குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை ஐ.ஐ.டியிலும் அவ்வாறு நடந்த போராட்டத்தில் ஈடுபட்டார் ஜெர்மனியை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவர் ஒருவர். அவர் கையில் வைத்திருந்த பதாகையில் ”அன்று நாங்கள் அங்கிருந்தோம்” ( “1933 to 1945; We Have Been There”) என நாஜி ஆட்சியை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
இதற்காக, இவர் இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பப்பட்டர்.
23, 2019It is learnt that Jakob Lindenthal, an exchange student at @iitmadras, from Dresden Germany, is asked to leave India asap. Recently he joined #CAA_NRCProtests in Chennai. pic.twitter.com/ZeS8h6ibfR
— Jinoy Jose Palathingal (@jinoyjosep)
It is learnt that Jakob Lindenthal, an exchange student at @iitmadras, from Dresden Germany, is asked to leave India asap. Recently he joined #CAA_NRCProtests in Chennai. pic.twitter.com/ZeS8h6ibfR
— Jinoy Jose Palathingal (@jinoyjosep) December 23, 2019
இதில் மற்றொரு தகவல் எனவேன்றால் , ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கு ஜெர்மன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது. மெட்ராஸைத் தவிர, பம்பாய், கான்பூர் மற்றும் டெல்லி ஐ.ஐ.டி.களும் வெளிநாட்டு ஒத்துழைப்பின் மூலம் தான் நிறுவப்பட்டன.
ஐ.ஐ.டி.களை அமைப்பதற்காக இந்தியா ஏன் வெளிநாடுகளின் கட்டமைப்பை நோக்கியது , எந்தந்த நாடுகள் உதவியது?
தினேஷ் சர்மா எழுதிய “தி அவுட்சோர்சர்: தி ஸ்டோரி ஆஃப் இந்தியாவின் ஐடி புரட்சி” புத்தகத்தில் “பிரிட்டிஷ் ஆட்சியின் பின் சுதந்திர இந்தியாவில் நவீன பொறியியல் கல்வியை வளர்ப்பதற்கான யோசனை உருவானது. ஜூலை 1951ல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கரக்பூரில் நிறுவப்பட்ட முதல் ஐ.ஐ.டிஉயரக் கல்வி நிறுவனம் மூலம் நேரு இந்தியாவின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்கின்னார். இந்திய பொறியியல் நிறுவனங்கள் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பிய நேரு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சில முன்னணி உயர் கல்வி நிறுவனங்களின் மீது தனது கவனத்தை செலுத்தினார்.
மேலும், பெரிய நவீன உயரக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான வளங்கள் இந்திய தேசத்தில் இல்லாததால், மற்ற நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை நாடுவது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது.
இன்றைய இந்திய ஐஐடி-ன் பன்முகப்படுத்தப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி முறை பலதரப்பட்ட நாடுகளில் கிடைத்த உதவியின் விளைவாகும். பலதரப்பட்ட நாடுகளில் உதவி என்பது அரசியல் ரீதியாக, நேருவின் உலகளாவிய அணி சேரா இயக்கத்திற்கும் (எந்தவொரு வல்லரசுடனும் ஒத்துழைக்காத) பொருந்துகிறது.
1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் முதல் ஐ.ஐ.டி அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், யு.எஸ்.எஸ்.ஆர், ஜெர்மனி, நோர்வே, சுவீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களையும் ஈர்த்தது.
ஐ.ஐ.டி பம்பாய் - யு.எஸ்.எஸ்.ஆர்
இந்தியாவின் இரண்டாவதாக உருவாக்கபப்ட்ட ஐ.ஐ.டி மும்பைக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை, யுனெஸ்கோ ( ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ) 1956ல் சோவியத் யூனியன் மற்றும் பிற கிழக்கு தொகுதி நாடுகளிடமிருந்து நன்கொடையாக ஏற்பாடு செய்தது என்று சர்மா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஐ.ஐ.டி-மும்பை தனது வலைத்தளத்தில்: “இந்த நிறுவனம் 1956 முதல் 1973 வரை யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சோவியத் ஒன்றியத்திலிருந்து உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவ சேவைகளின் வடிவத்தில் கணிசமான உதவியைப் பெற்றது. மேலும், சோவியத் ஒன்றியத்தின் பல புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து 59 நிபுணர்களையும் 14 தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஐஐடி மும்பை பெற்றது . சோவியத் ஒன்றியத்தில் இந்திய ஆசிரிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 27 பெல்லோஷிப்புகளையும் யுனெஸ்கோ வழங்கியது. 1965ம் ஆண்டில் இந்தியா- யுஎஸ்எஸ்ஆர் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கனவே பெறப்பட்ட உதவித் திட்டத்தை கூடுதலாக்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.
எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் இந்தியாவில் விவாகரத்து வழங்கப்படுகிறது?
ஐ.ஐ.டி மெட்ராஸ் - மேற்கு ஜெர்மனி
இந்தியாவின் மூன்றாவது ஐஐடி- சென்னை நகரத்தில் 1959ம் ஆண்டும் துவங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதம மந்திரியான நேரு ஜெர்மனி நாட்டிற்கு விஜயம் செய்தபோது பெடரல் குடியரசு (ஜெர்மனி) இந்தியாவில் உயரக் கல்வி நிறுவனங்களுக்கு உதவ முன்வந்தது. 1959 இல் போன் என்ற நகரத்தில் இந்தோ-ஜெர்மன் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஐ.ஐ.டி-எம் வலைத்தளத்தின்படி, “முதல் இந்தோ-ஜெர்மன் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மன் பேராசிரியர்களும்,20 இந்திய ஆசிரிய உறுப்பினர்களுக்கு பயிற்சி வசதிகள் மற்றும் மத்திய பட்டறை நிறுவுவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸில் அமைந்திருக்கும் 20 ஆய்வுக் கூடங்கள் பெறப்பட்டதாக கூறுகிறது."
1962 ஆம் ஆண்டில் ஜெர்மனி பெடரல் குடியரசின் தலைவரான டாக்டர் ஹெய்ன்ரிச் லுப்கேவின் வருகை இந்தோ-ஜெர்மன் தொழில்நுட்ப உதவித் திட்டம் துவங்க வழி வகுத்தது.
1974ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
திட்டங்களில் பல்கலைக்கழக கூட்டு, தொழில்துறை ஆலோசனை சேவையை வலுப்படுத்துதல், தொலைக்காட்சி பொறியியலில் முதுகலை திட்டத்தை நிறுவுதல் போன்ற நோக்கங்களுடன் நான்காவது இந்தோ-ஜெர்மன் ஒப்பந்தம் போடப்பட்டது . 1976 ஆம் ஆண்டில், வானூர்தித் துறையின் ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காக பிரான்ஸ் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்தாவது இந்தோ-ஜெர்மன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், மைக்ரோ செயலி ஆய்வகம், குறைந்த வெப்பநிலை ஆய்வகம் மற்றும் உயர் பாலிமர் ஆய்வகம், இரு நாடுகளுக்கிடையே மாணவர்கள் பரிமாற்ற வருகைகளைத் தொடர்வது போன்ற முக்கிய நோக்கங்களை கொண்டது இந்த ஒப்பந்தம் .
ஐ.ஐ.டி கான்பூர் - அமெரிக்கா
கான்பூர் இந்தோ-அமெரிக்கன் திட்டத்தின் (கேஐஏபி ) ஒரு பகுதியாக 1959ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஐ.ஐ.டி, அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.
ஐ.ஐ.டி-கே வலைத்தளத்தின்படி, “1962-72 காலகட்டத்தில், இந்த கேஐஏபி திட்டத்தின் வாயில் ஒன்பது முன்னணி கல்வி நிறுவனங்களை அடக்கிய கூட்டமைப்பிடமிருந்து தொழில்நுட்ப உதவியைப் பெற்றதாக தெரிவிக்கிறது. மேலும், திட்டத்தின் கீழ், இந்த கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஐஐடி கான்பூரின் கல்வித் திட்டங்களை அமைப்பதற்கும், பயிற்றுவிப்பு மற்றும் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கும் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. ”
ஷர்மா தனது புத்தகத்தில் , “இத்தகைய மாறுபட்ட சர்வதேச உள்ளீடுகள் இருந்தபோதிலும், ஐ.ஐ.டி.களின் வளர்ச்சியில் எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தை ஈடுபட வைக்க நேரு மிகவும் ஆர்வமாக இருந்தார்… ஐஐடி கான்பூர் நிறுவனத்தை அமைக்க உதவுவதற்காக இறுதியாக, எம்ஐடி நிறுவனமும் ஒன்பது அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பை வழிநடத்த ஒப்புக்கொண்டது. இந்த கூட்டமைப்பிலுள்ள மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு: கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கார்னகி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கேஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் , பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பர்டூ பல்கலைக்கழகம், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்.
ஐ.ஐ.டி டெல்லி - யுகே
இது 1961ல் நிறுவப்பட்ட ஐந்தாவது ஐ.ஐ.டி.
நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி: “டெல்லியில் ஐஐடி உயர்க் கல்வி அமைப்பது தொடர்பாக இந்திய அரசு ஒத்துழைப்புக்காக பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அத்தகைய ஒத்துழைப்புக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டாலும் , ஆரம்பத்தில் ஒரு சுமாரான வழியில் தான் தனது ஒத்துழைப்பை முனைந்தது. எனவே அவர்களின் உதவியுடன் டெல்லியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
டெல்லி இன்ஜினியரிங் கல்லூரி அறக்கட்டளை இங்கிலாந்து அரசு மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கைத்தொழில் கூட்டமைப்பின் உதவியுடன் நிறுவப்பட்டது. பின்னர், எச்.ஆர்.எச். எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப்ஸ் தனது இந்திய பயணத்தின் போது, ஜனவரி 28,1959 அன்று கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.