மகாராஷ்ட்ரா மாநிலத்தின் விதர்பா பகுதியில்தான் முதன் முதலில் டெல்டா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் உலகில் பரவலாக காணப்படும் SARS-CoV-2 மாறுபாடாக உள்ளது. கடந்த சில வாரங்களில் பல நாடுகளில் நோய் தொற்று அதிகரிக்க இந்த வைரஸ் முக்கிய பங்கு வகுக்கிறது.
கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) டெல்டா மாறுபாட்டின் அதிகரிப்பு அனைத்து பிராந்தியங்களிலும் காணப்படுவதாக எச்சரித்தது. டெல்டா வேரியண்ட்டின் அதிகமான பரவல் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதோடு சுகாதார அமைப்புகளில் அதிக அழுத்ததை ஏற்படுத்துகிறது. முக்கியமாக குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என WHO கூறியுள்ளது.
கோவிட் -19 இன் டெல்டா மற்றும் பிற மாறுபாடு
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, டெல்டா மாறுபாடு குறைந்தது 111 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. UK வில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா மாறுபாடு 178 நாடுகளிலிருந்து பரவியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மாறுபாடு இப்போது 123 நாடுகளில் பரவி உள்ளது. WHOவால் அடையாளம் காணப்பட்ட 4வது வகை காமா மாறுபாடு குறைந்தது 75 நாடுகளில் பரவி உள்ளது.
நான்கு வகை வைரஸ்களில் டெல்டா மாறுபாடு மிகவும் வேகமாக பரவுக்கூடியது. ஆல்பா மாறுபாட்டை விட சுமார் 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்த அசல் வைரஸை விட இரண்டு மடங்கு பரவக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஜூலை 2வது வாரத்தில் டெல்டா மாறுபாடு குறைந்தது 15 புதிய நாடுகளில் காணப்பட்டது.
டெல்டா பாதிப்பு எங்கு அதிகரிக்கிறது?
கொரோனா பரவல் அதிகரித்து வந்த இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30,000 முதல் 40,000 வரை பதிவானது. இருப்பினும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிரேசில், UK மற்றும் இந்தோனிசியா போன்ற நாடுகளில் இந்தியாவை விட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. லம்ப்டா மாறுபாடு அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அர்ஜென்டினா அல்லது கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளைத் தவிர, பெரும்பாலான இடங்களில் மீண்டும் டெல்டா மாறுபாடு அதிகரிக்கிறது.
உலக அளவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஜூன் கடைசி வாரத்தில் சுமார் மூன்று லட்சமாகக் குறைந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. Uk, இந்தோனேசியா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளும் இவற்றில் முக்கியமானவை. கடந்த சில நாட்களில் சரிவு காணப்பட்டாலும், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அமெரிக்காவில் கூட எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
பிரேசில், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் கடந்த மாதம் பாதிப்பு குறைவாக காணப்பட்டாலும், தற்போது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரேசிலில் தினசரி பாதிப்பு 40,000த்திற்கும் மேல் உள்ளது. கடந்த சில நாட்களாக Ukவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50,000 ஆக பதிவாகிறது. தாய்லாந்து மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் கூட ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலேயே இந்தோனேசியாவில் ஒரு நாளைக்கு 30,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் டெல்டா மாறுபாட்டை கண்டறிவது அதிகரித்து வருகிறது. இந்தோனேசியாவிலிருந்து 90 சதவீதத்திற்கும் அதிகமான வைரஸ் மாதிரிகள் ஜூன் நடுப்பகுதிக்குப் பிறகு மரபணு வரிசைப்படுத்துதலுக்காக அனுப்பப்பட்டவை டெல்டா வேரியண்ட்டாக மாறிவிட்டன.
அதிகரித்து வரும் பாதிப்பு
டெல்டா மாறுபாடு(B.1.617.2, ) உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இங்கிலாந்தில் ஏப்ரல் வரை 2 சதவீதம் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டது. ஜூலை மாதத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மரபணு வரிசைமுறைகள் டெல்டா மாறுபாட்டை கண்டறிந்துள்ளது. UKவில் இந்த எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது. எனினும் இது மேலும் அதிகரிக்கும்.
உலகளவில், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அனைத்து மரபணு வரிசைகளில் 9 சதவீதம் மட்டுமே டெல்டா மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது. ஜூலை மாதம், இது மீண்டும் 90 சதவீதத்திற்கும் அதிகமாகும். இந்தியாவில், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 40 சதவீத மரபணு வரிசைகளில் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் ஜூலை மாதத்தில் இது 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இன்று வரை அடையாளம் காணப்பட்ட மற்ற வேரியண்டுகளை விட டெல்டா மாறுபாடு அதிகம் பரவும் தன்மையுடையதாக உள்ளது. இனி வரும் நாட்களில் உலகளவில் அதிகம் பரவும் மாறுபாடாக மாற வாய்ப்புள்ளது என WHO தெரிவித்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து முக்கியமாக போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்ற நடவடிக்கையால் இந்த பரவல் இன்னும் அதிகமாகும். தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உயிரிழப்புகளும் அதிகரிக்க இது வழிவகுக்கும் என WHO எச்சரித்துள்ளது.
தடுப்பூசிகள்
இயற்கையாகவோ அல்லது தடுப்பூசி செலுத்தியோ நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ள நபர்களை இந்த வைரஸ் தாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை. தற்போதைய தடுப்பூசிகள் அனைத்தும் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.