Advertisment

முறைப்படுத்தப்பட்ட 'பாலின பாகுபாடு': பெண்களுக்கான தாலிபானின் புதிய சட்டம் என்ன?

கடந்த மாத இறுதியில், ஆகஸ்ட் 2021-ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோன்ற சட்டங்களின் முதல் முறையான சட்டமாக்கல் இதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gender apartheid

தலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாடா, ஆப்கானிஸ்தானின் "ஒழுக்கச் சட்டத்தை" இயற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார், நாட்டில் பெண்கள் மற்றும் பிற குழுக்களுக்கான கட்டுப்பாடுகளை முறைப்படுத்தி வெளிப்படுத்தினார். குறிப்பாக இது பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் என ஐ.நா முதல் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisment

114 பக்க அறிக்கை வெளியிடப்பட்டது, கடந்த மாத இறுதியில், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோன்ற சட்டங்களின் முதல் முறையான சட்டமாக்கல் இதுவாகும்.

புதிய சட்டம் 

ஒரு பெண் தனது முழு உடலையும் பொது இடங்களில் எல்லா நேரங்களிலும் மறைப்பதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது, மேலும் முகத்தை மறைப்பதும் அவசியம் என்று கருதுகிறது.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி படி, ஒரு பெண்ணின் குரல் “intimate” என்று  கருதப்படுகிறது, மேலும் பொது வெளியில் பாடுவதையோ, ஓதுவதையோ அல்லது சத்தமாக வாசிப்பதையோ கேட்கக்கூடாது. தி கார்டியனில் ஒரு அறிக்கை, பெண்கள் தங்கள் வீட்டிற்குள் கூட பாடுவதையோ சத்தமாக வாசிப்பதையோ கேட்கக்கூடாது என்று அந்த  சட்டத்தில்  கூறுவதாக சொல்லியது.

இசையை இசைப்பது மற்றும் தொடர்பில்லாத ஆண்களும் பெண்களும் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களும் ஆண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி, இந்த சட்டம் பெண்களை "முகமற்ற, குரலற்ற நிழல்களாக" மாற்றுகிறது என்றார்.

அந்த சட்டத்தில் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆண்கள் முழங்காலுக்கு மேல் முடிவடையும் ஆடைகளை அணியக்கூடாது என்றும், தாடியை நெருக்கமாக வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

அதிகரிக்கும் அடக்குமுறை

கடந்த காலங்களில், தலிபான்கள் இத்தகைய கொள்கைகளை அச்சுறுத்தல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்பு காவல்களைப் பயன்படுத்தி அமல்படுத்தியுள்ளனர் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

இந்த சட்டங்கள் மேலும் "புதிய அடக்குமுறை நடவடிக்கைகளை" அறிமுகப்படுத்துகிறது என்று ஐ.நா நிபுணர்கள் தெரிவித்தனர். "புதிய சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற, தலிபானின் உயர்  அதிகாரிகள் தன்னிச்சையாக தனிநபர்களை தடுத்து நிறுத்தி தண்டிக்க விரிவான அதிகாரம் பெற்றுள்ளனர்.  - இது "ஏற்கனவே பரவிவரும் அச்சம் மற்றும் கண்காணிப்புச் சூழலை ஆப்கானிய சமூகம் முழுவதும் மோசமாக்கும். ” என்றும் ஐ.நா கூறியது. 

25 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை

ஐ.நா நிபுணர்கள் இந்த நடவடிக்கைகளை "பாலின நிறவெறி" மற்றும் முந்தைய தலிபான் ஆட்சியில் (1996-2001) காணப்பட்டதைப் போன்ற அதே நிலை என்று விவரித்தனர். 

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்க தலைமையிலான படைகளால் தலிபான்கள் அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டனர்; இருப்பினும், குழுவை ஒருபோதும் அழிக்க முடியாது.

அமெரிக்க பிரசன்னத்திற்கான செலவுகள் அதிகரித்து, அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை நிறுவ போராடியதால், அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோஹாவில் நடத்தப்பட்டன.

ஆங்கிலத்தில் படிக்க:   Formalised ‘gender apartheid’: What Taliban’s new law means for women

2021-ம் ஆண்டின் நடுப்பகுதியில், முழுமையாக அமெரிக்கப் படைகள் பின்வாங்க இருந்த போது தலிபான் படைகள் விரைவாக அடுத்தடுத்து முக்கிய நகரங்களை ஆரம்பித்தன. இறுதியாக அமெரிக்கப் படைகள் குழப்பத்தின் மத்தியில் வெளியேறினர், காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்தனர் மற்றும் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினர்.

தலிபான் ஆட்சி அமைந்த பின் நடந்த முதல் செய்தியாளர் சந்திப்பில், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், "எங்கள் சகோதரிகள், எங்கள் ஆண்களுக்கு ஒரே உரிமை உண்டு" என்று கூறினார்.

"அவர்களும் எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றப் போகிறார்கள்" என்று கூறினார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் வாழ்க்கையை "எங்கள் ஷரியாவின் கட்டமைப்பிற்குள்" வாழ வேண்டும் என்றும் முஜாஹித் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment