Gene that may explain why some are asymptomatic Tamil News : கோவிட் -19 தொற்று ஏற்பட்டும், சிலர் ஏன் நோய்வாய்ப்படவில்லை என்பதை விளக்கும் மரபணு இணைப்புக்கான ஆதாரங்களை ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் நியூகேஸில் பல்கலைக்கழகம் தலைமையிலான குழு, HLA-DRB1*04:01 என்ற மரபணு, அறிகுறியுடன் நபர்களைக் காட்டிலும் அறிகுறியற்ற நபர்களில் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது. இந்த மரபணு உள்ளவர்களுக்குக் கடுமையான கோவிட்டிலிருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு எச்.எல்.ஏ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான கோவிட்டை உருவாக்கிய அதே சமூகத்தைச் சேர்ந்த நோயாளிகளுடன், அறிகுறியற்ற நபர்களை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர். ஆனால், அவர்களுக்கு அடிப்படை நோய்கள் எதுவும் இல்லை. எச்.எல்.ஏ எனப்படும் மரபணு வகைகளில் கவனம் செலுத்த அவர்கள் அடுத்த தலைமுறை வரிசை முறைகளைப் பயன்படுத்தினர்.
அவர்கள் அடையாளம் கண்ட மரபணு, HLA-DRB1 * 04: 01, அட்சரேகை (latitude) மற்றும் தீர்க்கரேகைகளுடன் (longitude) நேரடியாக தொடர்புபட்டுள்ளது. அதாவது, ஐரோப்பாவின் வடக்கு மற்றும் மேற்கு நாடுகளில் அதிகமான மக்கள் இந்த மரபணுவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த நோயை எளிதில் பாதிக்கக்கூடிய மக்களுக்குப் பரப்புகிறது என்று நியூகேஸில் பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து பேரில் ஒருவர் இந்த மரபணுவைக் கொண்டிருப்பதாகக் குழு கணித்துள்ளது.
இணை எழுத்தாளர் டாக்டர் கார்லோஸ் எச்செவர்ரியா, “இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஏனெனில், சிலருக்குத் தொற்று ஏற்பட்டும் ஏன் நோய்வாய்ப்படவில்லை என்பதை விளக்குகிறது. இது ஒரு மரபணு சோதனைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடும். எதிர்கால தடுப்பூசிகளுக்கு நாம் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கலாம்” என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil