scorecardresearch

ஆன்லைன் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தின் மையமாக இருக்கும், GitHub என்பது என்ன?

GitHub என்பது உலகின் மிகப்பெரிய ஓப்பன் சோர்ஸ் டெவலப்பர் சமூக தளமாகும், இதில் பயனர்கள் தங்கள் திட்டங்களையும் குறியீட்டையும் பதிவேற்றி மற்றவர்கள் பார்க்க, திருத்த மற்றும் மாற்றங்களைச் செய்யலாம்

Shruti Dhapola

Explained: What is GitHub, at the centre of online sexual harassment probe?: திறந்த நிலை மென்பொருள் களஞ்சிய சேவையான GitHub இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஒரு தவறான பெயரிடப்பட்ட செயலியை உருவாக்கி பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்தச் செயலி, முஸ்லிம் பெண்களின் சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து திருடப்பட்ட பெண்களின் படங்களைப் பயன்படுத்தி, அவர்களை ஏலம் எடுக்க “பயனர்களை” அழைத்தது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், GitHub அந்த செயலியை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளார், மேலும் இணைய பாதுகாப்பு சம்பவங்களைக் கண்காணிப்பதற்கான நோடல் ஏஜென்சியான இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு அமைப்பை (Cert-In) இந்த விசாரணைக்கான “உயர்மட்டக் குழுவை” அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட சில பெண்களின் புகார்களின் பேரில் டெல்லி மற்றும் மும்பை போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

ஜூன் 2021 இல், GitHub இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட இதே போன்ற பெயரைக் கொண்ட மற்றொரு செயலியும் இதேபோல் முஸ்லிம் பெண்களைத் துன்புறுத்த பயன்படுத்தப்பட்டது. டெல்லி மற்றும் நொய்டாவில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர், ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. GitHub ஒத்துழைக்கவில்லை என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

GitHub என்றால் என்ன?

GitHub என்பது உலகின் மிகப்பெரிய ஓப்பன் சோர்ஸ் டெவலப்பர் சமூக தளமாகும், இதில் பயனர்கள் தங்கள் திட்டங்களையும் குறியீட்டையும் பதிவேற்றி மற்றவர்கள் பார்க்க, திருத்த மற்றும் மாற்றங்களைச் செய்யலாம். GitHub இன் யோசனை இதுதான்: எந்தவொரு டெவலப்பரும் பிளாட்ஃபார்மில் தங்களுக்கு உள்ள மென்பொருள் குறியீடு அல்லது பயன்பாட்டுக் குறியீடு அல்லது மென்பொருள் யோசனையைப் பதிவேற்றலாம், மேலும் மற்றவர்களின் ஒத்துழைப்போடு அதை மேம்படுத்தவும், பிழைகளைக் கண்டறியவும், சிக்கல்களைச் சரிசெய்யவும் செய்யலாம்.

எந்தவொரு பொதுத் திட்டத்தையும் தளத்தில் மற்றவர்கள் பார்க்கலாம். தளத்தின் பெரும்பாலான அம்சங்கள் பயனர்களுக்கு இலவசம். நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் மற்றும் ஒத்துழைப்புக்கான திட்டங்களைப் பதிவேற்ற, கட்டணக் கணக்குகளையும் பயன்படுத்தலாம்.

திறந்த நிலை இயங்குதளமான லினக்ஸின் டெவலப்பரான லினஸ் ட்ரோவால்ட்ஸால் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Git மென்பொருளை, கோப்புகளின் தொகுப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும், மென்பொருள் உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பிற்காகவும் இயங்குதளம் பயன்படுத்துகிறது.

புகார்களில் கூறப்பட்டுள்ளது என்ன?

GitHub சம்பந்தப்பட்ட செயலியை அகற்றியுள்ளது, ஆனால் அதற்கு யார் காரணம் என்பதை வெளியிடவில்லை.

“GitHub, துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கம் மற்றும் நடத்தைக்கு எதிரான கொள்கைகளை நீண்டகாலமாகக் கொண்டுள்ளது. அத்தகைய செயல்பாடு குறித்த அறிக்கைகளின் விசாரணையைத் தொடர்ந்து நாங்கள் ஒரு பயனர் கணக்கை இடைநிறுத்தினோம், இவை அனைத்தும் எங்கள் கொள்கைகளை மீறுகின்றன, ”என்று GitHub ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

GitHub இல் என்னவெல்லாம் அனுமதிக்கப்படவில்லை?

GitHub இன் கொள்கைகள், பதிவேற்றப்படும் உள்ளடக்கம் எல்லா நேரங்களிலும் மரியாதை மற்றும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. மேலும், “மற்றவர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது நிஜ உலக வன்முறை அல்லது பயங்கரவாதத்தின் செயல்களை ஒழுங்கமைக்க, ஊக்குவிக்க அல்லது தூண்டுவதற்கு தளத்தைப் பயன்படுத்துதல்” அனுமதிக்கப்படாது என்றும் கொள்கைகள் கூறுகின்றன.

“வயது, உடல் அளவு, ஊனம், ஜாதி, பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடு, அனுபவத்தின் நிலை, தேசியம், தனிப்பட்ட தோற்றம், இனம், மதம் அல்லது பாலின அடையாளம் மற்றும் நோக்குநிலை” போன்ற தலைப்புகள் தடைசெய்யப்படவில்லை. ஆனால் ஒரு நபர் அல்லது நபர்களின் குழுவை அவர்களின் அடையாளத்தின் அடிப்படையில் அல்லது இந்த தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தாக்கும் பேச்சு அனுமதிக்கப்படாது.

“கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாது” மற்றும் “ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது மக்கள் குழுவை இலக்காகக் கொண்ட எந்தவொரு பழக்கவழக்கமான பேட்ஜரிங் அல்லது மிரட்டல்களையும்” ஏற்றுக் கொள்ள முடியாது என்று தளத்தின் கொள்கைகள் கூறுகிறது. இருப்பினும், தற்போதைய வழக்கில், இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் ஆறு மாத இடைவெளியில் இரண்டு முறை குறிவைக்கப்பட்டுள்ளனர், இது மிகவும் ஒத்த பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறது. இரண்டு பயன்பாடுகளாலும் தாங்கள் குறிவைக்கப்பட்டதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.

GitHub, doxxing எனும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துதல் மற்றும் தனியுரிமையின் மீதான தாக்குதலை அனுமதிக்காது என்றும் கூறுகிறது. “அனைத்து நிர்வாணம் அல்லது பாலியல் தொடர்பான அனைத்து குறியீடுகளும் உள்ளடக்கமும் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று அர்த்தம் இல்லை என்றாலும் கூட, பாலியல் ஆபாசமான மற்றும் ஆபாச உள்ளடக்கம் தளத்தில் அனுமதிக்கப்படாது என்று கொள்கைகள் கூறுகிறது.

பிளாட்ஃபார்மில் தேவையில்லாமல் வன்முறை உள்ளடக்கம், தவறான தகவல் அல்லது போலிச் செய்திகள், செயலில் உள்ள தீம்பொருள் அல்லது சுரண்டல்கள் ஆகியவற்றை பதிவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒரு கணக்கை எப்போது இடைநிறுத்தலாம் அல்லது அகற்றலாம்?

ஒரு பயனர் தளத்தின் விதிகளை மீறுவதாகப் புகாரளிக்கப்பட்டால், GitHub அவர்களின் உள்ளடக்கத்தை அகற்றலாம் அல்லது தடுக்கலாம் மற்றும் கணக்கை இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம். ஆனால் இடைநீக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கொள்கைப் பக்கத்தில், “ஒவ்வொரு முறைகேடு அறிக்கையையும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்வோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உள்ளடக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உண்மைகளை ஆராய்ந்து, இந்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, எங்கள் முடிவை வழிநடத்த பல்வேறு குழுவை நாங்கள் அமைப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

GitHub இன் யோசனையின் அடிப்படையில், ஒரு மின்னஞ்சல் ஐடியை வழங்கிய பிறகு யார் வேண்டுமானாலும் கணக்கைத் திறந்து குறியீட்டைப் பதிவேற்றலாம். ஒரு கணக்கு தடுக்கப்பட்டாலும் அல்லது நிறுத்தப்பட்டாலும் கூட, மற்றொரு மின்னஞ்சல் ஐடி மூலம் புதிய ஒன்றை உருவாக்கலாம். மேலும் புண்படுத்தும் மென்பொருள் குறியீடு அல்லது பயன்பாடுகள் சற்று வித்தியாசமான பெயரில் மீண்டும் பதிவேற்றப்படலாம். இந்தியாவில் முஸ்லீம் பெண்களை துன்புறுத்திய இரண்டு நிகழ்வுகளிலும் இதுதான் நடந்ததாகத் தெரிகிறது.

முந்தைய வழக்கில் “பயனர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள்” பற்றிய விவரங்களை GitHub இன்னும் புலனாய்வாளர்களுக்கு வழங்கவில்லை என்று டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். “நாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பினோம். பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு GitHub அதிகாரிகள் எங்களிடம் கேட்டுக் கொண்டனர்… நாங்கள் மீண்டும் ஒரு கோரிக்கையை அனுப்பினோம், அவர்கள் அதை அவர்களின் சட்டப் பிரிவுக்கு அனுப்பியுள்ளதாவும், சில ஆவணங்கள் காணாமல் போனதால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள். அவர்களின் (நிறுவனத்தின்) தரப்பிலிருந்து விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் உள்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

(கூடுதல் தகவல்கள் – ஜிக்னாசா சின்ஹா)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Github india controversy