உலக அளவில் CO2 உமிழ்வை அதிகரிக்கும் கார்கள், பேருந்து போக்குவரத்து… மாற்று வழி என்ன?

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்களை கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள் இந்த முடிவை எடுப்பதில் இருந்து விலகிக் கொண்டன.

global emission of CO2, climate change, climate news, explained

Global emissions of CO2: 6 பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் 31 நாடுகள், 2040ம் ஆண்டு இறுதிக்குள் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் விற்பனையை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளனர். இது முன்பு எடுத்த உறுதிமொழியைக் காட்டிலும் 5 ஆண்டுகளுக்கு முன்பே சந்தைகளில் இருந்து அவர்களின் கார்களின் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபோர்ட், ஜெனரல் மோட்டர்ஸ் மற்றும் ஜெர்மனியின் மெர்சடஸ் பென்ஸ், ஸ்வீடனின் வோல்வோ போன்ற உற்பத்தி நிறுவனங்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர். ஆனால் ஜப்பானின் டொயோட்டா, ஜெர்மனியின் வோக்ஸ்வாகன் மற்றும் ஃப்ரான்ஸ் – ஜப்பானின் கூட்டு தயாரிப்பான நிசான் ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் இந்த உறுதி மொழியை ஏற்கவில்லை.

global emission of CO2, climate change, climate news, explained

இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள் 2019ம் ஆண்டு உலகளாவிய விற்பனையில் கால் பங்கைக் கொண்டிருந்தன என்று கூறுகிறது தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி.

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்களை கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள் இந்த முடிவை எடுப்பதில் இருந்து விலகிக் கொண்டன. ஆனால் உலகின் நான்காவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உள்ள இந்தியா, இங்கிலாந்து, கனடா, நார்வே, போலாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளுடன் இணைந்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது.

இந்த உறுதிமொழி சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், ஆனால் நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் அறிவிப்பு கிளாஸ்கோவில் உள்ளக எரிப்பு இயந்திரம் வெளியேறி வருகிறது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகக் காணப்பட்டது, மேலும் பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனங்கள் உலகம் முழுவதும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

global emission of CO2, climate change, climate news, explained

நம்பகமான மதிப்பீடு பரவலாகக் கிடைக்கும் சமீபத்திய ஆண்டான 2018ம் ஆண்டின் நிலவரப்படி, உலக அளவில் போக்குவரத்து மூலம் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வின் மூன்று பகுதி பயணிகள் வாகனங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துகளால் ஏற்படுகிறது. பயணிகள் போக்குவரத்து என்று வரும் போது கார்கள் மற்றும் பேருந்துகள் சாலை போக்குவரத்து உமிழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன. போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வில் பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் 45.1% கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு நடைபெறுகிறது.

மொத்தப் போக்குவரத்துத் துறையும் மொத்த CO2 உமிழ்வில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் சற்று அதிகமாகவும், சாலைப் போக்குவரத்து முக்கால்வாசி போக்குவரத்து உமிழ்வுக்கு காரணமாகவும் உள்ளது. உலகளாவிய கார்பன் – டை – ஆக்ஸைடு உமிழ்வில் 15% உமிழ்வு சாலை போக்குவரத்து மூலம் ஏற்படுகிறது.

பை விளக்கப்படம் காட்டுவது போல, உலகளாவிய போக்குவரத்து உமிழ்வுகளில் விமானம் மற்றும் கப்பல் ஆகியவை ஒப்பீட்டளவில் சிறிய பங்களிப்பை அளித்தன – முறையே 11.6% மற்றும் 10.6%. ரயில் பயணத்தின் பங்களிப்பு மிகக் குறைவு.

— The NYT & Our World In Data

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Global emissions of co2 from transport cars buses account for largest share airlines a tenth

Next Story
ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?Chennai Today Weather NEM latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com