வாரணாசி-திப்ரூகர் கப்பல் சுற்றுலா.. பயணத்தை தொடங்கிய கங்கா விலாஸ்
வாரணாசியில் இருந்து புறப்படவுள்ள இந்த கப்பல், 51 நாட்களில் 3,200 கி.மீ தூரத்தை கடந்து, 27 நதி அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களைக் கடந்து அசாமில் உள்ள திப்ருகரில் தனது பயணத்தை முடிக்கும்.
ஜனவரி 13 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து கங்கை நதிக் கப்பல் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 51 நாள் பயணப்படும் இந்தக் கப்பல், உலகின் மிக நீளமான ஆற்றுப் பயணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது, அதன் இறுதி இலக்கான அஸ்ஸாமில் உள்ள திப்ருகரை மார்ச் 1ஆம் தேதி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
எம்வி கங்கா விலாஸ், அதன் வழித்தடம், பிட்ஸ்டாப்கள் மற்றும் அது எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
பாதை
வாரணாசியில் இருந்து புறப்பட உள்ள MV கங்கா விலாஸ் என்ற உல்லாசக் கப்பல், 51 நாள்களில் 3,200 கிமீ தூரம் கடந்து, 27 நதி அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களைக் கடந்து திப்ருகரில் தனது பயணத்தை முடிக்கும். உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி மலைகள் மற்றும் பீகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, வங்காளதேசத்தின் டாக்கா மற்றும் அசாமில் உள்ள குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களுக்கு இந்த பயணம் செல்கிறது.
வாரணாசி திப்ரூகர் சொகுசு கப்பல்
தொடர்ந்து, சாரநாத்தின் புத்த தலமான வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கங்கா ஆர்த்தியை காண நிறுத்தப்படும். அதன் பின்னர் அஸ்ஸாமின் மிகப்பெரிய நதி தீவான மஜூலியும் கூட. பயணிகள் பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா மற்றும் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தையும் பார்வையிடுவார்கள். இந்த கப்பல் வங்காள விரிகுடா டெல்டாவில் உள்ள சுந்தர்பன்ஸ் வழியாகவும், காசிரங்கா தேசிய பூங்கா வழியாகவும் பயணிக்கும்.
மேலும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இந்த கப்பல் சுற்றுலா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசத்தின் சர்வதேச எல்லைகள் வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் பாதுகாப்பு நெறிமுறைகளும் கவனிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.
ஜனவரி 10 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கப்பலில் ஏறியபோதும், அவர்கள் முதல் இரண்டு நாட்களை உள்ளூர் சுற்றுலாக்களில் கழித்துள்ளனர்.
குரூஸ் லைனர்
கப்பலில் மூன்று அடுக்குகள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன் 18 அறைகள் உள்ளன, அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து 32 சுற்றுலாப் பயணிகள் பயணத்தின் முழு நீளத்திற்கும் பதிவு செய்துள்ளனர். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 25,000 ரூபாய் செலவாகும்.
இது தனியார் ஆபரேட்டர்களால் நிர்வகிக்கப்படும் அதே வேளையில், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI), கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் (MoPSW) திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.
வாரணாசி திப்ரூகர் சொகுசு கப்பல்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான எம்வி கங்கா விலாஸின் அடுத்த பயணத்தை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும், முன்பதிவு விரைவில் திறக்கப்படும் என்றும் ஆபரேட்டர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். Antara River cruises இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.
நதி சுற்றுலா
நாட்டில் ரிவர் க்ரூஸ் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த மத்திய கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்தத் துறையானது உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். நாட்டில் இந்தத் துறையின் அதிகபட்ச வெளிப்பாடு மற்றும் விரைவான வளர்ச்சிக்காக நதி சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்பட்டு தற்போதுள்ள சுற்றுலா சுற்றுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
இந்தியாவில், கொல்கத்தா மற்றும் வாரணாசி இடையே எட்டு நதி கப்பல்கள் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்ரா) இல் கப்பல் இயக்கம் செயல்படுகிறது.
வாரணாசி திப்ரூகர் சொகுசு கப்பல்
உள்கட்டமைப்பு மேம்பாடுகள், துறைமுக கட்டணங்களை பகுத்தறிவு செய்தல், வெளியேற்றும் கட்டணங்களை நீக்குதல், பயணக் கப்பல்களுக்கான முன்னுரிமை பெர்திங் மற்றும் இ-விசா வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நாட்டின் பயண சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
தற்போது 0.4 மில்லியனாக உள்ள கப்பல் பயணிகளின் போக்குவரத்தை 4 மில்லியனாக அதிகரிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. க்ரூஸ் சுற்றுலாவின் பொருளாதார திறன் வரும் ஆண்டுகளில் $110 மில்லியனில் இருந்து $5.5 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/