Advertisment

Explained : ஆங் சான் சூகி சர்வதேச நீதிமன்றம் செல்ல காரணம் என்ன ?

இதுவரை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளவில் மூன்று இனப்படுகொலை வழக்குகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rohingya crisis ICJ ,suu kyi, ICJ, what is ICJ,

rohingya crisis ICJ ,suu kyi, ICJ, what is ICJ,

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி கடந்த டிசம்பர் 8 ம் தேதி நெதர்லாந்து விரைந்தார். இவர் நெதர்லாந்து நாட்டில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் முஸ்லீம் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை  செய்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தனது நாட்டின் சார்பாக வாதாட உள்ளார்.

Advertisment

மியான்மரை ஐ.சி.ஜே.க்கு அழைத்துச் சென்றவர் யார்?

நேரடியான பதில் காம்பியா குடியரசு. இந்தியாவின் திரிபுரா மாநிலம் அளவில் இருக்கும் இந்த சிறிய நாடு ,காம்பியா நதியின் இருபுறமும் ஒரு மெல்லிய நிலப்பரப்பாக நீண்டுள்ளது.

 

காம்பியா நாட்டில் பெரும்பான்மையான மக்கள்  இஸ்லாமியர்களாக உள்ளனர்.  மியான்மரில் நடப்பது இனப்படுகொலை என்று குற்றம் சாட்டிய 2019ம் ஆண்டு  நவம்பரில் சர்வேதேச நீதிமன்றத்துக்கு சென்றது. அனைத்து சர்வதேச குற்றங்களிலும் மிகக் கடுமையானது இந்த இனப்படுகொலை குற்றம். இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன்' சேர்ந்த 57 உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு அளித்தனர்.

'தற்காலிக நடவடிக்கைகளை நாடும் ' - இனப்படுகொலை குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டிப்பதற்கான விண்ணப்பம் (காம்பியா vs. மியான்மர் ) என்ற வழக்கின் வாதங்களை, சர்வதேச நீதிமன்றத்தின் 16 ஐ.நா நீதிபதிகளால் விசாரிக்கப்படுகிறது. விசாரனை வரும் 10ம் தேதி முதல் 12 வரை நடைபெறும்.

காம்பியா குடியரசும், மியான்மர் ஒன்றியக் குடியரசும்  நீதிமன்றத்தின் முன் தங்களின் வாய்வழி வாதங்களை இரண்டு சுற்றாக  முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த விசாரணை சர்வதேச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மியான்மரில் ரோஹிங்கியா நெருக்கடி என்ன?

நாட்டின் ராகைன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா கிராமங்கள் மீது 2017ம் ஆண்டு மியான்மர் இராணுவம் ஒடுக்குமுறையைத் தொடங்கியதில் இருந்து  7.3 லட்சம் ரோஹிங்கியாக்கள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஆகஸ்ட் மாதம், ஐ.நா. சபை இந்த இராணுவ ஒடுக்குமுறை நடவடிக்கை "இனப்படுகொலை நோக்கத்துடன்" மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியது.

இருந்தாலும், இனப்படுகொலை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மியான்மர் அரசு கடுமையாக மறுத்துள்ளது.

ராணுவத்தால் வெகுஜன கற்பழிப்பு, கொலைகள், தீ வைப்பு  போன்ற ரோஹிங்கியா மக்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அது மறுத்துள்ளது. ஒரு முறையான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டும் தனது  ராணுவம் ஈடுபட்டதாகவும் பதில் கூறியது .

தனிப்பட்ட முறையில்  ஆஜராக இருக்கும் ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாக, மியான்மர் அரசு தனது அறிக்கையில் ரோஹிங்கியா இனப்படுகொலை செய்யவில்லை என்றும், இதை விசாரிக்கும் அதிகாரம்  ஐ.நா நீதிமன்றத்திற்கு இல்லையென்றும், காம்பியாவின் வழக்கு முழு சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.

விசாரணைகள் முடிந்ததும் என்ன நடக்கும்?

இருதரப்பின் வாதங்களை அடுத்து 'தற்காலிக நடவடிக்கைகள் ' குறித்த வேண்டுகோளை சர்வேதச நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும். இனப்படுகொலை பற்றிய மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் பிறகு தொடங்கும். அடுத்த ஆண்டு விசாரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

சர்வதேச நீதிமன்ற வழக்குகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கும், விரைவான நீதியை நம்மால் எதிர்பார்க்க முடியாது. மேலும், சர்வதேச ஆய்வாளர்களின் கூற்றின்படி, இனப்படுகொலைக்கான தண்டனையை வழங்குவதற்கான சட்டபூர்வமான சாத்தியக் கூறுகள் மிகவும் அரிதாகவே உள்ளது.

இதுவரை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளவில் மூன்று இனப்படுகொலை வழக்குகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன: கம்போடியா (1970 களின் பிற்பகுதி), ருவாண்டா (1994), போஸ்னியாவின் சிரெப்ரெனிகா இனப்படுகொலை  (1995).

இது இனப்படுகொலைச் செயல்களைக் (உதாரணமாக, கொலைகள்) காட்டுகிறதா?   ஒரு மக்களை அவர்களின் இனத்தின் அடிப்படையில் ஒழிப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டனவா?  போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதால் இனப்படுகொலையை நிரூபிப்பது கடினம்  என்று ராய்ட்டர்ஸ் செய்தி நாளிதழ் ரிச்சர்ட் டிக்கரை  என்ற மனித உரிமை ஆர்வலரின் கூற்றை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.

சர்வதேச நீதிமன்றம் என்றும் அழைக்கப்படும் ஐ.சி.ஜே 1945 இல் நிறுவப்பட்டது.  பெரும்பாலும் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனைகளை  கையாளும் .

சிறுகுறிப்பு:  தனிநபர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஹேக்கில்  அமைந்துள்ள  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் செல்கின்றன.

ஐ.நா சர்வேதச நீதிமன்றம் தனிப்பட்ட நபரை விசாரிக்காது. ஆங் சான் சூகி மியான்மர் நாட்டிற்காக தற்போது போது நெதர்லாந்து சென்றுள்ளார்.

Myanmar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment