Esha Roy
Global warming impacts Indian employments : 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 32 மில்லியன் வேலைகளுக்கு நிகரான இழப்பை உலக வெப்பமயமாக்கல் உருவாக்க உள்ளது. இந்த ரிப்போர்ட்டினை அறிவித்துள்ளது சர்வதேச ஊழியர்கள் அமைப்பு (International Labour Organisation). இந்த அறிவிப்பில், வெப்பத்தின் தாக்கத்தினால் உற்பத்தி மற்றும் வேலையில் பெரிய அளவிற்கு பாதிப்பினை உருவாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் 80 மில்லியனுக்கு நிகரான வேலைகள் பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது.
இது எப்படி சாத்தியமாகிறது?
மனிதனின் உடலானது எந்த அளவிற்கு வெப்பத்தை தாங்கி வேலை பார்க்கும் என்பதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது. 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை உயரும் போது ஆரோக்கியத்தில் பெரும் பிரச்சனை உருவாகிறது. உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் சராசரி வெப்பநிலையானது நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/global-warming-jobs.png)
2030ம் ஆண்டுவாக்கில், தற்போதைய சராசரி வேலை நேரத்தில் இருந்து 2.2% நேரம் வெப்பநிலை உயர்வால் இழக்க நேரிடும். இதற்கான மதிப்பு தான் 80 மில்லியன் வேலைகளுக்கு நிகரான இழப்புகள் என்று வரையறுக்கின்றோம். இதனால் 2400 பில்லியன் டாலர்கள் வரையில் இழப்பு உருவாகும். இந்தியாவில் ஏற்கனவே இந்த காரணங்களால் 1995ம் ஆண்டில் 4.3% வேலை நேரம் இழக்க நேரிட்டது. இது தொடருமானால் 2030ம் ஆண்டில் 34 மில்லியன் வேலைகளுக்கு நிகரான மதிப்புகளை இழக்க நேரிடும்.
இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
வேளாண்மைத் துறையில், உழைக்கும் நேரம் 9.04% ஆக குறையும். தயாரிப்பு நிறுவனங்களின் உழைக்கும் நேரம் 5.29% ஆக குறையும். கட்டுமான பணியில் 9.04%மும், சேவைகள் தொடர்பான வேலைகளில் 1.48% வேலை நேரமும் குறையும். கட்டுமான துறையும், வேளாண்மைதுறையும் இதனால் பெருமளவில் இதனால் பாதிப்பினை சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு (Sustainable Employment) மையத்தின் இயக்குநர் அமித் பசோல் இது குறித்து தெரிவிக்கையில், ஏற்கனவே விவசாயத்துறை போதுமான நீர் இல்லாத காரணத்தாலும், வெப்பமயமாதலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு மாறுதல்களை சந்தித்துள்ளன. பல்வேறு காரணங்களால் வறட்சியை சந்திக்கும் விவசாயிகள் நகர் புறங்களுக்கு கட்டிடத்தொழிலாளர்களாக குடியேறுகிறார்கள். வேலை இழக்கும் அபாயங்களில் அவர்கள் இல்லை. ஆனால் ஒரு பாதுகாப்பற்ற வேலையில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றம் மட்டுமே அடைகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.