Google maps eco friendly routes Tamil News : கூகுள் மேப்ஸ், பயணங்களை முன்னிலைப்படுத்தவும், ஓட்டுநர்களைப் பல காரணிகளின் அடிப்படையில் மிகவும் “சூழல் நட்புடன்” அளவீடு செய்யும் பாதைகளுக்கு வழிநடத்தவும் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து தரவு, நெரிசல் வரலாறு மற்றும் சாலை வளைவுகள் போன்ற காரணிகளை மதிப்பிடுவதன் மூலம் குறைந்த கார்பன் தடம் உருவாக்கக்கூடிய இயல்புநிலை பாதையின் கணக்கீடு செய்யப்படும்.
திட்டங்கள்:
ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் ஒரு வலைப்பதிவு இடுகையில், இந்த அம்சம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விரைவில் உலகளாவிய விரிவாக்கத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் பயன்பாட்டில் காண்பிக்கப்படும் இயல்புநிலை பாதை “சூழல் நட்பு”-ஆக மாறும். பயனர்கள் மாற்று வழியை எடுக்க விரும்பினால் இதைத் தவிர்க்க வேண்டும்.
மாற்று வழிகள் “கணிசமாக வேகமாக” இருக்கும்போது, மேப்பிங் பயன்பாடு விருப்பங்களை வழங்கும் என்றும், இயல்புநிலை மற்றும் மாற்று வழிகளில் மதிப்பிடப்பட்ட உமிழ்வுகளை ஒப்பிடப் பயனர்களை அனுமதிக்கும் என்றும் கூகுள் கூறியது. இந்தப் புதிய அம்சம், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதி என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான், ஒரு “உலகளாவிய விரிவாக்கத்திற்கான” திட்டங்களைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற குறிப்பிட்ட புவியியல்களில் வெளியீட்டுக் காலக்கெடுவைப் பற்றிய விவரங்களை வழங்கவில்லை.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ள “வானிலை மற்றும் காற்றின் தரத்திற்கான புதிய வரைபட அடுக்குகளை” கூகுள் உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அடுக்கை உலகளவில் அறிமுகப்படுத்தவும், முதலில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்காவில் காற்றின் தர அடுக்கை வெளியிடவும் கூகுள் திட்டமிட்டுள்ளது என்று தி வெர்ஜ் பத்திரிகையில் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
வர்த்தகம்:
கூகுள் தனது புதிய பாதைத் திட்டத்திற்காக, அமெரிக்காவில் பல்வேறு வகையான வாகனங்கள் மற்றும் சாலைகளில் சோதனை அடிப்படையில் உமிழ்வுத் தரவைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. பின்னர் பகுப்பாய்வு செய்யப்பட்ட பாதைகளில் சுமார் 50 சதவீதத்திற்கு, ஒரு ‘பசுமையான’ மாற்றீட்டை வழங்க முடிகிறது என்று முடிவு செய்தது. அதுவும் எந்தவொரு குறிப்பிடத்தக்கப் பரிமாற்றமும் இல்லாமல்.
அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் நுண்ணறிவுகளை விரிவுபடுத்தி, பல்வேறு வகையான கார்கள் மற்றும் சாலை வகைகளில் சோதனை அடிப்படையில் உமிழ்வு தரவைப் பயன்படுத்துவதாக கூகுள் கூறியது. அதன் தரவு, அதன் சொந்த ஸ்ட்ரீட் வியூ கார்களின் அம்சத்திலிருந்து சரிவுகள் மற்றும் வளைவுகள் போன்ற விவரங்களை வான்வழி மற்றும் செயற்கைக்கோள் படங்களுடன் இணைக்கிறது.
இதர வசதிகள்:
மேலும், ஜூன் 2021 முதல், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ளதைப் போலவே, சில வாகனங்கள் தடைசெய்யப்பட்ட குறைந்த உமிழ்வு மண்டலங்கள் வழியாகப் பயணிப்பதைப் பற்றி ஓட்டுநர்களை கூகுள் எச்சரிக்கத் தொடங்கும்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படவுள்ள மற்றொரு புதிய அம்சத்தில், கூகுள் மேப்ஸ் பயனர்கள் பயண விருப்பங்களை மதிப்பீடு செய்வதன் மூலம் கார், சைக்கிள், பொது போக்குவரத்து உள்ளிட்ட வெவ்வேறு முறைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறுவதற்கு பதிலாக, ஒரே இடத்தில் பயண விருப்பங்களை சரிபார்த்துத் தேர்வு செய்ய உதவும்.
மேலும், ஜகார்த்தா போன்ற ஆசிய நகரங்களை உள்ளடக்குவதற்கு இந்த அம்சங்களின் நோக்கம் படிப்படியாக விரிவாக்கப்படலாம் என்று அது சுட்டிக்காட்டியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil