மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் நீட் தேர்வு செப்டம்பர் 13 , ஜே இ இ மெயின் தேர்வு செப்டம்பர் 1 - 6, ஜே இ இ அட்வான்ஸ் செப்டம்பர் 27, ஆகிய தேதிகளுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று தெரிவித்தார்.
புதிய தேர்வு அட்டவணையை அரசாங்கம் எவ்வாறு முடிவு செய்தது?
ஜே இ இ மெயின், நீட் தேர்வுக்கான தேர்வு அட்டவணையை மாற்றியமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. தேசிய தேர்வு முகமையின் இயக்குனர் ஜெனரல் வினீத் ஜோஷி இந்த குழுவுக்கு தலைமை தாங்கினார். டெல்லி ஐ.ஐ.டி இயக்குனர் ராம்கோபால் ராவ், ஐ.ஐ.டி-ஜே.இ.இ தலைவர் சித்தார்த் பாண்டே, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராகேஷ் ரஞ்சன் ஆகியோர் அதன் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் நுழைவு தேர்வுக்கான தேதிகளை மத்திய அரசு தள்ளிவைத்தது.
கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் பல தேர்வு மையங்கள் வருவதால் தேர்வுகளை தள்ளிவைப்பது தவிர்க்க முடியாதது என்று குழு உணர்ந்தது. உதாரணமாக, ஜே. இ .இ தேர்வுக்கான 650 தேர்வு மையங்களில் சுமார் 40 மையங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளன. இந்த தேர்வு மையங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வெழுத திட்டமிடப்பட்டிருந்தன. எனவே, திட்டமிட்ட நாட்களில் (ஜூலை 18- 23 ) ஜே.இ.இ மெயின் தேர்வு நடத்தியிருந்தால் இந்த மாணவர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும்.
நுழைவுத் தேர்வை விரைவாகவும், பாதுகாப்புடனும் நடத்தி முடிக்க செப்டம்பர் மாதம் உகந்ததாக இருக்கும் என்று குழு உணர்ந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவத்தார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் நியமிக்கப்பட்ட சோதனை மையங்கள் கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஜே.இ.இ மெயின் தேர்வை ஆன்லைனில் நடத்தும் ஏஜென்சியை தேசிய தேர்வு முகமை அணுகியது. அவர்களின் பதில் திருப்தியளிக்கும் வகையில் அமைந்ததால், செபடம்பர் மாதத்தில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுக்கான புதிய தேர்வு அட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு குழு பரிந்துரைத்தது.

நீட், ஜே இ இ மெயின் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ?
தேசிய தேர்வு முகமை பொதுவாக ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகளை அறிவிக்க ஒரு வாரமும், நீட் தேர்வு முடிவுகளை அறிவிக்க ஒரு மாதமும் எடுத்துக் கொள்ளும். இருப்பினும், தேர்வு அட்டவணையில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11 க்குள் (ஐந்து நாட்கள் இடைவெளியில்) வெளியாகும் என்றும், முடிவுகளை ஐந்து நாட்களில், நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் முதல் வாரத்திற்குள் ( 20 நாட்கள் இடைவெளியில் ) வெளியாகும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜே இ இ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்?
தேர்வு முடிந்த எட்டு நாளில், அதாவது அக்டோபர் 5-க்குள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட ஐ.ஐ.டி முயற்சிக்கும். அக்டோபர் 7ம் தேதிக்குள் ஐ.ஐ.டி, என்.ஐ.டி உயரக்கல்வி நிருவனங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
நுழைவுத் தேர்வு தாமதமாவதால் புது கல்வி ஆண்டு எவ்வாறு பாதிக்கும்?
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறையை தீபாவளிக்குள் (அதாவது, நவம்பர் 14) முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் மட்டுமே தொடங்க முடியும். ஐ.ஐ.டி-ல் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தான் புதிய சேர்கை மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil