Advertisment

புத்த புனிதத் தலம்; உ.பியின் பின் தங்கிய மாவட்டம்; குஷிநகர் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை தன்னுடைய கையில் வைத்துள்ளது பாஜக. காங்கிரஸ் மற்றும் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் ஒவ்வொரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

author-image
WebDesk
Oct 21, 2021 10:35 IST
New Update
Kushinagar Revered Buddhist pilgrimage

Harikishan Sharma

Advertisment

Kushinagar Revered Buddhist pilgrimage : கிழக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகரில் 20ம் தேதி அன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குஷிநகரின் வளர்ச்சி என்பது மத்திய மற்றும் மாநில அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக அமைந்திருந்தது என்று மோடி தெரிவித்தார்.

புத்த மத புனித தலம்

கி.மு. 483ம் ஆண்டில் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த இடம் குஷிநகர். எனவே இது சர்வதேச புனித பயணத்தின் மையமாக கருதப்படுகிறது. ஆனாலும், புத்த மதத்தை பின்பற்றும் மக்கள் தொகை இங்கு குறைவாகவே உள்ளது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஷிநகரில் உள்ள 35.64 லட்சம் தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையாக (29.28 லட்சம்) உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் (6.20 லட்சம்) உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 5006 கிறித்துவர்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தில் வசித்து வரும் புத்த மதத்தினர் எண்ணிக்கை 4,619 அல்லது 0.12% மட்டுமே.

கேரி, மஹாராஜ்கஞ்ச், சித்தார்த்நகர், சுல்தான்பூர், பஸ்தி, மைன்பூர், ஜௌன்பூர், ப்ரதாப்கர், ஹர்டோய் அம்ற்றும் அசாம்கர் பகுதிகளில் குசிநகரைக் காட்டிலும் அதிக புத்த மதத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது செய்திகளில் அதிகம் அடிபட்ட, விவசாயிகள் படுகொலை நடைபெற்ற லக்கீம்பூர் கேரியில் தான் அதிக அளவிலான புத்த மதத்தினர் (18,454) வசித்து வருகின்றனர்.

publive-image

மாநிலத்தின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்று

வருமான அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாக குஷிநகர் உள்ளது. உ.பியின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் வெளியிட்ட மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) தரவுகளின் படி குஷிநகரின் தனிநபர் டிடிபி நிலையான விலையில் (2011-12) 2019-20 நிதியாண்டில் ரூ .27,229.23 ஆக இருந்தது. இது உ.பியின் தனிநபர் வருமானமான ரூ. 44,618.28 விட மிகவும் குறைவாகும். அதே ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ. 94,566 மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது. தற்போதைய விலையி, குஷிநகரின் தனிநபர் டி.டி.பி. மதிப்பு ரூ. 41,250 ஆக.15 உள்ளது. இது உ.பியின் ஜி.எஸ்.டி.பி (ரூ. 65,704.28) மற்றும் தேசிய ஜி.டி.பியை (ரூ .1,34,186) குறைவாக உள்ளது. தனிநபர் டி.டி.பி என்ற ரீதியில் உ.பியில் உள்ள 75 மாவட்டங்களின் பட்டியலில் குஷிநகர் 61வது இடத்தில் உள்ளது.

விவசாயம், வனம் மற்றும் மீன்வளத்துறை மூலமாக குஷிநகரின் டி.டி.பி.க்கு 36.17% பங்களிப்பு செய்கிறது. அதே நேரத்தில் உற்பத்தி துறையின் பங்களிப்பு வெறும் 4.85% மட்டுமே உள்ளது. மாவட்டத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகித பங்களிப்பை மூன்றாம் துறை (சேவைகள்) அளித்தது.

publive-image

காங்கிரஸ் - பாஜகவின் போர்க்களம்

கிழக்கு உ.பியில் உள்ள கோரக்பூர் பிரிவில் குஷிநகர் அமைந்துள்ளது. இதன் தலைநகர் பத்ரௌனா. முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்த போது 1994ம் ஆண்டு, இந்த மாவட்டம் தனியாக பிரிக்கும் வரை தியோரியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. குஷிநகரில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. முறையே கட்டா, பத்ரௌனா, குஷிநகர், ஹாடா மற்றும் ராம்கோலா ஆகிய தொகுதிகள் குஷிநகர் நாடாளமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. தம்குஹி ராஜ், ஃபாசில்நகர் தொகுதிகள் தியோரியா நாடாளுமன்ற தொகுதியின் கீழ் இருக்கிறது.

இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை தன்னுடைய கையில் வைத்துள்ளது பாஜக. காங்கிரஸ் மற்றும் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்வாமி ப்ரசாத் மௌரியா தொழிலாளார்கள், வேலை வாய்ப்பு துறையின் அமைச்சராக யோகியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் பத்ரௌனா சட்டமன்றத்தின் பிரதிநிதியாக உள்ளார். இவர் மட்டுமின்றி இன்னும் சில வலுவான தலைவர்கள் குஷிநகரின் இந்த பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். உ.பி. காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான அஜய் குமார் லல்லு தம்குஹி ராஜ் தொகுதியின் பிரதிநிதி ஆவார்.

குஷிநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக பாஜகவின் விஜய் குமார் துபே உள்ளார். 2014ம் ஆண்டு காங்கிரஸை வீழ்த்தி ராஜேஷ் பாண்டே இந்த தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக , குஷிநகர் மக்களவைத் தொகுதி பத்ரவுனா என்று அழைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment