உலக வெப்பமயமாதல் : கடல்வாழ் உயிரினங்களின் நிலை என்ன?

புவி வெப்பமடைதல் மீன்களின் ஏரோபிக் திறனை மட்டுப்படுத்தி, எதிர்காலத்தில் அவற்றின் உடலியல் செயல்திறனை பாதிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

global warming What will happen to fish as oceans warm

 Aswathi Pacha

Global warming : நாம் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தினாலும் 21வது நூற்றாண்டு முடியும் வரை தொடர்ந்து கடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இது குறைந்தது 2300-ம் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சி. அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது.

“1971 முதல் காணப்பட்ட கடல் வெப்பமயமாதலின் அளவு குறைந்த வெப்பமயமாதல் சூழ்நிலையில் குறைந்தபட்சம் 2100ம் ஆண்டில் இரடிப்படையும். அதிக வெப்பமயமாதல் சூழலில் அவை 4 முதல் 8 மடங்கு வரை அதிகரிக்ககூடும் என்றும், மனிதர்களின் செயல்கள் தான் உலக வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணம் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த வெப்பமயமாதல் அனாக்ஸிக் (கரைந்த ஆக்ஸிஜன் இல்லாத நீர்) மற்றும் ஹைபோக்சிக் (குறைந்த ஆக்ஸிஜன் செறிவு) மண்டலங்களை உருவாக்க உதவும். இந்த ஆக்ஸிஜன் குறைபாடுள்ள பகுதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

மீன்களின் வாழ்விடங்களில் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும்?

முந்தைய ஆய்வுகள் கடல்களை வெப்பமயமாதல் மூலம், அழுத்தம் அதிகரிக்கும், வரம்புகள் குறையும், நோய்கள் அதிகமாகும், உணவுக்கு பயன்படுத்தப்படும் மீன்களின் எண்ணிக்கை குறையும். கடந்த ஆண்டில் ஒரு ஆய்வு எதிர்கால கடல் வெப்பமயமாதல் மற்றும் அமிலமயமாக்கல் வணிக ஆர்க்டிக் காட் மீன்வளத்தை (Arctic cod fishery) 2100க்குள் முற்றிலுமாக குறைத்துவிடும்.

பல மீன் இனங்கள் தங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ற வெப்பநிலையை தேடி துருவப் பகுதி அல்லது ஆழ் கடலுக்குள் இடம் பெயருகின்றன என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெப்பமண்டல கடல் மண்டலங்களில் உள்ள திறந்த நீர் இனங்களின் எண்ணிக்கை 2010 வரையிலான 40 ஆண்டுகளில் சுமார் பாதியாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

திங்கள் கிழமை வெளியான புதிய ஆராய்ச்சி முடிவுகள், மத்தி, பில்கார்ட்ஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்கள் அளவு சிறியதாகி, சிறந்த சூழலுக்கு செல்ல முடியாது என்று கூறியுள்ளது.

ரீடிங்க் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளரும், ஆய்வின் இணை ஆசிரியருமான பேராசிரியர் கிறிஸ் வெண்டிட்டி, கடல் வெப்பநிலை முன்னெப்போதையும் விட வேகமாக உயரும்போது, ​​மீன்கள் பரிணாம வளர்ச்சியில் மிக விரைவாக பின்வாங்கி உயிர்வாழ போராடும். இது அனைத்து மீன்களுக்கும் நமது உணவுப் பாதுகாப்பிற்கும் கடுமையான சவால்களை உருவாக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நாம் உண்ணும் பல இனங்கள் பற்றாக்குறையாகவோ அல்லது வரவிருக்கும் காலங்களில் அவை இல்லாமலே போகும் சூழலும் ஏற்பட்டுவிடும் என்றும் கூறினார்.

நெத்திலி, அட்லாண்டிக் ஹெர்ரிங், ஜப்பானிய பில்கார்ட், பசிபிக் ஹெர்ரிங் மற்றும் தென் அமெரிக்க பில்கார்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய ரே வகை செதில்களைக் கொண்ட மீன்களும் இதன் தாக்கங்களைக் கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கிறார்கள்.

முந்தைய ஆய்வுகள் பல்வேறு மீன் இனங்கள் அளவு குறைந்து வருவதையும் குறிப்பிட்டன. மார்ச் மாதம், ஆராய்ச்சியாளர்கள் கடல்கள் வெப்பமயமாவதால் குட்டி சுறாக்கள் அளவில் சிறியவையாக பிறக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் சுறாக்களை 27, 29 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வளர்த்துள்ளனர். ஆனால் அதிக வெப்பம் கொண்ட நீரில் வளர்க்கப்பட்ட சுறாக்களின் எடை குறைவாகவும் வளர்சிதை மாற்ற செயல்திறன் குறைவாக இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

பிழைப்புக்கான போராட்டம் தொடரும்

286 வகையான மீன்களின் வளர்சிதை மாற்ற விகிதங்களைப் படிப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி மாதம் கூட பெரிய மீன்கள் உயிர்வாழ போராடும் என்று குறிப்பிட்டனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது, பல மீன் இனங்களின் ஆக்ஸிஜனுக்கான தேவை சுற்றுச்சூழலில் இருந்து ஆக்ஸிஜனை அவற்றின் கில்கள் மூலம் பிரித்தெடுக்கும் திறனை விட அதிகமாக இருக்கும் என்று எங்கள் தரவு தெரிவிக்கிறது” என்று அந்த ஆராய்ச்சி கட்டுரையின் முன்னணி எழுத்தாளர் ஜுவான் ரூபல்காபா ஒரு அறிக்கையில் விளக்குகிறார். இதன் விளைவாக, வெப்பமடையும் நீரில் மீன்களின் ஏரோபிக் திறன் குறைகிறது, மேலும் பெரிய மீன்களில் இந்த குறைவு மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்தார். புவி வெப்பமடைதல் மீன்களின் ஏரோபிக் திறனை மட்டுப்படுத்தி, எதிர்காலத்தில் அவற்றின் உடலியல் செயல்திறனை பாதிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

எந்த மீன் காலநிலை மாற்றத்தை தாங்கும் திறன் கொண்டிருக்கும்?

மே மாதம் மொலிகுலர் எக்காலஜி (Molecular Ecology) என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் த்ரீஸ்பைன் ஸ்டிக்கல்பேக் மீன்கள் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றியமைக்க முடியும் என்று குறிப்பிட்டது. இந்த குழு பருவகால மாற்றங்களுக்கு முன்னும் பின்னும் த்ரீஸ்பைன் ஸ்டிக்க்பேக் மீனின் மரபணுக்களை ஆய்வு செய்தது. இயற்கையான தேர்வின் மூலம் பரிணாமம் பற்றிய டார்வினின் யோசனையின் நவீன பதிப்பு, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை ஆதரிக்கும் மரபணுக்களைக் கொண்ட உயிரினங்கள் தங்கள் சகாக்களை விட அதிக சந்ததிகளை விட்டுச்செல்லும், இதனால் மரபணுக்கள் தலைமுறைகளின் ஃப்ரீக்வென்சி அதிகரிக்கும் என்று அந்த ஆராய்ச்சி கட்டுரையின் தலைமை எழுத்தாளார் ஆலன் கார்சியா எல்ஃபிரிங் அறிவித்துள்ளார்.

பருவகால மாற்றங்களால் உந்தப்பட்ட மரபணு மாற்றங்களுக்கான ஆதாரங்களை அவரது குழு கண்டறிந்தது. “கண்டுபிடிப்புகள் முக்கியமானவை, ஏனென்றால் எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு மக்கள் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதைக் கணிக்க ஒரு வழியாக கடந்த காலத்தில் உருவான மரபணு வேறுபாடுகளை நாம் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Global warming what will happen to fish as oceans warm

Next Story
காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்: பின்னணி என்ன?rahul gandhi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com