருகிறது.
மாறாக, இது இந்தியாவின் கருப்பொருளின் ஒரு பகுதி என்று கூறி, கூட்டு அறிக்கையில் வசுதைவ குடும்பகம் (Vasudhaiva Kutumbakam) சேர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது.
ஆனால் சீன பிரதிநிதிகள் குழுவில் உள்ள சமஸ்கிருத வல்லுநர்கள் வசுதைவ குடும்பகம் என்றால் "உலகம் ஒரு குடும்பம்" என்றும், இந்தியாவின் கருப்பொருள் - ஒரு பூமி, ஒரு குடும்பம் - ஒரு விதத்தில் அர்த்தமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் கருப்பொருளில், "ஒரு எதிர்காலம்" உள்ளது, இது வசுதைவ குடும்பத்தின் பகுதியாக இல்லை, என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே பெய்ஜிங்கின் சமஸ்கிருத வல்லுநர்கள் வசுதைவ குடும்பகம் என்பது ’ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்பதற்கு ஒத்ததாக இல்லை- எனவே, அந்த சொற்றொடரை அவர்கள் அறிக்கையில் வர அனுமதிக்க முடியாது.
வசுதைவ குடும்பகம் என்ற சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தி, இதற்கு முன் எந்த ஒரு புரவலரும் செய்யாத முன்னுதாரணத்தை புதுடில்லி அமைத்துள்ளது, என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதிபர் பதவியை வகித்த நாடுகள் கூட்டு ஆவணத்தில் தங்கள் மொழி அல்லது கலாச்சாரத்தின் சொற்றொடர்களை சேர்க்கவில்லை என்று சீன ராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.
ஜி 20 நாடுகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களான- ஷெர்பாக்கள் -அடுத்த மூன்று நாட்களுக்கு மானேசரில் கூடி ஆவணத்தை இறுதி செய்வார்கள், அவர்கள் ஒன் பெல்ட் ஒன் ரோடு அல்லது வசுதைவ குடும்பகம் ஆகியவற்றை இதில் சேர்க்க வாய்ப்பில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத மண்டபத்திற்கு வெளியே நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிற்பம்
தினை மற்றும் பிற பண்டைய தானியங்கள் சர்வதேச ஆராய்ச்சி முன்முயற்சிக்கு(Millets and Other Ancient Grains International Research Initiative-MAHARISHI) மகரிஷி என்ற வார்த்தையைச் சேர்ப்பதிலும் சில எதிர்ப்புகள் உள்ளன.
மீண்டும் பெய்ஜிங்கின் மத்தியஸ்தர்கள் (அவர்களில் சிலர் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்) சமஸ்கிருதத்தில் மகரிஷி என்றால் "முனிவர்" என்று அர்த்தம், மேலும் இது கூட்டு அறிக்கையில் சமஸ்கிருத சொல்லைச் சேர்ப்பதற்கான ஒரு சுற்று வழி, என்று சுட்டிக்காட்டினர்
ஜி 20 விவசாய பணிக்குழுக் கூட்டங்களில் மகரிஷி என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்கான ஒருமித்த கருத்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில்- ஷெர்பாக்களும் சௌஸ்-ஷெர்பாக்களும்- ஒவ்வொரு வார்த்தையையும் வலுவான அரசியல் கண்ணோட்டத்துடன் நுணுக்கமாகப் பார்க்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அது தோல்வியடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.