ஏர்டெல் - கூகுள் இணைந்து ஏர்டெல்லின் விரிவான சலுகைகளை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படும். இதன் புதுமையான மலிவுத் திட்டங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களை இயக்கும் நுகர்வோர்களை உள்ளடக்கியது. அமெரிக்க இணைய நிறுவனமான கூகுள், டெல்லியைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் உடன் இணைந்து 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதில் பார்தி ஏர்டெல்லில் 1.28 சதவீத பங்குகளுக்கு 700 மில்லியன் டாலர் பங்கு முதலீடும், பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு 300 மில்லியன் டாலர் வரை முதலீடும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூகுளின் முந்தைய முதலீடுகள் என்ன?
ஏர்டெல்லின் சமீபத்திய முதலீட்டைத் தவிர, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவிலும் கூகுள் 4.5 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளது. மேலும், கூகுள் அதன் ஆக்சிலரேட்டர் திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒரு டஜன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
ஏர்டெல் உடனான ஒப்பந்தம் என்ன?
கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஃபார் இந்தியா டிஜிட்டலைசேஷன் நிதியின் ஒரு பகுதியாக 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. இதில் பங்கு முதலீடு, வர்த்தக ஒப்பந்தங்களுக்கான மொத்த முதலீட்டு நிதியும் அடங்கும். இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய விதிமுறைகளில் அடையாளம் காணப்பட்டு ஒப்புக்கொள்ளப்படும். இது பார்தி ஏர்டெல்லின் 700 மில்லியன் டாலர் ஈக்விட்டி முதலீட்டில் ஒரு பங்கின் விலை ரூ. 734க்கு (வெள்ளிக்கிழமை அன்று பிஎஸ்இயில் ரூ. 718க்கு வர்த்தகம் தொடங்கியது) வர்த்தகம் தொடங்கியது. மேலும், 300 மில்லியன் டாலர் வரை வர்த்தக ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிக ஒப்பந்தங்களில் அடங்கியவை எவை?
ஒரு அறிக்கையின்படி, அதன் முதல் வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல், கூகுள் இணைந்து ஏர்டெல்லின் விரிவான சலுகைகளை உருவாக்க இணைந்து செயல்படும். இது புதுமையான மலிவுத் திட்டங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களை இயக்கும் நுகர்வோர்களை உள்ளடக்கியது. பல்வேறு சாதன உற்பத்தியாளர்களுடன் இணைந்து, பலவிதமான விலைப் புள்ளிகளில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதில் உள்ள தடைகளைக் குறைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை ஆராய இந்த நிறுவனங்கள் செயல்படும். கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ, குறைந்த விலையில் 4ஜி சாதனத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கூகுள் - ஏர்டெல் 5ஜியில் செயல்படுகிறதா?
ஏர்டெல் ஏற்கனவே கூகுளின் 5ஜி-ரெடி எவால்வ்டு பாக்கெட் கோர் & மென்பொருள் வரையறுக்கப்பட்ட நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துகிறது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்க கூகுளின் நெட்வொர்க் மெய்நிகராக்க தீர்வுகளை விரிவாக்கி ஆராய திட்டமிட்டுள்ளது.
கூட்டு நிறுவனங்களின் பெரிய உத்தி இலக்குகளின் கீழ், இரண்டு நிறுவனங்களும் 5ஜி, பிற தரநிலைகளுக்கான இந்திய-குறிப்பிட்ட நெட்வொர்க் டொமைன் பயன்பாட்டு முறைகளை அதிநவீன செயலாக்கங்களுடன் இணைந்து உருவாக்க ஏர்டெல், கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கவனம் செலுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிகையில், இந்தியாவில் கிளவுட் சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைத்து வளர்த்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.'
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.