நான் 'கங்கை டால்பின்' பேசுகிறேன்; என்னை நீங்களாவது காப்பாற்றுவீங்களா?

கடைசியாக, அசாம் மற்றும் உத்தரபிரதேச நதிகளில் 962 ‘கங்கை’ டால்பின்கள் மற்றும் 1,275 இந்தியாவின் தேசிய நீர்வாழ் டால்பின்கள் இருந்தன. டால்பின்கள் குறித்த இந்த எண்ணிக்கையை சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பாஜக உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி, நாட்டில் உள்ள கங்கை டால்பினின் மக்கள் தொகை மற்றும் வசிப்பிடப் பகுதிகள் குறித்து ஆய்வை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா என்று கேட்டிருந்தார். இதுபோன்ற மதிப்பீடுகள் அந்தந்த மாநில வனத்துறைகளால் செய்யப்படுகின்றன என்றும், மத்திய அமைச்சகத்தில் தரவு இணைக்கப்படவில்லை என்றும் சுப்ரியோ பதிலளித்தார். அசாம் மற்றும் உ.பி. ஆகிய இரு மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை அவர் தாக்கல் செய்தார்.

‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா?’- திருநங்கைகள் கேள்வி

அசாமில், டால்பின்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடு 2018 ஜனவரி – மார்ச் மாதங்களுக்கு இடையில் செய்யப்பட்டது. உ.பி.யில் டால்பின்களின் எண்ணிக்கை 2015ல் 1,272 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2012 ல் 671 ஆக இருந்தது.

அசாமில், மூன்று நதிகளில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது, 962 டால்பின்களில் 877 பிரம்மபுத்ரா நதியில் உள்ளன. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு என்பதற்கும் மேலாக, கங்கை டால்பினானது அசாம் அரசாங்கத்தால் மாநில நீர்வாழ் விலங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் உள்ள ஆறுகளில் இருந்து வண்டல் மண் எடுத்தல் போன்ற பணிகள் தடுக்கப்பட்டு, டால்பின்களின் எண்ணிக்கை சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இந்தியாவில் ஆபத்தில் இருக்கும் உயிரினமாக கங்கை டால்பினை பட்டியலிட்டுள்ளது.

WWF இன் கூற்றுப்படி, கங்கை டால்பினுக்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது அணைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்குவதாகும். இதுகுறித்து பதிலளித்த அமைச்சர், “கங்கை டால்பினுக்கான பாதுகாப்பு செயல் திட்டம் 2010-2020 படி, இந்த டால்பின்களுக்கான அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் நதியில் மேற்கொள்ளப்படும் அதிகமான போக்குவரத்து, நீர்ப்பாசன கால்வாய்கள் அமைத்தல் போன்றவை முக்கிய காரணிகளாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close