உணவுப் பொருட்களை வீண் செய்வதால் இத்தனை இழப்புகளா?

காய்கறிகளும் பழங்களும் 41% வரை வீண் செய்யப்படுகிறது - உணவு மற்றும் விவசாயத்திற்கான ஐ.நா. அங்கம்

காய்கறிகளும் பழங்களும் 41% வரை வீண் செய்யப்படுகிறது - உணவு மற்றும் விவசாயத்திற்கான ஐ.நா. அங்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
global food wastage costing global economy 940 billion dollars

global food wastage costing global economy 940 billion dollars

Global food wastage costing global economy 940 billion dollars : வேர்ல்ட் ரீசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் (World Resources Institute) ராக்ஃபெல்லர் ஃபவுண்டேசன் (Rockefeller Foundation) என்ற அமைப்புடன் இணைந்து உலக அளவில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது என்று அந்த ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் நமக்கு ஏற்படும் இழப்பானது 940 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Global food wastage costing global economy 940 billion dollars

Advertisment

இந்த உணவுகளால் வெளியாகும் பசுமையக வாயுக்களின் அளவு, உலக அளவில் வெளியிடப்படும், பூமியை வெப்பப்படுத்தும் பசுமையக வாயுக்களில் 8%-பங்கினைப் பெறுகிறது. இதனால் உணவுப் பொருட்களை வீண் செய்யாமல் பயன்படுத்துவது முக்கியமானது என்று எச்சரிக்கை செய்துள்ளது இந்த அறிக்கை. உலக நாடுகள், அரசியல் தலைவர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று க்ளோபல் ஆக்சன் அஜெண்டா அறிவித்துள்ளது.

global food wastage costing global economy 940 billion dollars

உலக நாடுகள் உணவு கொள்முதல் மற்றும் வீண் செய்தல் குறித்த முறையான அறிக்கை தயாரித்தல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதனை தடுக்கும் வழிமுறைகளை கண்டறிதல், விநியோகர்களுக்கான தொடர் சங்கலியை உருவாக்குதல், மிகச் சிறிய நிறுவனங்களின் இழப்பீடுகளை சரி செய்தல், மற்றும் நுகர்வோர்கள் தரப்பில் ஏற்படும் இழப்பீடுகளை குறைத்தல் ஆகியவற்றை படிப்படியாக செயல்முறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

குறைந்த வருவாய் பெரும் நாடுகளில் உணவுப் பொருட்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் வீணடிக்கப்படுகிறது. அதிக வருவாய் பெரும் நாடுகளில் அதிக அளவு உணவுகள் சாப்பிடப்படாமல் வீணடிக்கப்படுகிறது என்று பல்வேறு ஆராய்ச்சி அறிக்கைகள் நமக்கு தகவல் தருகின்றன.

உணவு மற்றும் விவசாயத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, வேரில் இருந்து உருவாகும் உணவுகள் மற்றும் கிழங்குகள் தான் உலக அளவில் அதிகமாக (62%) வீணடிக்கப்படுகிறது என்றும், அதனைத் தொடர்ந்து காய்கறிகளும் பழங்களும் 41% வரை வீண் செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எடைக் கணக்கில் பார்க்கும் போது உலக அளவில் காய்கறிகளும் பழங்களும் தான் அதிக அளவில் வீணாக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை அறிவித்துள்ளது.

Food Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: